தமிழில் தனுஷ், சிம்புவுடன் நடித்த பிரபல நடிகை, தான் திருமணம் செய்ய இருக்கும் நபரின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். மயக்கம் என்ன படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரிச்சா நடித்திருந்தார். அதன்பின் சிம்பு ஜோடியாக ‘ஒஸ்தி’ படத்தில் நடித்தார். தமிழில் அதன் பிறகு சரியான வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார். சமீப காலமாக தெலுங்கிலும்...
காணிப் பிணக்குகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக 370 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபை தவிசாளர் இரட்ணசிங்கம் நவரட்ணம் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்ததாவது, வவுனியா மாவட்ட காணிப் பிணக்குகளுக்கு விரைவாகவும், சுமுகமாகவும் தீர்வு காணும் முகமாக  நீதி அமைச்சின் கீழ் மத்தியஸ்தர் சபை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையிடம் பிணக்குகளுக்கு தீர்வு காணுமாறு இதுவரை 370 முறைப்பாடுகள்...
காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத் தர அமெரிக்கா முன்வரவேண்டும் என வலியுறுத்தி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக 694 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினாலேயே இன்று இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முன்னதாக வவுனியா கந்தசாமி கோவிலுக்கு சென்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அங்கு வழிப்பாடுகளை...
அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதமடித்ததன் மூலம் இலங்கை அணியின் ஜாம்பவான் சங்ககாராவின் சாதனையை கோஹ்லி முறியடித்து சரித்திரம் படைத்துள்ளார். இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று அடிலெய்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டோனி மற்றும் கோஹ்லியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது. 123 பந்துக்கு 131 ஓட்டங்கள் குவித்த கோஹ்லி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். கோஹ்லிக்கு நேற்று அடித்த சதம் 63-வது சதமாகும்....
வர்த்தகர் ஒருவரை வாகனம் ஒன்றின் ஊடாக தெற்கு அதிவேக வீதியில் கடத்திச் சென்ற மூவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். குறித்த  சம்பவம் சினிமா பாணியில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காலி ஹாங்கம பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கடத்திச் செல்லும் போது பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் பயணித்த வாகனம் தமது பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். வர்த்தகரை எதற்காக கடத்தினார்கள் என்பது...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் எம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமையாக அமைந்திருந்தது என கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று அடிலெய்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஷான் மார்ஷின் அபாரமான சதத்தால் ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்தியாவில் கேப்டன் விராட்...
இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு பின்னர் உருவாகியுள்ள நிலைமை குறித்து  அமெரிக்காவும் இலங்கையும் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளன அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்;டுள்ள  நிதியமைச்சர் மங்களசமரவீர தலைமையிலான குழுவினர் அமெரி;க்காவின் தலைமை பிரதி உதவி இராஜாங்க செயலாளர்  அலைஸ் வெல்சையும் மில்லிலேனியம்  சலஞ்ச்  ஒத்துழைப்பின் பிரதம அதிகாரியையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர் அலைஸ் வெல்ஸ் மற்றும் இலங்கை;கான அமெரிக்க தூதுவர் ஆகியோருடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம் என  பொருளாதார சீர்திருத்த விவகாரங்களிற்கான...
ஆஸ்திரேலிய ஓபனின் ஆண்களுக்கான 2-வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான கெவின் ஆண்டர்சன் 1-3 எனத் தோல்வியடைந்து அதிர்ச்சி அளித்தார். ஆஸ்திரேலிய ஓபன் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 5-ம் நிலை வீரரான தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோ-வை எதிர்கொண்டார். முதல் செட்டை கெவின் ஆண்டர்சன் 6-4 எனக் கைப்பற்றினார். அதன்பின் பிரான்சிஸ் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிரான்சிஸ் வேகத்திற்கு ஆண்டர்சனால்...
இலங்கைக்கும் பிலிப்பைன்ஸிற்கும் இடையில் 6 உடன்படிக்கைகள் கைசாத்திடப்படவுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸ் விஜயத்தின் போது இருதரப்பு நட்புறவு புரிந்துணர்வு மற்றும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு இவ் ஆறு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வியத்தை மேற்கொண்டு பிலிப்பைன்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழு இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் , சுற்றுலாத்துறை ஆய்வு மற்றும் அபிவிருத்தி, கல்வி மற்றும் பயிற்சி சுற்றுலா மேம்பாட்டு வேலைத்திட்டம்,...
வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று காலை  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா - சைவப்பிரகாச கல்லூரி வீதியிலிருந்து சென்ற மோட்டார் சைக்கிள் புகையிரத நிலைய வீதிக்கு செல்ல முற்பட்ட சமயத்தில் புகையிரத நிலைய வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக...