இவ் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரியவின் தல‍ைமையில் இடம்பெறவுள்ளது. இன்றைய பாராளுமன்ற அமர்வின்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து இறுதித் தீர்மானம் சபாநாயகரினால் அறிவிக்கப்படவுள்ளதுடன், எதிர்க்கட்சிகளுக்கான நிதியொதுக்கீடுகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது. இதேவேளை இந்த வாரத்துக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து ஆராய நேற்றைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது இந்த வாரத்துக்கான நிகழ்ச்சி நிரல்களில் ஒரு சில மாற்றங்கள்...
கண்டி - யட்டிநுவர வீதியில் அமைந்துள்ள மாடிக் கட்டடம் ஒன்றில் தீ பரவியுள்ளது. குறித்த கட்டத்தில் சிக்கி தவித்த மூவரை காப்பாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தீ விபத்து ஸ்ரீ தலதாமாளிகைக்கு ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்த கட்டத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலையகத்தில் மூவாயிரத்துக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களின் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடலுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தரும்படி இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கல்வி அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நியமனம் பெற்று மூன்றரை வருடங்கள் பூர்த்தியாக இருக்கும் இவர்களின் நியமனமானது இன்னும் ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்க படவில்லை . அத்தோடு வர்த்தமானி அறிவித்தலின் படி ஐந்து வருடத்திற்குள் பட்டதாரி அல்லது டிப்ளோமா முடிக்காவிட்டால் நியமனம் ரத்து செய்யப்படும்...
கதிர்காம ஆலயத்தில் வைத்து திருட்டுப்போன பெண் ஒருவரின் தாலிக்கொடி, கையடக்க தொலைபேசி சம்பவம் தொடர்பா கைது செய்யப்பட்ட ஒருவருக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். மட்டக்களப்பை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2017 ஆம் ஆண்டு கதிர்காமத்தில் ஆலைய தரிசனத்தின் போது அவரது தாலிக் கொடி மற்றும் கையடக்க தொலைபேசி என்பன திருட்டுப்போன சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின பேரில் கைது செய்யப்பட்ட ஒருவரை 14 நாட்கள்...
வடக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊவா மாகாண ஆளுநராக கீர்த்தி தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநராக சுரேஷ் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சப்ரகமுவ மாகாண ஆளுநராக தாம திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் .
இந்தோனேசியாவின் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மொலுக்கா கடலுக்கடியில் சுமார் 40 மைல் தொலைவில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால், பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. டிசம்பர்...
தாய்லாந்து நாட்டின் ரோய் இட் மாகாணத்தில் உள்ள பனோம் பிராய் மாவட்டத்தில் இருந்து தலைநகர் பாங்காக்குக்கு மாடி பஸ் சென்றுகொண்டிருந்தது. இந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் கோலோங் லுவாங் மாவட்டத்தில் உள்ள ஒரு சாலையில் சென்றுகொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடியது. பின்னர் அந்த பஸ் சாலையில் கவிழ்ந்தது. இந்த பஸ் கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...
பொதுவாக சில ஆண்கள் குறிப்பிட்ட அளவு வயது எல்லை தாடும் போது வழுக்கை ஏற்பட்டு விடுகின்றது. வழுக்கைத் தலை பிரச்சினையால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று தான் சொல்லமுடியும். இதற்கு முக்கிய காரணம், ஆண்கள் பெண்களைப் போல், தங்கள் முடிக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை என்பது தான். ஆண்களோ, அதிகப்படியான வேலைப்பளுவினால், முமுடியை சரியாக பராமரிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் முடி உதிர்ந்து வழுக்கை இளம் வயதிலேயே ஏற்பட்டு...
மார்ச் மாதம் வரவு-செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து 20 க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொண்டு  வரவுசெலவு திட்டத்தை வெற்றிபெறச் செய்வதுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை பலப்படுத்துவார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் வரவு செலவு திட்டத்திற்கு தயாராகி வருகின்ற நிலையில்...
அவுஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்ற மகிழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மைதானத்தில் உற்சாகமாக நடனமாடினர். சிட்னியில் நடைபெற்ற இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதன்மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. தொடரை வென்ற மகிழ்ச்சியில் கேப்டன் கோஹ்லியுடன் சேர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திலேயே உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கும்,...