கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான இளைஞன், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த இரண்டாவது சம்பவமும் பதிவாகியுள்ளது. கடந்த மாத இறுதியில் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த அதே பாணியில் இந்த இளைஞரும் முயற்சித்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை கோப்பாய் பொலிஸ் நிலைய தடுப்புக்காவல் கூடத்தில் இடம்பெற்றுள்ளது. தனக்கு நடந்த கொடுமைகளை அந்த இளைஞர் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் நேற்று வெளிப்படுத்தினார். அவருடன் தடுத்துவைக்கப்பட்டிருந்த...
தோட்டக்குடியிருப்பில் பரவிய தீ காரணமாக 24 தோட்டத் தொழிலாளர்களின் வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் - டிக்கோயா - போடைஸ் தோட்டத்திலுள்ள குடியிருப்பிலேயே இன்று காலை குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்பட்ட தீப்பரவலையடுத்து தோட்டத் தொழிலாளர்களின் 24 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதுடன்  தீயின் காரணமாக 27 குடும்பங்களை சேர்ந்த 150 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். தீ பரவலுக்கான காரணம்...
கிளிநொச்சி இரணைமடுகுளம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய  குழுவை நியமித்தார் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட்குரே. யாழ்  பல்கலைகழக பொறியியல் பீட விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார் தலைமையில் வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர்( பொறியியல்) எஸ். சன்முகநாதன், வடக்கு மாகாண  விவசாயப் பணிப்பாளர்  சிவகுமார் ஆகியோர் அடங்கிய குழுவையே ஆளநர் நியமித்துள்ளார். கடந்த 21 ஆம் திகதி பெய்த கடும் மழையின் போது இரணைமடுகுளத்தின் நீர் கொள்ளளவு சடுத்தியாக உயர்ந்த...
நாட்டின் பல பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்...
புதிய அமைச்சரவையின் அமைச்சுக்களுக்குமான பொறுப்புக்கள், விடயதானங்கள் மற்றும் அரச நிறுவனங்களை உள்ளடக்கிய விபரம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி டிசம்பர் 28 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சு, முப்படைகள், தேசிய பாதுகாப்பு நிதியம், இலங்கை பொலிஸ் திணைக்களம், அரச புலனாய்வுத் துறை, கடலோர பாதுகாப்பு திணைக்களம், தேசிய ஊடக மத்திய நிலையம் மற்றும் அரசாங்க அச்சகம் என்பன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்தவகையில், திரைசேரி, மத்திய...
யாழ்.பல்கலைகழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக கழுத்தறுத்துதற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்.பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கற்கும் பளை பகுதியை சேர்ந்த முதலாம் வருட மாணவனே தற்கொலைக்கு முயற்சித்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். குறித்த மாணவன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வீட்டிலிருந்தவர்களிடம் பல்கலைகழகத்தில் தான் மோசமான பகிடிவதைக்கு உள்ளாகி வருவதாக தெரிவித்துள்ளார். பின்னர் தனது அறைக்குள் சென்று கழுத்தை அறுத்துள்ளார்.அதனை அவதானித்த வீட்டிலிருந்தோர். மாணவனை உடனடியாக மீட்டு பளை வைத்தியசாலையில் அனுமதித்தனர். பளை வைத்தியசாலையில் இருந்து மேலதிக...
சோளத்தில் மாவுச் சத்து மற்றும் புரதச் சத்து அதிகம் உள்ளது. நார்ச் சத்தும் நிறைந்து உள்ளது. இன்று சோள மாவில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சோளம் - 500 கிராம், உளுந்து - 100 கிராம், வெந்தயம் - 2 மேசைக்கரண்டி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: சோளம், உளுந்து, வெந்தயம் இவற்றை ஊறவைத்து, தனியாக தோசைமாவு பதத்துக்கு அரைத்து உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும். ஐந்து முதல் ஆறு மணி நேரம்...
கிறிஸ்துமஸை முன்னிட்டு எஸ்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் அமைப்பிற்கு சென்ற நடிகை சமந்தா, அவர்களுக்கு புதிய உடைகளை பரிசாக அளித்து மகிழ்வித்துள்ளார். சினிமா நட்சத்திரங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடும் படங்கள் கடந்த 2 நாட்களாக வைரல் ஆகின்றன. இதில் வித்தியாசமாக சமந்தா மட்டும் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் அமைப்பிற்கு சென்று கொண்டாடி உள்ளார். கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்துக்கு பதிலாக கிறிஸ்துமஸ் தேவதைபோல் சென்றுள்ளார். அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கியதுடன்...
டிஜிட்டல் கேமரா வருகையால் ஆண்டுதோறும் ரிலீசாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டு மட்டும் 171 தமிழ் படங்கள் ரிலீசாகியுள்ளன. சினிமாவில் டிஜிட்டல் கேமரா வருகையால் ஆண்டுதோறும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வருடத்திற்கு 200-க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாகி வந்தன. ஆனால் 2018-ல் இந்த எண்ணிக்கை 171 ஆக குறைந்துள்ளது. டிஜிட்டல் ஒளிபரப்பு கட்டணத்தை குறைப்பதற்காக தமிழ் சினிமா சங்கங்கள் ஒன்றிணைந்து...
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாற்பதாம் கட்டைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக லொறி ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட கால்நடைகளை நேற்று மாலை கைப்பற்றியுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து அக்கரைப்பற்று-பொத்துவில் பிரதான வீதியின் நாற்பதாம் கட்டைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றி வளைப்பில் இக்கால்நடைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கே.எம்.இப்றாஹீம் தெரிவித்தார். மொனராகலைப் பிரதேசத்திலிருந்து அக்கரைப்பற்று பகுதிக்கு சட்ட விரோதமாக லொறியொன்றில் சூட்சுமான முறையில்...