மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க போட்டி நிலவுகிறது. டைரக்டர்கள் பாரதிராஜா, ஏ.எல்.விஜய், பிரியதர்ஷினி ஆகியோர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பிரியதர்ஷினி இயக்கும் படத்தில் ஜெயலலிதா வேடத்துக்கு நித்யாமேனன் தேர்வாகி உள்ளார். இந்த படத்தின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டு உள்ளனர். மற்ற கதாபாத்திரங்களுக்கு நடிகர்–நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஜெயலலிதா பிறந்த நாளில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர். ஏ.எல்.விஜய் இயக்கும் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க வித்யாபாலனை தேர்வு செய்து இருப்பதாக...
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தும்படி கூறியது டேவிட் வார்னர் தான் என்று பான்கிராப்ட் கூறியுள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் கடந்த மார்ச் மாதம் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட் சொரசொரப்பு காகிதத்தை கொண்டு பந்தை தேய்த்து அதன் தன்மையை மாற்ற முயற்சித்த போது கையும் களவுமாக சிக்கினார். இதற்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவன் சுமித்,...
குழந்தைகளுக்கு சத்தான சாலட் செய்து கொடுக்க விரும்பினால் கஸ்டர்ட் பழ சாலட் செய்து கொடுக்கலாம். இன்று இந்த கஸ்டர்ட் பழ சாலட் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பால் - கால் லிட்டர் ஆப்பிள் பழம் - 1 வாழைப்பழம் - 1 திராட்சை பழம் - 100 கிராம் மாதுளை முத்துக்கள் - அரை கப் முந்திரி பருப்பு - 50 கிராம் (தூளாக்கவும்) நாட்டு சர்க்கரை - தேவையான அளவு ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன் கஸ்டர்ட்...
இலங்கைக்கு சுற்றுலா சென்றால் அங்கு ரசிப்பதற்கு பல்வேறு இடங்கள் இருந்தாலும், பலவகையான உணவுகளும் நாவினை சுண்டி இழுக்கும் ருசியுடன் செய்யப்பட்டிருக்கும். எனவே இலங்கைக்கு சுற்றுலா சென்றால் தப்பித்தவறி கூட இதனை மிஸ் செய்துவிடாதீர்கள், கொத்து ரொட்டி இலங்கையில் மிகப்பிரபலமான உணவு. இலங்கையின் ரோட்டு ஓரக்கடைகளில் கூட இந்த கொத்து ரொட்டி விற்கப்படும்.காய்கறி, இறைச்சி, சோயா சோஸ், இஞ்சி மற்றும் பூண்டு போட்டு செய்யப்படுகிறது. அந்திநேரங்களில், நீங்கள் ரோட்டு ஓரம் நடந்துசென்றால் இந்த கொத்து ரொட்டி...
பாரீஸ் பாரீஸ் இப்பட டீஸர் சில தினங்களுக்கு முன் வெளியானது. படு வைரலாகவும் வீடியோ இருந்தது, ஒரு காரணம் டீஸரில் இருந்த ஒரு காட்சி. இப்படி ஒரு காட்சியில் காஜல் அகர்வால் எப்படி நடித்தார் என்று எல்லாம் பலர் புலம்பினர், இந்த டீஸருக்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதுகுறித்து இப்பட இயக்குனர் ராரமேஷ் அரவிந்த் கூறும்போது, டீஸரை தனியாக பார்க்கும் போது தான் அப்படித் தெரியும். அந்த காட்சியின் முன், பின்...
பொலிஸார் உத்தியோகத்திரின் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று அண்மையில் இடபெற்றுள்ளது. ஜா- எல தெற்கு நிவந்தம பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையினால் சந்தேக நபர் ஒருவர் கூறிய ஆயுதத்தால் தாக்கியமையாலேயே குறித்த உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது
பருத்தித்துறை மெத்தக்கடைச் சந்தியில் உளள சிவன் ஆலயத்திற்கு அருகாமையில் மதுபானசாலையை அகற்றக் கோரி பொது மக்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நகர சபை உறுப்பினர்கள் இணைந்து இன்று (27) கவனயீர்ப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர். பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்றுக காலை9.30மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது,பாடசாலைக்கு அருகில் மதுபானசாலையா,வியாபார உரிமம் இல்லாது இயங்கலாமா மதுபானக்கடை,வேணாம் வேணாம் மதுக்கடை வேண்டாம் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக...
ஐரோப்பாவில் அதிகம் இயங்கி வரும் இத்தாலியின் எட்னா எரிமலையைச் சூழவுள்ள சிசிலியில் ஏற்பட்ட 4.8 ரிச்டர் அளவு பூகம்பத்தில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எட்னா எரிமலை கடந்த திங்கட்கிழமை தொடக்கம் குமுற ஆரம்பித்ததை அடுத்து தொடர்ந்து அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டு வருவதோடு நேற்று இடம்பெற்ற இந்த புதிய பூகம்பத்தில் சில கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன. எரிமலை கக்கும் சாம்பல் புகை அருகில் உள்ள கிராமங்களை மூடியிருப்பதோடு...
தாய்லாந்து மேசைப் பந்து சம்மேளனம் மற்றும் தாய்லாந்து பரா மேசைப்பந்து சம்மேளனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த தாய்லாந்து திறந்த மேசைப்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற இலங்கை வீரர் தினேஷ் தேஷப்பிரிய தங்கப் பதக்கம் வென்றார். தாய்லாந்தின் சியெம் மே நகரில் உள்ளபான் லேன் டொங் உள்ளக அரங்கில் அண்மையில் நிறைவுக்கு வந்தகுறித்தபோட்டித் தொடரில் ஆண்களுக்கானஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இலங்கையின் தினேஷ் தேஷப்பிரியமற்றும்...