தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும் ரியாலிட்டி ஷோக்களும் அதிகரித்துள்ளது. அந்தவகையில் ரியாலிட்டி ஷோ அதிகமாக செய்யும் பிரபல தொலைக்காட்சியில் அடிக்கடி ஏதாவது ஒரு பிரபலம் கோபப்படுவது போல ப்ரோமோ வெளியிடுவார்கள். ஆனால் நிகழ்ச்சியில் அதற்கு நேர்மாறாக இருக்கும். அல்லது அது பெரிய பிரச்சனையாக இருக்காது. அதுபோலவே ரெடி ஸ்டடி போ நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ரியோ கோபப்பட்டு வேலை செய்பவர்களிடம் கத்துவது போல ப்ரோமோ வெளியிட்டுள்ளனர். ஆனால் கமெண்ட் செய்பவர்கள் பெரும்பாலும் இது...
டீனேஜில் இருக்கும் போதே சினிமாவில் நுழைந்து இளம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஆலியா பட். தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அவர் நடிகர் ரன்பிர் கபூரை காதலித்து வருகிறார். இது பற்றி அவர் பேசும்போது "நான் முதன்முதலில் ரன்பீரை 11 வயதில் இருக்கும்போது தான் பார்த்தேன். அப்போதே அவரை காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். அவரின் புகைப்படங்களை பார்த்துக்கொண்டே இருப்பேன்" என கூறியுள்ளார். இவர்கள் இருவருக்கும் 11 வருட வயது வித்யாசம் உள்ளது...
இலங்கையில் முதற்தடவையாக கலென்பிந்துனுவௌ பகுதியிலுள்ள சோளப் பயிர் செய்கை காணில் பீடைகளைக் கட்டுப்படுத்துவதற்கு ட்ரோன் தொழில்நுட்பம் பரீட்சார்த்த ரீதியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் பி.ஹரிசனின் ஆலோசனைக்கு அமைய விவசாயத் திணைக்களம் ட்ரோன் விமானங்களைப் பயன்படுத்தி பீடைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியை ஆரம்பித்துள்ளது. இந்தத் திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் பெருமளவில் சோளப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள சேனைகளுக்கும் திட்டத்தை விஸ்தரிப்பதென விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்காக ட்ரோன் ஆளில்லா...
ஜனநாயகத்தை மீறியமைக்காக கலாநிதி தேவநேசன் நேசையா தனக்கு வழங்கப்பட்ட தேசமான்ய விருதை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக நேற்று  கையளித்தார்.ஜனநாயக கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் முரணான வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருவதாக கவலை தெரிவித்திருக்கும் ஓய்வுபெற்ற சிவில் சேவை அதிகாரியான கலாநிதி தேவநேசன் நேசையா கடந்த வருடம் தனக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட தேசமான்ய விருதுக்கான பதக்கத்தையும் சான்றிதழையும் திருப்பியனுப்பப்போவதாக அறிவித்திருக்கிறார். தற்போது வெளிநாட்டில் இருக்கும் கலாநிதி நேசையா ஜனாதிபதி சிறிசேனவுக்கு பகிரங்கக்...
கிழக்கு கரையோரப் பகுதிகளில் எதிர்பார்க்கப்படும் சிறிதளவான மழை வீழ்ச்சியைத் தவிர நாடு முழுவதும் சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் குறிப்பாக மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களில் ஓரளவு குளிரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் அம்பாறை, புத்தளம், கேகாலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று...
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபகஷவிற்கு  எதிராக நிரந்தர நியாய மேல் நீதிமன்றத்தில்  தொடரப்பட்ட  வழக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சம்பத் அபேகோன் , சம்பத் விஜேரத்ன மற்றும்  சம்பத் ஜனகீ ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம்  முன்னிலையில்  இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டடது. மெதமுலன டீ. ஏ. ராஜபக்ஷ நூதன சாலை  நிர்மாணப்பணிகளின் போது 33 மில்லியன் ரூபாய் பணத்தை முறையற்ற வகையில்  பயன்படுத்தியதாக ...
வவுனியா பொலிஸாருக்கு லஞ்சம் கொடுத்த  இரு தனியார் நிறுவன ஊழியர்கள் நேற்றையதினம் (02.01) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வாகனங்களின் வேகத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் அதிவேகத்தினை கணிக்கும் கருவியுடனான பொலிஸ் உருவ பொம்மையொன்று வவுனியா ஏ9 வீதியில் வைக்கப்பட்டிருந்தது. அந்த உருவபொம்பைக்கு இலஞ்சம் வழங்குவது போன்று  வீடியோ செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட  தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இரு ஊழியர்களை நேற்றையதினம் பொலிஸார் கைது...
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கின்ற அகத்தி முறிப்பு குளத்தின் கீழான விவசாயக் காணி தொடர்பில் அப்பகுதியிலுள்ள இரு சாராருக்கும் இடையில் நீண்ட காலமாக காணிப்பிணக்கு ஒன்று இருந்து வந்துள்ளது. இப் பிணக்கின்படி 1990 களுக்கு முன்பு ஒருபகுதியினர் அகத்தி முறிப்பு குளத்தின் கீழ் விவசாயத்தை மேற்கொண்டு அதற்கான வருடாந்த அனுமதிப்பத்திரத்தையும் பெற்றுள்ளனர். எனினும் மீள்குடியேற்றத்தையடுத்து குறித்த வருடாந்த அனுமதிப்பத்திரத்தைப் பெற்ற உரித்தாளிகள் அவர்களது காணிகளை பிரதேச செயலாளரது அனுமதியுடன்...
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆணின் சடலம் ஒன்று தற்போது மிதந்து கொண்டிருக்கிறது.குறித்த சடலம் இது வரை அடையாளம் காணப்படாத நிலையில் சடலத்தை மீட்கும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.