முல்லைத்தீவில் பால் நிலையங்களில் இன்று மக்கள் நிரம்பியிருந்தமையைக் காணக்கூடியதாயிருந்து. நாளை தினம் தைப் பொங்கல் கொண்டாடப்படவுள்ள நிலையில், இவ்வாறு பால் நிலையங்களில் வழமைக்கு மாறாக மக்கள் நிரம்பிக் காணப்படுகின்றனர். இவ்வாறு பால் நிலையங்களுக்கு வந்தவர்களில் சிலர் பால் இல்லாது ஏமாற்றத்துடன் செல்வதையும் காணமுடிந்தது. மேலும் வியாபார நிலையங்களிலும் மக்கள் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்காக வழமைக்கு மாறாக நிறைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நைஜீரிய நாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கை வீசா வழங்குவதனை வரையறுப்பதற்கு குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. சுற்றுலா மற்றும் வர்த்தக வீசா அடிப்படையில் நாட்டுக்குள் பிரவேசிக்கும் நைஜீரிய பிரஜைகளுக்கு வீசா வழங்குவதனை நிறுத்திக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு கணனி குற்றச் செயல்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இலங்கைக்கு வருகை தரும் நைஜீரிய பிரஜைகளுக்காக இலங்கையர் எவரேனும் பிணை நிற்காவிட்டால்...
இந்த வருடத்தின் மிகப்பெரிய நிகழ்ச்சியாக இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள் விழா அமைய உள்ளது. இவரது 75வது பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாட நடிகர் சங்கம் முடிவெடுத்துள்ளதை ஏற்கனவே அறிந்திருப்போம். இந்நிலையில் இந்த விழாவில் விஜய் சேதுபதி, விஷால், கார்த்தி, ஆர்யா, ஜெயம் ரவி, ஜீவா, விஷ்ணு விஷால், அதர்வா முரளி, சந்தானம் மற்றும் நந்தா என மொத்தம் 10 நடிகர்கள் கலந்து கொள்ள உள்ளனராம். மேலும் பல முன்னணி நடிகர்களும் கலந்து...
தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷான இயக்குனர் என்றால் அது கௌதம் வாசுதேவ் மேனன் தான். இவரது இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் அடுத்தடுத்ததாக வெளிவர உள்ளன. இந்நிலையில் நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி கௌதம் மேனன் அடுத்ததாக விஷாலை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளாராம். விஷால் தற்போதைக்கு அயோக்யா என்ற படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இது முடிந்த பிறகு நான் சிவப்பு மனிதன், மிஸ்டர் சந்திரமௌலி...
மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் நாளைய தினம் பொங்கல் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் தினமான நாளைய தினம் காலை 6 மணியளவில் மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன்போது, விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும் என மன்னார் மறைமாவட்ட...
பைன் நட்ஸ் நார்ச்சத்துகள், ஆர்ஜினைன், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின்கள் போன்றவற்றை உள்ளடக்கியது இதை தினமும் ஒரு கைபிடி அளவு சாப்பிட்டாலே போதும் உடலில் உள்ள அத்தனை நோய்களையும் விரட்டியடிக்கும் வல்லமை படைத்தது. இதனை ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவு என்றே சொல்லலாம். இதை நொறுக்கு தீனி போல் சாப்பிட்டு வந்தாலே போதும் ஏராளமான உடல் நல நன்மைகளை தருகின்றது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம். பைன் நட்ஸ் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் ...
ஈரானிற்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்வதற்கான அனுமதியை வெள்ளை மாளிகை கடந்த வருடம் கோரியிருந்தது என அமெரிக்க செய்தித்தாள்  செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் ஈராக் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை இலக்கு வைத்து ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மேற்கொண்ட எறிகணை தாக்குதலை தொடர்ந்தே வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு சபை ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து பென்டகனை கோரியது என அமெரிக்க செய்தித்தாள்  தெரிவித்துள்ளது முன்னாள் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்...
சிரியாவில் குர்திஸ் போராளிகள் மீது தாக்குதல் நடத்தினால், பொருளாதார ரீதியில் துருக்கியை அழித்துவிடுவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள இரண்டு டுவிட்டர் பதிவுகளில் அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் குர்திஸ் போராளிகளுடன் இணைந்து அமெரிக்க துருப்புகள் சண்டையிட்டு வந்தன. எனினும், குர்திஸ் போராளிகளை பயங்கரவாதிகள் என சித்தரித்துள்ள துருக்கி, அமெரிக்கா அவர்களுக்கு உதவுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அத்தோடு,...
மேற்கு சூடானில் இடம்பெற்ற வீதி விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூடானின் தலைநகர் கர்த்தூமிலிருந்து சென்ற பயணிகள் பஸ் ஒன்று, வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதியதிலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் மேலும் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்விபத்து வடக்கு டார்பூர் மற்றும் மேற்கு கொர்டாஃபன்  மாநிலம் இடையே  உள்ள உம் கடதா எல்லையில் மேற்கு சால்வேஷன் வீதியில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, போக்குவரத்து நெரிசலில்...
இந்தியா, சிவகாசி மாவட்டத்தில் சுமார் ஒரு மாதத்துக்கு முன்னர் காணாமல் போன 17 வயதுடைய இளைஞனொருவன், எலும்புகூடாக கிடந்ததை பார்த்த பெற்றோர் கதறி அழுதுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞன், பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளான். இதனை அறிந்த குறித்த மாணவியின் பெற்றோர் இளைஞனை தாக்கியுள்ளனர். இந்நிலையில் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் குறித்த இளைஞன் காணாமல் போயுள்ளார். இதுகுறித்து பொலிசிலும் புகார் அளிக்கப்பட்டிருந்தது. பொலிஸாரின் தீவிர தேடல்...