படகுகளில் பொருத்தப்படும் என்ஜின் எதுவும் இல்லாமல், பெருங்கடலின் நீரோட்டங்களை பயன்படுத்திதான் இந்த கொள்கலன் மூலம் 4500 கிலோமீற்றர் தூரத்தை கடக்கப்போகிறார்.தேங்கியுள்ள கடல் நீருக்கு மத்தியில், ஆறு போல ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி ஓடும் நீர்ப்பரப்பு 'பெருங்கடல் நீரோட்டம்' எனப்படும்.
பிரான்ஸைச் சேர்ந்த 71 வயதுடைய ஜீன்-ஜாக்குவஸ் சவின், ஸ்பெயினின் கேனரி தீவுகளில் ஒன்றான எல் ஹியர்ரோ தீவில் இருந்து தனது பயனத்தை தொடங்கியுள்ளார்.அடுத்த மூன்று மாதங்களுக்குள் கரீபியன் தீவுகளை...
பிரிட்டிஸ் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மார்க்கிலே தனது முதல் திருமணத்தில் கலந்துகொண்டவர்களிற்கு அன்பளிப்பாக போதைப்பொருட்களை வழங்கியதாக தனது நண்பிகளிற்கு தெரிவித்தார் என மின்னஞ்சல்களை அடிப்படையாக வைத்து பிரிட்டனின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஹரியின் மனைவி டிரெவர் என்ஜெல்சன் என்பவரை ஏற்கனவே மணமுடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திருமணம் ஜமைக்காவில் இடம்பெற்றது
இந்த திருமண நிகழ்வில் கலந்துகொள்பவர்களிற்கு மரியுவானாவை வழங்கப்போவதாக ஹரியின் மனைவி தெரிவித்தார் என்பதை தெரிவிக்கும் மின்னஞ்சல்களை பார்வையிட்டுள்ளதாக சன் தெரிவித்துள்ளது.
அவரின்...
இனங்களுக்கிடையில் சமாதானத்தை சீர்குலைத்து மத ரீதியிலான மோதல்களை உருவாக்கும் இந்த நாசகார செயல்களின் பின்னணியில் இயங்கும் மோசமான சக்திகளை அவசரமாக இனம் காணவேண்டியது அவசியமாகும் -முஜீபுர் றஹ்மான்
Thinappuyal News -
மாவனெல்லை பகுதியில் இனங்களுக்கிடையில் மத ரீதியாக முறுகல் நிலையை உருவாக்கும் சில மோசமான சம்பவங்கள் இடம்பெற்றிருப்பது வேதனைக்குரியதாகும்.
இனங்களுக்கிடையில் சமாதானத்தை சீர்குலைத்து மத ரீதியிலான மோதல்களை உருவாக்கும் இந்த நாசகார செயல்களின் பின்னணியில் இயங்கும் மோசமான சக்திகளை அவசரமாக இனம் காணவேண்டியது அவசியமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் தெரிவித்துள்ளார்.
மாவனெல்லைப் பகுதியில் புத்தர் சிலைகள் சில நாசகார சக்திகளால் சிதைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை தொடர்பாக அவர்...
மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி 443 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்க நாளில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா (68 ரன்), கேப்டன் விராட் கோலி (47...
சூடான் நாட்டில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Thinappuyal News -
சூடான் நாட்டில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தினால் உண்டான வன்முறை காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சூடனில் ரொட்டி உற்பத்திக்கான அரச மானியங்கள் அண்மையில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ரொட்டி விலை கடுமையாக உயர்வடைந்துள்ளதுடன், அதனை எதிர்த்து சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 19 ஆம் திகதி முதல் ரொட்டி விலை உயர்வுக்கு எதிரான போராட்டம்...
அஜித்குமார் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படம் ரஷியாவில் வெளியாகிறது. ஏற்கனவே ரஜினிகாந்தின் கபாலி, 2.0 படங்கள் ரஷியாவில் திரையிடப்பட்டு உள்ளன.
பதிவு: டிசம்பர் 28, 2018 05:15 AM
விஜய்யின் சர்கார் படமும் ரஷியாவில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அஜித்குமாரின் விஸ்வாசம் படமும் ரஷியாவுக்கு செல்கிறது.
அங்குள்ள 8 முக்கிய நகரங்களில் இந்த படத்தை திரையிட ஏற்பாடு செய்துள்ளனர். உக்ரைனிலும் வெளியாகிறது. விஸ்வாசம் படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 10–ந் தேதி திரைக்கு வருகிறது....
ரஜினிகாந்த் ‘பேட்ட’ படவேலைகளை முடித்து விட்டு கடந்த வாரம் குடும்பத்தினருடன் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார்.
புத்தாண்டுக்கும் ரஜினிகாந்த் அங்கேயே தங்குகிறார். இரண்டு வாரங்கள் ஓய்வு எடுத்து விட்டு சென்னை திரும்புகிறார்.
அமெரிக்காவில் வெளியே செல்லும்போது ரஜினியை ரசிகர்கள் மொய்க்கிறார்கள். செல்பியும் எடுத்துக்கொள்கிறார்கள். அவர்களுடன் நின்று சிரித்த முகத்துடன் போஸ் கொடுக்கிறார். ரசிகர்களின் அன்பு தொல்லையில் இருந்து விடுபட மாறு வேடத்தில் சுற்றுவதாகவும் கூறப்படுகிறது.
இன்னொருபுறம் அரசியல் விஷயங்கள்...
தெஹிவளை காலி வீதியில் வைத்து கடந்த சனிக்கிழமை 15 ஆம் திகதி 32 கிலோ கிரோம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட பங்களாதேஷ் பெண், மேலும் இரண்டு பங்களாதேஷ் பெண்களுடன் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொண்ட தொடர் விசாரணைகளின் மூலமும் அவரின் கையடக்கத் தொலைபேசி மூலம் மேற்கொண்ட உரையாடல்கள் மூலமும் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த வர்த்தகத்தக நடவடிக்கையுடன் தொடர்புடைய 26...
இலஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் 40 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக- இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Thinappuyal News -
இலஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் வருடத்தின் இதுவரையான காலப் பகுதிக்குள் 40 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு
அத்துடன் இவர்களுள் 36 பேர் அரசாங்க ஊழியர்கள் எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இலஞ்சம் பெற்றுக் கொள்ளப்படும் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் 1954 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறும், முறைப்பாடுகள் தொடர்பில் இரகசியத் தன்மை பேணப்படுவதுடன், அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலஞ்சம் மற்றும்...
ரஷ்யாவில் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனின் ஆசையை அதிபர் புதின் பூர்த்தி செய்துள்ளார்.
ரஷ்யாவின் தெற்கே ஸ்டாவ்ரோபோல் பகுதியில் வசித்து வரும் 10 வயது சிறுவனுக்கு தீவிர நோய் இருந்தது. இதனால் அவன் விரும்பிய சம்போ என்ற விளையாட்டில் தொடர்ந்து பயிற்சி பெற முடியாமல் அதில் இருந்து விலக வேண்டியிருந்தது.
அவனுக்கு ரஷ்ய அதிபர் புதினுடன் கைகுலுக்க வேண்டும் என்ற நீண்டநாள் ஆவல் இருந்தது. இந்த ஆசை நிறைவேறியுள்ளது. ...