பாகிஸ்தானுடன் நல்லுறவை கடைபிடிக்க முடியவில்லை என்றும், எதிரிகளுக்கு அந்தநாடு அடைக்கலம் தருவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.
உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது. இதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வந்தது.
ஆனால் அந்த நிதியை பாகிஸ்தான் பெற்றுக்கொண்டு, தனது சொந்த நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை பாரபட்சமின்றி ஒடுக்கத்தவறி விட்டது என்பது அமெரிக்காவின் கருத்தாக உள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானை வெளிப்படையாக...
விவாகரத்து வழக்கில் பெண்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் நோட்டீசு அனுப்ப சவுதி அரேபியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சவுதி அரோபியாவில் ஆண்களில் சிலர் தனது மனைவியை விவாகரத்து செய்ய கோர்ட்டில் வழக்கு தொடரும் போது மனைவிகளிடம் தெரிவிப்பது இல்லை. இதனால் பெண்களின் உரிமையும் அவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது.
பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக சீரமைப்பை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அதன் அடிப்படையில் அங்கு பெண்கள் உரிமையை நிலை நாட்ட...
சென்னையில் பொது மக்களிடையே மெட்ரோ ரெயில் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 6-ந் திகதி மராத்தான் ஓட்டப்பந்தயம் நடக்கிறது. இதில் 25 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள்.
சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ் வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள்...
தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், இந்த வருடம் நிறைய படங்களில் நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது:-
கடந்த 2018-ம் ஆண்டில் ஒரு நடிகராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக என்று பல முயற்சிகள் செய்து இருந்தேன். இவை அனைத்திற்கும் உங்களின் வரவேற்பு நன்றாகவே இருந்தது. இந்த வரவேற்புதான் நம்பிக்கையை கொடுக்கிறது.
இந்த நம்பிக்கை தான், நல்ல நல்ல முயற்சிகளைச்...
குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டத்தால் 70 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் மக்கள் தொகை குறைந்துள்ளது
Thinappuyal News -
குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்தியதன் மூலம் 70 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சீனாவில் மக்கள் தொகை குறைந்துள்ளது.
உலகிலேயே மிகவும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா திகழ்ந்து வருகிறது. பல ஆண்டுகளாக 140 கோடி மக்கள் தொகையிலேயே தொடர்ந்து நீடித்து வருகிறது.
அதற்கு ‘ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை’ என்ற குடும்ப கட்டுப்பாடு திட்டமே காரணமாகும். இந்த திட்டம் கடந்த 1979-ம் ஆண்டு முதல் மிக கடுமையாக...
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள காங்ஜியான் கவுண்டியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள காங்ஜியான் கவுண்டியில் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 8.48 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி 399 இன்னிஸ்க்களில் 19,000 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.
கோஹ்லி என்றாலே தெரியாதவர்கள் இருக்க முடியாது. உலக அளவில் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ள கோஹ்லி தற்போது ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். அதாவது 399 இன்னிங்ஸ்க்களில் 19,000 ரன்கள் எடுத்து சர்வதேச சாதனையை எட்டியுள்ளார்.
இதற்கு முன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தான் 432இன்னிங்ஸ்க்களில் 19,000 பெற்றுள்ளார்....
பிரித்தானியாவில் 42 வயதில் 21 குழந்தைகளை பெற்றெடுத்த பெண், தன்னுடைய 13 வயதில் முதல் முறையாக கர்ப்பமாகியுள்ளார் என்பது தெரியவந்தவுடன் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் வசித்து வரும் தம்பதி Sue Radford-Noel. இதில் Sue Radford தன்னுடைய 42 வயதில் 21-வது குழந்தையை பெற்றெடுத்தார்.
இதனால் பிரித்தானியாவின் மிகப் பெரிய குடும்பமாக Sue Radford-Noel குடும்பம் காணப்பட்டது. 21 குழந்தைக்கு பின் இனிமேல் குழந்தை பெற்றெடுக்கப் போவதில்லை...
மனிதனை உயிரை பறிக்கும் கொடிய நோய்களில் புற்றுநோய் உள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்று இந்த கொடிய நோயினால் இறந்து கொண்டே தான் இருக்கின்றார்கள்.
அந்தவகையில் 14 வகையான புற்றுநோயை தடுக்க கூடிய ஆற்றல் பூண்டிற்கு உள்ளது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றார்கள்.
பூண்டில் உள்ள allicin என்கிற முக்கிய மூல பொருள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைக்கின்றது இதனால் தான் நமது உடல் 14 வகையான புற்றுநோய்களை எதிர்த்து...
“நாங்கள் நண்பர்கள் மட்டும் தான். காதல், திருமணம் பற்றி வரும் செய்தி அனைத்தும் வதந்தி”
Thinappuyal News -
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா நடிகர் ஆரவ்வை காதலிப்பதாக கூறி சர்ச்சை ஏற்படுத்தினார். ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளாததால் நிகழ்ச்சியில் தற்கொலை முயற்சி எல்லாம் செய்தார்.
நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்த பிறகு ஓவியா மற்றும் ஆரவ் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக இருவரும் ஜோடியாக பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதனால் அவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் தகவல் பரவியது.
ஆனால்...