இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதற்கு தயார் என தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்து பணிப்பாளர் கிறிஸ்டைன் லகர்டே பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் மங்களசமரவீர தலைமையிலான குழுவினர் சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பு குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்து பணிப்பாளர் கிறிஸ்டைன் லகர்டே அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித்...
கென்யாவில் கோட்டல் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலியாகி உள்ளனர்.
கென்யா நாட்டு தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள கோட்டலில் நேற்று மாலை பயங்கரவாதிகள் சிலர் அதிரடியாக புகுந்தனர். கோட்டல் வளாகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்ற அவர்கள், துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனால் பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இந்த தாக்குதலில் கோட்டல் வளாகத்தின் வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. பயங்கரவாதிகள் தாக்குதலை...
பசிபிக் பெருங்கடலில் உள்ள வானுட்டு தீவில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பசிபிக் பெருங்கடலில் உள்ள வானுட்டு தீவில் 6.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் 47 கிலோமீட்டர் (29 மைல்) ஆழத்தில் தாக்கியது. இது ஒரு மேலோட்டமான பூகம்பமாக அமைந்தது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல்...
நிலவின் மறுபக்கத்திற்கு சீனா அனுப்பிய விண்கலத்தில் இருந்த பருத்தி விதை முளைக்க தொடங்கியுள்ளது.
சீனாவின் விண்வெளி ஆய்வு நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன் சாங் இ-4 என்ற விண்கலம் அனுப்பி உள்ள நிலையில், அதன் மூலம் நிலவின் குளிர்நிலையை ஆய்வு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
நிலவின் பின் பகுதியை யாராலும் பார்க்க முடிவதில்லை. இது வரை பல்வேறு ஆராய்ச்சிகள் உலக நாடுகள் செய்து வந்தாலும் நிலவின் பின்பகுதியை ஆய்வு செய்வது...
விஜய் சேதுபதியின் தோற்றத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படக்குழுவினர்
Thinappuyal -
நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு சைரா நரசிம்ம ரெட்டி படக்குழுவினர் அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றை அளித்துள்ளனர்.
சிரஞ்சீவி நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் புதிய படம் ‘சைரா நரசிம்ம ரெட்டி’. ஏற்கனவே 150 படங்களில் நடித்துள்ள சிரஞ்சீவிக்கு இது 151-வது படம். சுதந்திர போராட்ட வீரர் உய்யாலவாட நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது.
இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில்...
தேங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் முகம் மற்றும் முடியின் அழகையும் நாம் பராமரிக்கலாம். இன்று தேங்காய் பாலை பயன்படுத்தி சரும அழகை பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேங்காய் பாலில் எண்ணற்ற மூல பொருட்களும், தாதுக்களும், வைட்டமின்களும் உடலின் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவும். தேங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் முகம் மற்றும் முடியின் அழகையும் நாம் பராமரிக்கலாம்.
வறண்ட சருமத்திற்கு
முகம் மிகவும் வறட்சியாக உள்ளதா..? பல வகையான வேதி...
சருமம், கூந்தல் பிரச்சனைகளுக்கு தயிர் நல்ல தீர்வை தருகிறது. இன்று தயிரை எந்த முறையில் பயன்படுத்தி சருமம், கூந்தல் பிரச்சனைகளை தீர்க்கலாம் என்று பார்க்கலாம்.
உங்கள் கூந்தல் வறட்சியானதாக இருந்தால் வாரத்திற்கு இரண்டு முறை தயிரை தலைமுடியில் தடவி மசாஜ் செய்து வந்தால் கூந்தலில் வறட்சி ஏற்படுவது குறையும்.
எலுமிச்சை சாறுடன் தயிர் கலந்து தலைமுடிக்கு பயன்படுத்தினால் கூந்தல் மென்மையாகவும், பட்டுப் போன்றும் மாறும். தயிரை முகம் மற்றும் உடம்பில் தடவி...
அதிக நேரம் தூங்குவதும், குறைந்த நேரம் தூங்குவதும் இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிக நேரம் தூங்குவதும், குறைந்த நேரம் தூங்குவதும் இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தினமும் இரவு ஆறு மணி முதல் எட்டு மணி வரை தூங்கவேண்டும். இல்லாவிட்டால் இதய நோய் பிரச்சினைகளும், பக்கவாத பாதிப்பும் ஏற்படும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 35 வயது முதல்...
சிரியாவில் கடும் குளிரால் போதிய மருத்துவ வசதி கிடைக்காமல்15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிரியாவில் கடந்த மாதத்திலிருந்து கடும் குளிர் நிலவி வருகின்றது.
இந்நிலையில் இது குறித்து மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவிற்கான யுனிசெப் பிராந்திய இயக்குநர் ஜியெர்ட் கேப்பாலியர் வெளியிட்டுள்ளஅறிவிப்பு படி, தற்போதைய சுழலில் சிரியாவில் குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறைந்தது 15 குழந்தைகள் இறந்திருக்கும் என்று கூறியுள்ளனர்.
மேலும் ஜோர்தானுக்கும் சிரியாவிற்கும் தென்மேற்கு எல்லை பகுதியில்தொடர்ந்து...
அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரரான டோனி, இளம் வீரர் கலில் அகமதை கெட்ட வார்த்தையில் திட்டிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது.
இதில் அவுஸ்திரேலியா அணி நிர்ணயித்த 299 ஓட்டங்களை இந்திய அணி அசால்ட்டாக எட்டிப்பிடித்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் கடந்த சில போட்டிகளில் சொதப்பி வந்த டோனி, தன்னுடைய விஸ்வரூப ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
https://twitter.com/premchoprafan/status/1085135731457224705
இந்நிலையில்...