13.12.2018இல்  வெளியாகியிருக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு 19வது திருத்தச் சட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் கூற முடியும். நீதிமன்றங்களின் சுயாதிபத்தியத்தை உறுதிசெய்வதில் 19வது திருத்தச் சட்டத்தின் வகிபாகம் முக்கியம். சுயாதீன ஆணைக்குழுக்கள் பல உருவாக்கப்பட்டதும் அந்த திருத்தச் சட்டத்தில் தான். சிவில் சேவைத்துறை ஊழலும், அரசியல்/அதிகாரத்துவ தலையீடும், பணத் தலையீடுகளும் நிறைந்து மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி அயோக்கியர்களால் சூறையாடப்பட்டுக்கொண்டிருப்பதை தடுப்பதகாகத் தான் சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதற்கான அவசியத்தை வலியுறுத்தி...
  பல இன மக்களைக் கொண்ட தேசமான இலங்கை அனைவருக்கும் சமத்துவத்தையும் சமமான வாய்ப்பையும் உறுதிப்படுத்தி இனங்களின் தனித்துவங்களை பேணி தேசிய பிரஜைகளைக் கொண்ட ஆட்சி முறையை கொண்டிருக்கவில்லை. மாறாக இனக் குழுப் பிரஜைகளைக் கொண்டதாகவும் இனக் குழுப் பிரஜைகள் என்ற அம்சத்தை கருத்தியல் ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் உறுதிப்படுத்தி இனங்களுக்கிடையே மோதல்களை பேணுவதாகவே இலங்கை பயணித்து வருகிறது. இப்போக்கிற்கு இலங்கையின் பின் காலனிய ஆட்சியில் காணப்பட்ட பிற்போக்குத் தனங்களே பிரதான...
-Dr: I.L. முஹம்மத் றிபாஸ் - இலங்கையின் இஸ்லாமிய சமுகம் வரலாறு நெடுகிலும் காலத்திற்கு காலம் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர் நோக்கியே வந்திருக்கிறது. இந்த பிரச்சினைகளின் வீரியமும் வடிவங்களும் மாறுபட்டவை. ஆயினும் இந்த பிரச்சினைகளை முஸ்லிம் சமுகம் கால வர்த்தமானங்களுக்கு ஏற்ப முகம் கொடுத்து சமாளித்தே வந்துள்ளது. இவ்வாறான பிரச்சினைகளின் மூல காரணங்களை கண்டறியும் முயற்சிகளோ அல்லது இவற்றிற்கான விஞ்ஞான பூர்வமான அறிவுடமையான ஆய்வுகளோ இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அத்தோடு இந்த பிரச்சினைகளுக்குரிய...
  இலங்கைவாழ் தமிழர் சமூகம் தற்போது திருப்புமுனையில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த அறுபது வருடத்திற்கும் மேலாக இச்சமுதாயத்தின் மேல் திணிக்கப்பட்டிருந்த இரட்டை வேட அரசியல் அதற்கான அதிக விலையைக் கொடுத்துள்ளது. ஒருபுறத்தில்  ‘தனிஈழம்’ எனவும், மறுபுறத்தில் ‘சமஷ்டி’ எனவும் ‘உள்ளக சுயநிர்ணய உரிமை’ எனவும் பல்வேறு முரண்பட்ட குழப்ப அரசியலை  மக்கள் மீது விதைத்து ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்ற பிரிவினர் தமிழ் மக்களின் சமூக வாழ்வை சீரழித்ததுடன் இறுதியில் அவர்களே ...
  இந்திய-இலங்கை உடன்பாடு தன்னிகரில்லாதது; இறையாண்மை மிக்க இரண்டு நாடுகள் பரஸ்பரம் செய்துகொண்ட சர்வதேச உடன்பாடு இது. தமிழின மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உள்நாட்டு அரசியல் அமைப்பு திருத்தியமைக்கப்படும் என்று ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு உறுதிமொழி அளித்த உடன்பாடு. இலங்கையின் ஒற்றுமை, இறையாண்மை, பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பெரிய லட்சியமாக மக்களிடையே பேசிப் பிரபலப்படுத்திய அதிபர் ஜெயவர்தனே, உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்கப் பக்கத்து நாட்டுக்கு வாக்குறுதி அளித்து உடன்படிக்கை...
  1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரமே இலங்கை வரலாற்றில் முதல் இனக்கலவரமாகும். இது பௌத்த-மொஹமதியன் கலவரம் அல்லது சிலோனீஸ் கலவரம் எனவும் அழைக்கப்படுகின்றது. 28 மே 1915ல் கண்டியில் தொடங்கிய கலவரம் அயலில் உள்ள கிராமங்களுக்கும் பரவி மே30-31ல் கொழுப்பு உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவியது. ஜூன்09 வரை கொழும்பு, சிலாபம் என பல இடங்களில் தொடர்ந்து. இந்த கலவரங்களில்117 பேர் வரை கொல்லப்பட்ருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இவர்களில் 63...
சர்வதேச கிரிக்கெட் சபை தனது 105 ஆவது உறுப்புரிமை நாடாக அமெரிக்க கிரிக்கெட் அணியை அங்கீகரித்துள்ளது. இதற்குரிய உத்தியோகபூர்வ ஏற்பாடுகள் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் சர்வதேச கிரிக்கெட் சபை 150 ஆவது உறுப்புரிமை நாடாக அமெரிக்காவை அங்கீகரித்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் சபைத் தலைவர் பராக் மராத்தே தெரிவிக்கையில், "இது உண்மையிலேயே ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட்டிற்கும் மற்றும் முழு...
2019 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரானது எதிர்வரும் மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பாகவுள்ள நிலையில் இத் தொடரின் அனைத்துப் போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 11 தொடர்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததுள்ளன. இந் நிலையில் 12 ஆவது ஐ.பி.எல். தொடரானது எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது....
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிக்கிடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந் நிலையில் இப் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணிக் குழாமை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அதன்படி தினேஷ் சந்திமால் தலைமையிலான இவ் அணியில் திமுத் கருணாரத்ன, லஹிரு திரிமன்ன, குசல் மெண்டீஸ், சதீர சமரவிக்ரம, தனஞ்ய டிசில்வா, நிரோஷன் திக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, சந்தகான், சுரங்க...
இலங்கையின் ஜனநாயகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றகரமான மாற்றங்கள், குறிப்பாக சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக நிறுவனங்களின் சுயாதீனத்துவ உறுதிப்பாடு என்பன தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தமது வரவேற்பை வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களும், ஐரோப்பிய ஒன்றிய இலங்கை நட்புறவுக்குழுவில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகளுமான ஜோப்ரே வன் ஓர்டென், வில்லியம் டார்ட்மௌத் ஆகியோர் கடந்த 2 தொடக்கம் 6ஆம் திகதி வரையிலான ஐந்து நாட்கள் விஜயம்...