போதைத் தடுப்பு  தொடர்பான ஜனாதிபதி செயலணியின் முன்னாயத்த கலந்துரையாடல் கூட்டம் ஒன்று இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்  மேலதிக அரசாங்க அதிபர் கோ.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி போதைப்பொருள் தடுப்பு செயலணியின் முதன்மை அதிகாரிகள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய பொலிஸ் அதிகாரி மஹிந்த குணரத்தின பிரதேச செயலாளர்கள் மற்றும் முப்படை அதிகாரிகள் வலயக்கல்வி திணைக்கள அதிகாரிகள் மாவட்ட செயலக அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
மட்டக்களப்பில் கிழக்கு மக்கள் ஒன்றியம் எனும் பெயரில் துண்டுப் பிரசுரம் மூலம் ஹர்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மட்டக்களப்பு நகரில் பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டிருந்ததுடன் அரச, தனியார் போக்குவரத்து சேவை வழமைபோன்று நடைபெற்றதனை காணமுடிந்தது. இதேவேளை மட்டக்களப்பு சந்தை, வைத்தியசாலைகள் வழமைபோன்று இயங்கியதுடன் மக்கள் மிகக் குறைவாகவே அவ்விடங்களில் காணப்பட்டனர். மற்றும் இங்குள்ள பாடசாலைக்கு ஒர்சில மாணவர்கள் மாத்திரம் சென்றதுடன் அவர்களும் பின்னர் வீடு திரும்பிவிட்டதனை காணமுடிந்தது. இன்றையதினம் காலை மூடப்பட்டிருந்த...
சுருக்கு வலை மற்றும் வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தல் ஆகியவற்றுக்கு தடைச் சட்டங்கள் ஒரு வருடத்திற்க்கு முன்னர் கொண்டுவந்தும் இதுவரை அதை நடைமுறை படுத்தவில்லையெனவும் தற்போதும் வடமாகாணத்தில் தடை செய்யப்பட்ட சுருக்குவலை, சிலிண்டர் தொழில், மின் பாய்ச்சி மீன்பிடித்தல் உட்பபட்ட சட்டவிரோத தொழில்கள் இடம்பெற்று வருவதாக வடமாகாண மீனவர் இணைய தலைவர் ஆலம் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு, மன்னார், பள்ளிமுனை பள்ளிக்குடா பூநகரி ஆகிய பகுதிகளில்...
நோர்வே நாட்டில் திருட சென்ற இடத்தில் திருடன் காருக்குள் மாட்டி கொண்டதால் பொலிசாரை அழைத்து உதவி கேட்ட சம்பவம் மிகவும் சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது. திருடர்கள் பற்றி பல சுவாரசிய கதைகள் நாம் கேட்டிருப்போம் அது போல் திரைபடங்களிலும் பல பார்த்திருப்போம். அது போன்ற ஒரு சுவாரசிய சம்பவம் தான் இது நோர்வே நாட்டில் ட்டோந்தலக் என்ற பகுதியை சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த...
வவுனியா பழைய பஸ் நிலையப் பகுதியில் வீசப்பட்டுள்ள குப்பைகளில் கோழிக்கழிவுகள் வீசப்பட்டு காணப்படுகின்றன. இதனால் அப் பகுதிகளில் துர்நாற்றம் வீசிவருவதாக வர்த்தக நிலையங்கள் தெரிவித்துள்ளன. இதனால் பஸ் நிலையப் பகுதியிலுள்ள வியாபார நிலையங்களில் துர்நாற்றம் வீதி வருவதுடன் பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதிக்கு வருபவர்களும் இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகிவருகின்றனர். நகரசபை ஊழியர்கள் குப்பை வீசுவதற்கு வாளிகளை வைத்துள்ளபோதிலும் அதனை மூடிவைப்பதில்லை என்றும் வர்த்தகர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கோதுமை ஆரோக்கியமான உணவு என்றாலும் அதனைக் காட்டிலும் அரிசி அதிக சத்துக்களை கொண்டதாகும். கோதுமை தற்போது விளைவிக்கப்படுகின்ற கோதுமை பெரும்பாலும் மரபணு மாற்றம் செய்யப்பட்டதாக இருப்பதால், அரிசி தான் இப்போதுள்ள கோதுமையை விட சிறந்த உணவு. ஏனெனில், மரபு மாற்றம் செய்யப்பட்ட கோதுமை பெரும்பாலும் க்ராஸ்பீராடாகத்தான் இருக்கிறது. இதில் அதிகளவு குளுட்டான், அக்லூட்டின் மற்றும் லெக்டின் ஆகியவை இருக்கும். இவை உடலுக்கு தீங்கு விளைவிப்பவையே என்பதால் கோதுமையை குறைத்து அரிசியை உட்கொள்ளலாம். செரிமானம் கோதுமையைக் காட்டிலும்...
சுற்றுலா நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கும் இடையிலான ஒரு போட்டிக் கொண்ட ரி 20 தொடர் இன்று 11ம் திகதி அக்லேண்ட் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறும். இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்திருக்கும் இலங்கை அணி, ரி 20 போட்டியின் மீதான கவனத்தை திருப்பியுள்ளது. இறுதியாக முடிவுக்கு வந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணியானது பந்துவீச்சின் தவறுகளை திருத்திக் கொண்டிருக்குமாயின் ஒரு வெற்றியினையாவது பெற்றிருக்க...
உலக பெரும் பணக்காரர் அமேசான் உரிமையாளர் ஜெப் பெசோஸ் மற்றும் மெக்கென்சி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த பில்கேட்சை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் (வயது 54). இவரது தற்போதைய சொத்து மதிப்பு 137 பில்லியன் டாலர் ஆகும். இவருடைய மனைவி மெக்கென்சி (48). இவர் நாவலாசிரியர் ஆவார். இவர்களுக்கு திருமணமாகி...
பிரதி அமைச்சர், அமைச்சரவை அந்தஸ்தற்ற இரு அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். குறித்த பதவியேற்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அதன்படி விசேட பிராந்திய  அபிவிருத்தி அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சராக  வீ. இராதாகிருஷ்ணன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சராக  அப்துல் மகரூப் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். தொழில் மற்றும் தொழிற்சங்க விவகார...