தற்போது காணப்படும் வறட்சியான வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஊவா மாகாணம், மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காலி மற்றும் மாத்தறை மத்திய, சப்ரகமுவ மற்றும் மேற்கு மற்றும் மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சபரகமுவ பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளில் காலை...
அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நீதிமன்ற வீதியில் நேற்று மாலை 5.45 மணியளவில் வேலைக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த நோர்வூட் பிரதேச சபையின் பிரதான உத்தியோகத்தர் ஒருவரின் கழுத்தை நெறித்து தங்கச்சங்கலியினை அபகரித்துச்சென்ற நபர் ஒருவரை பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து மடக்கிப்பிடித்துள்ளனர். குறித்த பெண் தனது கடமைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது பின்தொடர்ந்த நபர் அவரது தங்கச்சங்கிலியினை அபகரித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் கூச்சலிட அட்டன் டிக்கோயா...
பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடவுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் கடந்த வருடத்தில் ஏற்பட்ட மோதல் நிலைமை தொடர்பில் ஆராயும் குழு இன்று மீண்டும் கூடவுள்ளது. அதன்படி இந்தக் குழுவானது இன்று காலை 9.30 மணியளவில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடவுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்களால் தொடர்பில் விசாரணை செய்ய சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட குழுவினால், இடம்பெற்ற மோதல் சம்பவங்கள்...
கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீர் சுகவீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளச் சென்ற சிறுவன் ஒருவனுக்கு ஊசி மாற்றி ஏற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தை மூடி மறைக்க மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகம் கடும் முயற்சிகளை மேற்கொண்டதாக பாதீக்கப்பட்ட சிறுவனின் உறவினர் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை  காய்ச்சல் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கச் செனற்  சிறுவனுக்கு ஊசி ஏற்றபட்டது. இதன்போது...
வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருவேறு சந்தர்ப்பங்களில் மூன்று கிலோவுக்கும் அதிக நிறையுடைய கஞ்சாப் பொதிகளுடன் இருவர் நேற்றும கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை நீதவான் அவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவத்தின் போது, வவுனியா புதிய பஸ் தரிப்பிடத்திற்கருகிலிருந்து,  நேற்று பகல் 12.05 மணியளவில் கோரளைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஆணொருவர் கைதுசெய்யப்பட்டார். இதன்போது,...
குருநாகலை நாரமல மொரகனே பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கருகில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் பணிகளில் ஈடுபட்டிருந்த அறுவர் நாரமலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தின் போது கடுபொத, கடஹார மற்றும் கம்பஹாவைச் சேர்ந்த 25 -73 வயதுகளுக்கு இடைப்பட்ட ஆறு ஆண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாரமலை பொலிஸாரால் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சட்டவிரோதமான முறையில் எதுவித அனுமதி பத்திரமும் இன்றி புதையல் தோண்டும் பணிகளில் ஈடுபட்டிருந்த அறுவர் நேற்று  மாலை 2.50 மணியளவில் புதையல்...
இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்த பின்னாலும் கூட பலருக்கு அடித்துப் போட்டது போல் சோர்வும், முதுகு வலியும் இருப்பதற்குக் காரணம் என்ன? என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். நைட்டு நல்லாதான் தூங்கினேன், ஆனாலும் டயர்டாவே இருக்கு. முதுகு வேற வலிக்குது…” காலையில் அலுவலகத்தில் கம்யூட்டரை ஆன் செய்வதற்கு முன்பாக பக்கத்தில் இருப்பவர்களிடம் பெரும்பாலானோர் சொல்லும் வார்த்தைகள் இவை. இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்த பின்னாலும் கூட...
சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒரு பெரிய இடத்தை பிடித்திருக்கும் நடிகர். இவரது படங்கள் என்றாலே கண்டிப்பாக வசூல் இருக்கிறது என்ற நம்பிக்கை. அதையும் தாண்டி இவர் படங்கள் என்றாலே சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் பார்க்கும் வகையில் இருக்கும். இப்படி நடிப்பில் கவனம் செலுத்தி வந்த இவர் இப்போது கனா என்ற படம் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளார். சமீபத்தில் நடந்த இப்பட வெற்றி விழாவில்...
அவுஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள கடற்கரைகளில் சுமார் 3,000 பேரை நச்சுத்தன்மை கொண்ட ஜெல்லி மீன்கள் தாக்கியுள்ளன. இதனால் கோல்ட் கோஸ்ட், சன்ஷைன் கோஸ்ட் வட்டாரங்களில் உள்ள கடற்கரைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெல்லி மீன்களால் இதுவரை 3,595 பேர் தாக்கப்பட்டுள்ளதாகக் கடலோரக் காவலர்கள் சங்கம் கூறியது. வடகிழக்கிலிருந்து வீசும் பலத்த காற்றால் ஜெல்லி மீன்கள் கடலில் மக்கள் நீந்தும் பகுதிக்கு வந்துள்ளன. இன்னும் கூடுதல் மீன்கள் கரையை...
சென்னையில் தொடங்கிய தேசிய ஹாக்கி போட்டியின் தொடக்க ஆட்டத்தில் மத்திய பிரதேச அணி வெற்றி பெற்றது. தமிழ்நாடு கூடைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஆதவா ஆர்ஜூனா, மணிப்பூர் அணி வீரர்கள் ஹாக்கி இந்தியா அமைப்பின் தமிழ்நாடு பிரிவு சார்பில் 9-வது தேசிய ஹாக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் ஐ.சி.எப். மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 41 அணிகள்...