72 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினருமான சண்.குகவரதனையும் அவரது மனைவியையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த இருவரையும நேற்றைய தினம் சி.ஐ.டி.யினர் கல்கிஸை மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே நீதிவான் அவர்களை 25 மில்லியன் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல நீதிவான் அனுமதியளித்தார்.
அத்துடன் இருவரின் கடவுச்சீட்டுகளையும் நீதிமன்ற பொறுப்பில் எடுக்க...
சீனாவில் பள்ளி குழந்தைகள் அணியும் சீருடையில் மைக்ரோ-சிப் பொருத்தப்பட்டுள்ளது.
சீனாவில் தென்பகுதியில் உள்ள குயிஷூ மற்றும் குயான்ஸி மாகாணங்களில் படிக்கும் குழந்தைகளின் சீருடை அதிநவீன மயமாக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் அணியும் சீருடையில் மைக்ரோ-சிப் பொருத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் அணியும் ஜாக்கெட்டில் தோள்பட்டையில் 2 மைக்ரோ-சிப்கள் வைத்து தைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகள் பள்ளியில் நுழைந்தவுடன் மைக்ரோ-சிப் பொருத்தப்பட்டுள்ள சீருடைகள் அவர்களை போட்டோ அல்லது வீடியோ எடுக்க உதவி புரியும்.
மேலும் பள்ளியில் இருந்து குழந்தைகள் மாயமானாலோ அல்லது வெளியேறினாலோ வகுப்பறையில்...
நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து தற்காலிகமாக சற்று குறைவடையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில்...
மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முன்னணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா (106 ரன்கள்), விராட் கோலி (82 ரன்கள்),...
சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற இரு யாத்திரிகர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Thinappuyal News -
சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற இரு யாத்திரிகர்கள் மீது கற்கள் புரண்டதனால், காயமடைந்த இருவரும் டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தங்கல்ல - கணேமுல்ல பகுதியை சேர்ந்த 26 வயதான ஆண் ஒருவரும், 27வயதான பெண் ஒருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
சிவனொளிபாதமலைக்கு சென்று யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு மீண்டும் திரும்பும் போது, சிவனொளிபாதமலை – நல்லதண்ணி பிரதான பாதையில் “மஹாகிரிதம்ப”...
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண சேவைகளை வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பிரதமர் ஆராயவுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கும் சென்று பிரதமர் நிலைமையை நேரில் பார்வையிடவுள்ளார்.
இதேவேளை இன்று காலை கண்டிக்கு சென்று அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்து விசேட ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளும் பிரதமர் அதனையடுத்து தலதா மாளிகையில் இடம்பெறும் விசேட சமய...
அடையாளம் தெரியாத நபர் மீது கார் ஒன்று திடீரென்று வந்து அடுத்தடுத்து தாக்கிய சம்பவம்
Thinappuyal News -
பிரித்தானியாவில் அடையாளம் தெரியாத நபர் மீது கார் ஒன்று திடீரென்று வந்து அடுத்தடுத்து தொடர்ந்து மோதியதால், அந்த நபரின் இரண்டு கால்களும் உடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவின் Birkby பகுதியில் இருக்கும் Bradford சாலையிலே இந்த சம்பவம் நடந்துள்ளது. அதில் பெயர் தெரியாத நபர் ஏதோ பேசிக் கொண்டு, வரும் போது திடீரென்று ஒரு சிவப்பு நிற பிஎம்டபில்யூ கார் அந்த நபர் மீது மோதுகிறது.
இதனால் அந்த நபர் தூக்கி...
அமைச்சரொருவரின் ஊடகத் துறை பிரதானியென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபரொருவர் ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
நீதிபதியின் தீர்பிற்கு அமைய நபரை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். பதுளை மஜிஸ்ரேட் நீதிபதி நயந்த சமரதுங்கவின் வாசஸ்தலத்தில் அவரது முன்னிலையில் நேற்று மாலை கைது செய்யப்பட்டு ஆஜர் செய்யப்பட்டார்.
அவ்வேளையிலேயே நீதிபதி அந்நபரை 02-01-2019 வரை விளக்கமறியலில்...
யாழில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்ததில் பல இலட்சம் பெறுமதியான பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளன.
Thinappuyal News -
யாழ்ப்பாணம் அச்சுவேலியில் புத்தக கடையொன்று திடீரென தீப்பிடித்ததில், அங்கிருந்த பல இலட்சம் பெறுமதியான புத்தகங்களும், பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளன.
இச்சம்பவம் இன்று அதிகாலை(28.12.2018) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய மேலும் வருவதாவது,
இந்தப் புத்தகக் கடையை நேற்று மாலை பூட்டிவிட்டுச் சென்ற நிலையில் இன்று அதிகாலை இப் புத்தகக் கடை எரிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியடையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
ஆனாலும் அங்கிருந்த...
உலக பொலிசாக அமெரிக்காவால் இனிமேலும் இருக்க முடியாது, மற்ற நாடுகளும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்
Thinappuyal News -
ஈரானுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், உலக பொலிசாக அமெரிக்காவால் இனிமேலும் இருக்க முடியாது என்றும், மற்ற நாடுகளும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவித்தார்.
அமெரிக்க செனட் சபையில் ஜனாதிபதி டிரம்ப் தாக்கல் செய்த நிதி மசோதாவை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி ஏற்க மறுத்து விட்டதால், செலவுக்கு பணமின்றி அமெரிக்க நிர்வாகம் கடந்த சில நாட்களாக முடங்கி கிடக்கிறது.
இந்நிலையில் டிரம்ப் நேற்று முன்தினம்...