வடகொரியத் தலைவர் கிம் யொங் அன் திடீர் பயணமாக சீனாவுக்கு சென்றுள்ளார். வடகொரியாவுக்கு நெருங்கிய மற்றும் முக்கிய நண்பராக சீனா மட்டுமே விளங்கி வருகிறது. தூதரக ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் சிறப்பான பங்களிப்பை வடகொரியாவுக்கு, சீனாவுக்கு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக வடகொரியா தலைவர் கிம் யொங் அன் சீனாவுக்கு சென்றார். ரயில் மார்க்கமாக ரகசிய பயணம் மேற்கொண்ட கிம் யொங் அன்,...
சர்வதேச நாணய நிதியத்தின் 11 ஆவது தலைமை பொருளாதார ஆலோசகராக இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். 189 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட சர்வதேச நாணய நிதியம், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகளாவிய நிதி ஒத்துழைப்பு, நிதி ஸ்திரத்தன்மை, சர்வதேச வர்த்தக வசதிகளை ஏற்படுத்தி தருதல் போன்றவை இதன் முக்கிய பணிகளாகும். இந்த அமைப்பின் 11 ஆவது தலைமை பொருளாதார ஆலோசகராக அமெரிக்காவில் வசிக்கும் 48 வயதுடைய இந்திய...
கினிகத்தேனை களுகல - லக்ஷபான பிரதான வீதியில், கினிகத்தேனை பொல்பிட்டிய பகுதியில்  கனரக வாகனம் ஒன்று குடைசாய்ந்துள்ளதால் அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மாற்று வீதியைப் பயன்படுத்துமாறும்  கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து பொல்பிட்டிய புரோட்லேன்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்திற்குப் பொருட்களை ஏற்றிச்சென்ற வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வீதியில் வளைவு பகுதியில் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாததன்...
இரத்தினபுரியில் தனது மனைவியின் கழுத்தை துண்டித்து அதனை பூஜை செய்து மறைத்து வைத்த கணவர் சிக்கினார். இச்சம்பவம், கடந்த மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. தனது தாயை கொலை செய்துள்ளதாக மகன் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மகன் வழங்கியுள்ள வாக்குமூலத்தில், தனது தந்தை சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் சில நேரம் அதிக கோபத்துடன் காணப்படுவதோடு, தனக்கு தெய்வ சக்தி உள்ளதாக அடிக்கடி...
மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட அசாத் சாலி தனது கடமைகளை இன்றைய தினம் பொறுப் பேற்றுக் கொண்டார்.  
வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட கலாநிதி சுரேன் ராகவன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் ஆசீர்வாதத்துடன் கடமைகளை பெறுப்பேற்றார்.
சாவகச்சேரி நகரில் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது. இக்கொள்ளைச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணிக்கும் 3 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட வர்த்தக நிலையத்தின் மேற்கூரையை பிரித்து  சி.சி.ரீவி கமெரா இணைப்புக்களை துண்டித்து விட்டு உள்நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணம் மற்றும் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகளையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். இதன்போது சுமார் ஏழு லட்சம் ரூபா பணம் மற்றும் மூன்று லட்சம்...
அரச ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் 2 ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபா வரை உயர்த்தப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்க ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை 2500 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாகவும் உயர் அதிகாரிகளின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாகவும் நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. அதன்படி அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து அதாவது ஜனவரி மாதம் முதல் 2500 முதல் 10,000 ரூபா வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த...
புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பிறந்த நாளை முன்னிட்டு போகாவத்தை தோட்டத்தில் 105 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 10ஆம் திகதியன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ், மாகாண சபை உறுப்பினர்கள் , பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும்...
வவுனியாவில் இராசபுரம் கனகராயன்குளம் பகுதியில் நேற்று கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் சோதனை நடவடிக்கையின்போதே நேற்றிரவு 11.30 மணியளவில் சட்டவிரோதமாக பதிவுகளின்றி கட்டுதுப்பாக்கி வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.