ஜாலிய விக்கிரமசூரியவை கைதுசெய்யுமாறு  நீதிமன்றத்தால் மீண்டும் உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள்  இலங்கைக்கான தூவராக கடமையாற்றிய ஜாலிய விக்கிரம சூரியவை கைதுசெய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம்  மீண்டும்  பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது. வைத்திய சிகிச்சை பெற்றுக்கொள்ளவதற்காக அமெரிக்காவில் பல மாதங்கள் தங்கியிருந்த நிலையில் குறித்த கால எல்லைக்குள் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காமையால் நீதிமன்றம் மீண்டும் கைதுசெய்யுமாறு பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு இன்று (09) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு...
மூன்று உயர் நீதிமன்ற நீதியரசர்களும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவரும் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர். உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவரும் புதிதாக இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அதன்படி  மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பி.டீ.சூரசேன, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஈ.ஏ.ஜீ.ஆர்.அமரசேகர ஆகியோர் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக...
பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டு சிறப்பாக செயற்பட்டவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசையில் முதலாமிடத்தை ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பெற்றுக் கொண்டுள்ளதுடன், இரண்டாம் இடத்தை ஐக்கிய தேசியக் கட்சியின்  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் பெற்றுக்கொண்டுள்ளார். இந்தத் தகவலை  manthri.lk இணைய தளம் வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் பாராளுமன்ற அமர்வுகளையும் செயற்பாடுகளையும்  மையமாக வைத்து இந்த தரவு திரட்டப்பட்டுள்ளது.  பாராளுமன்ற அங்கத்தவர்கள் பத்து பேர் இதன் மூலம்...
வவுனியா நகரின் மத்தியில் நேற்றிரவு (08) தோண்டப்பட்ட குழியினால் அவ்விடத்தில் பதட்டநிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸார் மற்றும் நகரசபையினரால் குழி தோண்டும் நடவடிக்கை  நிறுத்தப்பட்டது. வவுனியா தர்மலிங்கம் வீதிக்கு அருகே நேற்றிரவு சில நபர்களால் எம்.ஜீ.ஆர் சிலை வைக்கும் நோக்கோடு அவ்விடத்தில் பாரிய குழியொன்று தோண்டப்பட்டது. இதனையடுத்து அவ்விடத்தில் ஒன்று கூடிய இளைஞர்களினால் குழி தோண்டும் நடவடிக்கை தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் இன்று (09) காலை அவ்விடத்தில் கூடிய...
பெண் ஒருவரின் மகளை நபர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த சம்பவமொன்று பதுளை ஹாலி-எல பகுதியில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சிறுமியின் தாய் கருத்து தெரிவிக்கையில், எனது இரத்த உறவு முறையிலான உறவினர் ஒருவரினால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகி  நான் கர்ப்பமடைந்தேன். எனக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தையின் பெயர் டிலானி. எனது குழந்தை எட்டு வயதையடைந்த போது, நான் மறுமணம் செய்துகொண்டேன். இந்நிலையில் எனது மகள் ஒன்பது வயதையடைந்த...
நாட்டின் வேறுபட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வெல்லம் பிட்டிய , முகத்துவாரம் மற்றும் தெவுவன   ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நபர்களே நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டிய - கொடிகாவத்தை மயானத்திற்கு அண்மையில் நேற்று மாலை 5.50 மணியளவில் மேல்மாகாண  ஊழல் தடுப்பு பிரிவினரால்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 10 கிராம்  120  மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன்  நபரொருவர் ...
அம்பாறை மாவட்டத்தின் பாணம மற்றும் பொத்துவில் ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு பிரதேசங்களில் கடலோர உயிர்காப்பு நிலையங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று இடம்பெற்றது. அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் மற்றும் பாணம கடலோர கரையோரப் பிரதேசங்களை நோக்கி இன்று அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதனால் அவர்களின் நலன் கருதியே கடலோர பிரதேசங்களில் பாதுகாப்பு நடவடிக்கையை பலப்படுத்தும்முகமாகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய பாணம ராகம்வெளி பீனட் பாம் மற்றும் பொத்துவில்...
அவுஸ்திரேலியாவிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களிற்கு சந்கேதத்திற்கிடமான பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளமை குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக  அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். மெல்பேர்ன் கான்பெராவில் உள்ள பல வெளிநாட்டு தூதரகங்களிற்கு இனந்தெரியாதவர்கள் மர்ம பொருட்களை அனுப்பியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா இந்தியா பிரான்ஸ் பாக்கிஸ்தான் உட்பட பல நாடுகளின் தூதரகங்களில் அவசரநிலை பணியாளர்கள் காணப்படும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன தூதரகத்திற்கு வந்த கடிதத்தை திறந்து பார்த்தவேளை அதற்குள் அஸ்பெஸ்டோஸ் போன்ற பொருட்கள் காணப்பட்டன என பாக்கிஸ்தான் தூதரக பணியாளர்...
யுத்தத்தினால் வடக்கு மகாணமும், அங்குள்ள மக்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் அவர்களின் தேவையறிந்தும், அவர்களின் மனதை வெல்லும் வகையிலும் திறம்பட பணியாற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வட மாகாணத்தின் புதிய ஆளுநரான சுரேன் ராகவனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியேபோதே அவர் இந்த ஆலோசனையை வட மாகாண புதிய ஆளுநருக்கு வழங்கியுள்ளார். அத்துடன் இந்த சந்திப்பானது திருப்பதிகரமாக அமைந்ததாகவும், இதன்போது வடக்கு...
மெக்சிகோவிலுள்ள களியாட்ட விடுதியில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மெக்சிக்கோவின் குவிண்டினா ரோ மாகாணத்தில் கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரமான பிளயா டெல் கார்மனிலுள்ள கேளிக்கை விடுதியொன்றில் குறித்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த களியாட்ட விடுதிக்கு வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடினர். இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...