அனேகன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தவர் அமைரா டஸ்டுர். இவர் தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தமிழில் சந்தானம் ஜோடியாக அவர் ஒரு படத்தில் விரைவில் நடிக்க உள்ளார். அதிக கவர்ச்சியாக நடிக்கவும் தயங்காத அவர் தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த புகைப்படம் 15 மணி நேரத்தில் 75 ஆயிரம் லைக்குகளை குவித்துள்ளது.
அண்மைகாலமாக பலராலும் அறியப்பட்டவர் இளம் நடிகை கேத்ரின் தெரசா. கலகலப்பு 2 படம் இவருக்கு அண்மையில் வந்தது. கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன் என அவரின் படங்கள் வந்தது. தற்போது அவர் நீயா 2 படத்திலும், சிம்புவுடன் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கிலும் நடித்து வரும் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். சில லட்சம் மட்டுமே சம்பாதிக்கும்...
ஆசிய - ஜேர்மன் விளையாட்டுத்துறை பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்தின் செயலாளர்நாயகம் சந்தன பெரேராவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மேசைப்பந்தாட்டப் போட்டிகள் யாழ். மத்திய கல்லூரி மேசைப்பந்தாட்ட அரங்கில் சனி, ஞாயிறு தினங்களில் (டிசம்பர் 29, 30) நடைபெறவுள்ளன. தமிழ், முஸ்லிம், சிங்களம் ஆகிய மூன்று சமூகங்களிடையேயும் சகோதரத்துவம், நட்புறவு, புரிந்துணர்வு ஆகியவற்றைக் கட்டி எழுப்பும் நோக்கத்துடளேயே ஆசிய - ஜேர்மன் விளையாட்டுத்துறை நிகழ்ச்சித் திட்டம் இப் போட்டியை ஏற்பாடு...
கிழக்கில் இராணுவம், பொலிஸார், கடற்படையினர் வசமுள்ள இன்னும் பல காணிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நேற்றைய தினம் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட வேண்டுகொளுக்கு இணங்க ஜனாதிபதியின் பேரில் காணிகள் சில விடுவிக்கப்பட்டன இது குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ‘கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக யுத்ததால் பாதிக்கப்பட்ட எமது மக்கள்...
எகிப்தில் பிரமிட்கள் காணப்படும் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 3 வியட்நாம் சுற்றுலாப்பயணிகள் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். எகிப்தின் தலைநகரிற்கு அருகில் பிரமிட்கள் அதிகம் காணப்படும் கிஜா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுற்றுலாப்பயணிகளின் பேருந்தை இலக்குவைத்து வீதியோராமாக வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்ததன் காரணமாகவே நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பு காரணமாக பத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் காயமடைந்துள்ளனர் இதுவரை இந்த தாக்குதலிற்கு எவரும் உரிமை கோரதஅதேவேளை எகிப்தின் வெளிவிவகார அமைச்சர் இது பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டுள்ளார். பிரமிட்களை பார்வையிடுவதற்காக...
2018 ஆண்டுக்கான உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை இன்று நள்ளிரவிற்குள் வெளிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை  இன்று நள்ளிரவிற்குள் வெளிவிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பனிப் பொழிவினால் சிக்கிம் மாநிலத்தில் சிக்கித் தவித்த 2500 சுற்றுலாப் பயணிகளை இந்திய இராணுவத்தினர் மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர். வடமாநிலங்களில் தற்போது கடுமையான பனிப்பொழிவால் பீகார், உத்தரபிரதேசம், குஜராத், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உறைய வைக்கும் அளவுக்கு குளிர் காற்று வீசுகிறது. ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிக்கிம் மாநிலத்தில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு...
திருத்தப் பணிகள் காரணமாக களுத்துறையை அண்டிய சில பகுதிகளில் இன்று  காலை 8 முதல் மாலை 5 மணிவரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. குறித்த நீர்வெட்டு வாதுவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, கட்டுகுருந்த , நாகொட, பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பகுதியில் இன்று மாலை 5மணிவரை நீர்விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல்...
தேர்தல் பிரச்சாரத்திற்கு கம்பீர குரலுடன் கேப்டன் விஜயகாந்த் வருவார் என்று அவரது மூத்த மகனான விஜய பிரபாகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்ததாவது, “ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு ஏற்கவேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு போதிய வசதிகளை செய்து தரவேண்டும். ஆசிரியர்களின் போராட்டம் தி.மு.க., அ.தி.மு.க. என இரு ஆட்சிகாலத்திலும் மாறிமாறி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே இதனை பார்த்து பார்த்து நமக்கு பழகிவிட்டது. தி.மு.க. வந்தாலும் இந்த நிலைமை மாறபோவதில்லை. ஹதரபாத்...
ஒரு தொகை வெளிநாட்டு சிகரெட்களை இலங்கைக்குள் கடத்த முயன்ற இளைஞன் ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 20 வயதுடையவர் எனவும், அவர் இஹல கொட்ராமுல்ல பகுதியை சேர்ந்தவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. டுபாயில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த குறித்த நபரிடம் இருந்து 100 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 20 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட சிகரெட்டின் பெறுமதி சுமார் 1.1 மில்லியன்...