சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த் - கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு வித்தியாசமாக `அருவம்' என தலைப்பு வைத்துள்ளனர். சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த் - கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகி வரும் த்ரில்லர் படத்திற்கு `அருவம்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல்பார்வை போஸ்டரை, புத்தாண்டை முன்னிட்டு படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. படம் பற்றி இயக்குநர் சாய் சேகர் பேசும்போது, அருவம் என்ற தலைப்பு,...
கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பான விபரங்களை அறிவிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்புக் காலம் வழங்குவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல்மோசடி தடுப்புப் பிரிவு தலைமை அதிகாரி அலெக்ஸ் மார்ஷலை கடந்த 27ஆம் திகதி சந்தித்தபோது இந்தத் தகவலை அவர் அறிவித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சில் நேற்று முற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது...
ஜப்பானில் புதுவருட கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது வாகனத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் காரணமாக எட்டு பேர் காயமடைந்துள்ளனர். மத்திய டோக்கியோவில் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக காணப்படும் ஹரயுக்கு என்ற பகுதியி;ல் ஜப்பான் நேரப்படி நள்ளிரவிற்கு பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சிறிய ரக வாகனமொன்று பாதசாரிகள் மீது மோதியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் புத்தாண்டு வழிபாட்டிற்காக செல்பவர்கள் நிறைந்து காணப்பட்ட வீதியிலேயே இந்தஅ சம்பவம் இடம்பெற்றுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்...
ரஷ்யான் மாக்னிடோகோர்ஸ்க் பகுதியில் உள்ள குடியிருப்பில் நடைபெற்ற சமையல் எரிவாயு விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் மாக்னிடோகோர்ஸ்க் பகுதியில் இன்று திடீரென சமையல்  எரிவாயு கசிவு ஏற்பட்டது. குறித்த விபத்தில் குடியிருப்பில் வசித்து வந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இரு குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காணாமல் போன பலரை தேடி வருகின்றனர். தகவலறிந்து தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து சென்று தீயை...
நாடெங்கிலும் உள்ள சட்ட விரோத துப்பாக்கிகளை மீட்பதற்கு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இந் நடவடிக்கை பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் தொடர்ந்து 3 மாத காலத்திற்கு மேற்கொள்ளப்படவுள்ளது.  
மலர்ந்திருக்கும் 2019 ஆம் ஆங்கிலப் புத்தாண்டு வார நாள் விடுமுறை விரும்பிகளான அரசாங்க உத்தியோகத்தர்களுக்குச் சோபிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. காரணம் வாரநாள்  விடுமுறைகள் குறைந்த ஆண்டாக 2019 ஆம் ஆண்டு காணப்படுவதேயாகும். இந்த ஆண்டு நிகழும் 23 பொது விடுமுறை தினங்களில் ஒன்பது விடுமுறைகள் வார இறுதி சனி ஞாயிறு நாட்களில் வருவதனால் விடுமுறை தினங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவு  குறைந்துள்ளது. இவ்வருடம் சித்திரைப் புத்தாண்டு சனி, ஞாயிறு தினங்களில் வருவதுடன்,...
சிவனடிபாதமலை யாத்ரீகர்களின் நலன் கருதி அம்பியுலன்ஸ் வண்டியும் வைத்தியரையும் நுவரெலியா மாவட்ட அரச அதிபர் ரோகன புஷ்பகுமாரவின் பணிப்புரையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்ட சுகாதார அத்தியேட்சகரினால் வாராந்த வைத்தியர் ஒருவர் நல்லத்தண்ணி பொது சுகாதார அதிகாரியின் கட்டிடத்தின் வைத்திய பிரிவில் இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.  
ஹன்சிகா தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த நடிகை. ஆனால், தற்போது இவர் எங்கு இருக்கின்றார் என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு மார்க்கெட் இழந்து இருக்கும் இவர் தற்போது சோலோ ஹீரோயினாக மஹா என்ற படத்தில் நடிக்கின்றார். இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது, முதல் போஸ்டரிலேயே இவர் கஞ்சா அடிப்பது போல் இருந்தது. தற்போது என்னவென்றால் இரத்த வெள்ளத்தில் இவர் குளிப்பது போல் ஒரு போஸ்டர் வந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை முழுவதும் ஹெரோயின் விநியோகிக்கும் பாதுகாப்பு இல்லமாகவும் மத்திய நிலையமாகவும் செயற்பட்டுவந்த வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸாரால் அங்கிருந்து 336 கோடி ரூபா பெறுமதியான 278 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர். அத்துடன் அது தொடர்பில் இரு பங்களாதேஷ் பிரஜைகளை கைதுசெய்து தடுப்பு காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றுக்கு அமைவாக கல்கிஸ்ஸை பகுதியில் வீடொன்றை சுற்றிவளைத்து அங்கிருந்து 9 கிலோ நிறையுடைய...