இரணைமடுகுளத்தினால் வெள்ளம் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதா, எனவும் அதன் முகாமைத்துவம் தொடர்பிலும் விசாரணை செய்ய புதிய விசாரணைக் குழுவை நியமித்துள்ளார் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன். இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்ததிற்கு பின்னரான சவால்கள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டத்தின் போதே அவர் இவ்வறித்தலை விடுத்துள்ளார் ஓய்வுப்பெற்ற வடக்கு கிழக்கு மாகாண அமைச்சின் ஒன்றின் செயலாளராக இருந்த பொறியியலாளர் இரகுநாதன், நியாப் திட்டத்தில் பணியாற்றி இந்திரசேன,...
திடீர் விபத்துக்களின் போது மூளைச் சாவடையும் நோயாளிகளின் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புக்களை வேறு நோயாளிகளுக்கு பொருத்துவதற்கான செயற்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. சுகாதாரம், போஷனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்கும் இலங்கை விமானப் படைக்குமிடையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் சுகாதாரம், போஷனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின்...
உல்லாச பயணிகள் அதிகளவில் செல்லும் மாவட்டமான நுவரெலியா மாவட்டத்தில் ரந்தெனிகல, ராகல, வலப்பன ஆகிய நகரங்களில் எரிப்பொருள் நிரப்பும் நிலையம் இல்லாததால் வாகான சாரதிகள் மிகவும் சிரமத்தை எதிர் நோக்குகின்றனர். வலப்பன, நீல் தன்டாஹினர ,தெரிபேகென,கல் கெட்டிவல, உடுமாதுர. ஆகிய கிராமங்களில் உள்ள பஸ்கள், பார ஊர்திகள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் என பளரும் எரிப்பொருள் பெறுவதற்காக ராகல நகரிற்கு செல்ல வேண்டியுள்ளது எனவே வலப்பன நகரில் குறித்த  மக்களுக்காக எரிப்பொருள்...
சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளில் கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிவரை நிரந்தரமாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டு மேன் முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ள கைதிகள் என 1299 பேர் இருக்கின்றனர் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் 1215 ஆண்களும் 84 பெண்களும் அடங்குகின்றனர். மேலும் மரணதண்டனை...
வட்டு. பிளவத்தை அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையில் கற்பிக்கும் இரு ஆசிரியைகளை இடமாற்றம் செய்யுங்கள் எனக் கோரிக்கை விடுத்து பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இன்று காலை 7.00 மணிமுதல் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது. தரம் 1 தொடக்கம் 5 வரை உள்ள இப்பாடசாலையில் மாணவர்களும் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயர் கல்வி அதிகாரிகள் வருகைதந்து உறுதிமொழி வழங்கும்...
புதிதாக நியமிக்கப்பட்ட வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அவர் இன்று (10-01-2019) வெள்ளிக்கிழமை காலை கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கிளிநொச்சி அரசாங்க அதிபர் பணிமனைக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநரை அரசாங்க அதிபர் உள்ளிட்ட பணிக்குழாமினர் வரவேற்றனர். நேற்று உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட ஆளுநர், கிளிநொச்சிக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பதோடு, இதன்போது கிளிநொச்சி மாவட்ட நிலைமைகள் தொடர்பிலும் அரச அதிகாரிகளுடன் ஆராய்ந்தார். இதில் முக்கியமாக கிளிநொச்சியில்...
உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டு உள்ள நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது. கடந்த 1974 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது ஏற்பட்ட அசம்பாவீதத்தால் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் 11 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.   அன்றைய தினம்...
முன்னாள் ஆளுநர்களான ரெஜினோல்ட் குரே,நிலுக்கா ஏக்கநாயக்காவிற்கு அரசகூட்டுத்தாபனங்களின்; தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளமைக்கு ஐக்கியதேசிய கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. முன்னாள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகாரசபையின் தலைவராக சிறிசேன நியமித்துள்ளார் முன்னாள் சப்ரஹமுவ மாகாண ஆளுநரான நிலுக்கா ஏக்கநாயக்கவை அரசமரக்கூட்டுத்தாபனத்தின் தலைவராக சிறிசேன நியமித்துள்ளார். ஜனாதிபதி சமீபத்தில்  அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்களாக நியமிக்கப்படுபவர்கள் பட்டப்படிப்பை பூர்த்தி செய்திருக்கவேண்டும் என அறிவுறுத்தல்...
தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார். வடமாகாண ஆளுநராக கடமையாற்றி வந்த ரெஜினோல்ட் குரே தற்போது தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வடமாகாண ஆளுநராக சுரேன் ராகவன் அண்மையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்கள் பேரவையின் தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை கண்டடைவது தொடர்பிலான உப குழுவின் அறிக்கையின் விபரம் வருமாறு. தமிழ் மக்கள் பேரவையானது அரசியல் தீர்வு ஒன்று தொடர்பில் மக்கள் மத்தியில் கலந்தாய்வு ஒன்றை நடத்துவதற்கு உதவும் வகையில் அரசியல் தீர்வு தொடர்பிலான முக்கிய வரையறைகளை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றைத் தருமாறு பணித்து 27 டிசம்பர் 2015 அன்று ஓர் உபகுழுவை நியமித்தது. பேரவையில் அங்கம் வகிக்கும் அரசியற் கட்சிகளின்...