ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் 17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 5-ந்தேதி முதல் பிப்ரவரி 1-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா, அல் அய்ன் ஆகிய இடங்களில் நடக்கிறது. பதிவு: டிசம்பர் 28,  2018 04:30 AM அபுதாபி, இதில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, ஐக்கிய அரபு அமீகரம், தாய்லாந்து, பக்ரைன் ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவில்...
மனதை நெகிழச் செய்யும் வகையில் போலியாக நடித்து வீதியில் யாசகம் கேட்ட விசித்திரமான பெண் வவுனியாவில் அடையாளம் காணப்பட்டார். வவுனியா, மன்னார் வீதியில் மனதை நெகிழச் செய்யும் வகையில் போலியாக நடித்து வீதியில் சென்றவர்களிடம் யாசகம் கேட்ட பெண் ஒருவர் ஊடகவியலாளர் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தால் அடையாளம் காணப்பட்டு ஆலோசனைகள் வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று காலை வவுனியா, மன்னார் வீதி, வேப்பங்குளம் பகுதியில் இருந்து பெண் ஒருவர் நடக்க முடியாதவராகவும், வாய் பேச...
வடக்கு மாகாணத்தில் எற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஹெலிகொப்டர் மூலம் பார்வையிட்டுள்ளார். பிரதமரின் இந்த விஜயத்தில் அமைச்சர்களான ரிஷாத் பதியூதீன், தயா கமகே, ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளில் பௌத்தமதத்திற்கே முன்னுரிமை வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று காலை கண்டியில் அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் இலங்கையில் சமீபத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்ட வேளை  அரசமைப்பையும் மக்களின் இறைமையையும் பாதுகாப்பதற்காக பௌத்தமத பீடாதிபதிகள் காட்டிய அக்கறையை பிரதமர் பாராட்டியுள்ளார் மாவனல்லயில் புத்தரின் சிலைகள் உடைக்கப்பட்ட விவகாரத்தை கையாள்வதற்காக சிரேஸ்ட காவல்துறை அதிகாரியை நியமித்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இலங்கையின்...
வௌ்ளவத்தையில் இருவேறு புகையிரத விபத்தில் இருவர்  உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இந்நிலையில் நேற்று மாலை 3.50 மணியளவில் வெள்ளவத்தை - மருதானையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொரட்டுவ பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ரங்கனா நவோதினி இனேஷா பெர்ணான்டோ என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் வெள்ளவத்தை - நெல்சன் வீதி, முகுது மாவத்தைக்கு அருகில் புகையிரதத்தில் மோதி நபர்...
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணிக்கு 660 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கினை நியூசிலாந்து நிர்ணயித்துள்ளது. இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 178 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் இலங்கை அணி 104 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ராவல் 74 ஓட்டங்களும், டாம் லாதம் அபாரமாக ஆடி...
நாட்டை 50 நாட்களுக்கு மேலாக நாசமாக்கிய ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சியின் முழு விபரத்தை விரைவில் வெளியிடவுள்ளேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்தி நிறுவனமொன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாத்திரம்...
வட, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது ஆரம்பத்திலிருந்தே இராணுவ வீரர்கள் மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வந்ததுடன், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உதவிகளையும் தொடர்ச்சியாக வழங்கி வந்தனர். இந்நிலையில் அங்குள்ள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு அரசியல்வாதியும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட போது உடனடியாக விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்திருக்கவில்லை. அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டே வெள்ள மீட்பு பணிகளில்...
மக்களுக்கு சேவை செய்யக் கூடியவாறான அமைச்சு ஒன்று வழங்கப்படாத பட்சத்தில் அதனை ஏற்றுக்கொள்ள போவதில்லை. அதே வேளை எதிர்கட்சியில் சென்று அமரப்போவதுமில்லை. எனினும் மலையக மக்கள் முன்னணியாக ஐக்கிய தேசிய கட்சிக்கு தொடர்ந்தும் எமது ஆதரவை வழங்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அமைச்சு பதவி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்...
இத்திட்டத்திற்கு ஆதரவாக 20 பேரும் எதிராக 21 பேரும் வாக்களித்துள்ளனர்.இக்கூட்டமானது நேற்று முன்தினம் நடைபெற்றது. கண்டி மாநகர சபையின் 65 வருடகாலமாக ஐக்கிய தேசிய கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது வந்தது. கண்டி மாநகர சபையில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக 19 உறுப்பினர்களும் பொது ஜன முன்னணி சார்பில் 16 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் 3 உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் இரு உறுப்பினர்களும் தமிழ் முற்போக்கு...