வெளிநாட்டில் கைதுசெய்யப்படும் ஆபத்தை எதிர்நோக்குகின்றார் சவேந்திர சில்வா- ஜஸ்மின் சூக்கா.
Thinappuyal -0
மிகமோசமான யுத்தகுற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள ஒருவரை இராணுவத்தின் பிரதானியாக நியமிப்பது என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் இலங்கையை மிகவும் கீழ்நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது என சர்வதே உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது
2009 ம் ஆண்டு மருத்துவமனைகள் , உணவினை பெறுவதற்காக வரிசையில் நின்றவர்கள் மற்றும் முகாம்கள் மீது வேண்டுமென்றே தாக்குதலை மேற்கொண்டு ஒருசில மாதங்களில் பலஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமான 58வது படைப்பிரிவின் கட்டளை தளபதி என்ற அடிப்படையில்...
மார்ச் மாதம் ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்னர் சர்வதேச தேவைகளை நிறைவேற்றவும் எமது இராணுவத்தை சர்வதேச கூண்டில் நிறுத்தவும் ஏதுவான சூழலை உருவாக்கவே இந்த அரசாங்கம் முயற்சித்து வருகின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் ஒரு மதக் குழுவின் கட்டுபாட்டுக்குள் உள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டமூலம் மற்றும் ஆளொருவரின் இறப்புக்கான சேதவீடுகளை அறவிடுதல்...
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒருபோதும் செயற்பட மாட்டார். சுதந்திர கட்சியின் கொள்கைகளை இன்று யார் பின்பற்றுகின்றார்கள் என்று இவர் கேள்வியெழுப்பியுள்ளார். முதலில் இவர் தனது தந்தையின் அரசியல் கொள்கையினை முறையாக பின்பற்ற வேண்டும். அதன் பின்னரே பிறர் தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இன்று ஸ்ரீ லங்காசுதந்திரக் கட்சி பல்வேறு நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. ...
இன்று ஆரம்பமாகியுள்ள 19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணியில் யாழ். மத்திய கல்லூரியைச் சேர்ந்த விஜயகாந்த், வியாஸ்காந்த் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நாணய சுழற்சியில் வெற்ற பெற்று முதலில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி சற்று முன்னர் வரை தனது முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 21 ஓட்டங்களை எடுத்துள்ளது.
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டதற்காக மன்னிப்புக் கோரியுள்ளார்.
பொலிவூட் சினிமா பட இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காபி வித் கரண்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது அவர்கள் இருவரம் பெண்கள் தொடர்பில் உரையாற்றுகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதுடன் பாலியல் தொடர்பாகவும் வெளிப்படையாக பேசினர்.
இதற்கு...
சட்டவிரோத அந்நியர்களினால் ரோனில் ரோன் சிங் சுட்டுக் கொல்லப்பட்டபோது அமெரிக்காவின் இதயம் நொறுங்கி விட்டதாக தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் டிரம்ப், நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக சட்டவிரோத அந் நியர்களை தடுத்து நிறுத்தியபோது உயிர் நீத்த ரோனில் ரோன் சிங்தான் அமெரிக்காவின் "தேசத்தின் கதாநாயகன்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நியூமன் நகரில் பொலிஸ் அதிகாரியாக பயணியாற்றிய இந்தய வம்சாவளியைச் சேர்ந்த ரோனில் ரோன் சிங் (வயது...
ஒருசில காரணங்களுக்காக அமெரிக்காவுடன் முன்னெடுக்கப்படவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தையை தலிபான் தீவிரவாதிகள் இரத்து செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக யுத்தம் மேற்கொண்டு வரும் அமெரிக்கா, அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க திட்டமிட்டனர்.
குறித்த பேச்சுவார்த்தைக்கு தலிபான் தீவிரவாதிகளும் சம்மதம் தெரிவித்தனர். தலிபானியர்களின் வேண்டுகோளுக்கிணங்க கட்டார் தலைநகர் தோகாவில் இடம்பெறவிருந்த இப் பேச்சுவார்த்தையானது இரு நாட்களாக நேற்று ஆரம்பமாகவிருந்தது.
இந் நிலையில் தலிபான்யர்கள், ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் இப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க்க...
வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக சகல அனுமதியுடனுமே மதுபான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது உதவி மதுவரி பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட மதுபான விற்பனை நிலையம் ஏற்கனவே இயங்கிக்கொண்டிருந்த மதுபான விற்பனை நிலையம் மீள புதுப்பிக்கப்பட்டு கிராம சேவையாளர் உட்பட அனைவரின் அனுமதியுடனும் நகரசபை பொது சுகாதாரப்பரிசோதகரின் பரிசோதனையின் பின்னரே திறந்துவைக்கப்பட்டுள்ளதாக வவுனியா உதவி மதுவரி பொறுப்பதிகாரி எஸ். அசோக திலகரட்ன தெரிவித்துள்ளார்.
வவுனியா புதிய...
வெளிநாட்டு சிகரெட்தொகை , மதுபானம் மற்றும் அழகு சாதனப்பொருட்களை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு எடுத்துவர முற்பட்ட போது சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை 6.00 மணியளவில் சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குடும்பத்திடமிருந்தே மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவர்களின் பயணப்பொதியை சோதனையிட்ட போது அதிலிருந்து தேசிய ஓளடத ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் உறுதிப்படுத்தல் அற்ற அழகுசாதனப்பொருட்கள் , மதுபான போத்தல்கள் 30 மற்றும் 25 சிகரெட் பெட்டிகள் என்பன...
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய பொதுச்செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (10) முற்பகல் தனது பணிகளை ஆரம்பித்தார்.
கொழும்பு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் மகா சங்கத்தினரின் பிரித் பாராயணத்துடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இன்று முற்பகல் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையகத்திற்கு சென்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் இந்த நிகழ்வில் பங்கேற்றதுடன், புதிய பொதுச்செயலாளரருக்கு தனது வாழ்த்துக்களையும்...