மத்தல விமான நிலையத்தில் இன்று காலை விமானம் ஒன்றில் தீ பரவியுள்ளது.
குறித்த விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ பரவலை தீ அணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தாக தெரிவித்துள்ளனர்.
குறித்த தீயானது சரக்கு விமானத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த விமானம் நேற்று மாலை தாய்லாந்திருந்து மத்தல விமானத்திற்கு வந்து இன்று காலை ஓமான் நோக்கி பயணம் செய்வதற்கு தயாரான நிலையில் தீ பரவியுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
குறித்த விமானத்தில் ஏழு பேர் மாத்திரம் தங்கியிருந்ததாகவும் எவருக்கும் பாதிப்பில்லையெனவும்...
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இறுதியுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு ஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என்பன நேற்று வழங்கிவைக்கப்பட்டது.
அரியாலை சுதேசிய நூற்றாண்டு விழா சமூகத்தினரால் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்சியான நிவாரணபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் முதற்கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட புளியம்பொக்கணை,பெரியகுளம்,தரம்புரம்,வட்டக்கச்சி ஆகிய பிரதேச மக்களுக்கு கடந்த 23.12.18ஆம் திகதி உலர் உணவு பொருட்கள் மற்றும் ஆடைகள் வழங்கி...
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆட்காட்டி வெளி பங்கு, ஆட்காட்டி வெளி- பருப்புக்கடந்தான் பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 40 வருடங்கள் பழமை வாய்ந்ததும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான புனித கர்த்தர் சொரூபம் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு குறித்த வீதியூடாக கறோல் நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் குறித்த வீதியூடாக பங்கு மக்கள் சென்று கொண்டிருந்த போதே குறித்த...
இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பாண்ட் ஆகியோருக்கு போதுமான அளவு வாய்ப்பு கொடுக்கப்பட்டுவிட்டதால், டோனியை மீண்டும் அணியில் சேர்த்தோம் என்று தேர்வுக்குழு தலைவர் பிரசாத் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி, அதன் பின் நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.
இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது....
ஆழி பேரலையில் காவு கொள்ளப்பட்ட உன்னத உயிர்களுக்கு இன்று சரியாக காலை 9.05 மணியவில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
பேரலையின்போது உயிர்களை நீர்த்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி நினைவு கூர்ந்து வழிபாடுகளில் ஈடுபடும் நிகழ்வு இன்று காலை 9.5க்கு நாவலடி கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்ட சுனாமி நினைவுத் தூபியில் இடம்பெற்றுள்ளது .
குறித்த நாவலடி பகுதியில் ஆகக் கூடிய 568 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள் கடந்த நிலையில் குறித்த...
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் டெஸ்டில் இலங்கை வீரர் லக்மலின் அபார பந்துவீச்சில் நியூசிலாந்து அணி 178 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளது.
இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜீத் ராவல், டாம் லாதம் களமிறங்கினர். இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மலின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இருவரும்...
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியின்போது பணநாயகத்தின் பிடியிலிருந்து ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் சில நிபந்தனையின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்கியதாக அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிநேசன் தெரிவித்தார்.
ஒளிவிழா மற்றும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு - ஏறாவூர் எல்லை நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
கிராம அபிவிருத்திச்சங்கச்...
நம்முடைய முகமானது, வெயில், சுற்றுப்புற மாசு ஆகியவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டு வெண்மையான நிறத்தின் பொலிவினை இழக்கச் செய்கிறது.
மேலும் முகத்திற்கு போடும் சிலவகை க்ரீம்களை நாம் பயன்படுத்துவதால், சருமத்தின் செல்கள் அழிந்து, முகத்தில் கருமை நிறம் அதிகரித்து, சருமத்தில் சுருக்கங்கள் போன்ற பலவிதமான சருமப் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
எனவே கடுமையான வெயில் காரணமாக நமது முகப் பொலிவின் அழகை தடுப்பதற்கு நமது வீட்டிலேயே இருக்கு அற்புதமான சில வழிகள்!
பால் மற்றும் தேன்
ஒரு...
நாட்டை சர்வாதிகாரத்திற்கு கொண்டு செல்கின்ற முயற்சியை தடுத்து நிறுத்திய பெருமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையே சாரும் என அக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அத்துடன் தென்னிலங்கையில் உள்ள மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான மதிப்பு இன்று வானுயர வளர்ந்திருக்கின்றது. இது புதிய அரசமைப்புத் தொடர்பில் அவர்களுடன் உரையாடும்போது, அவர்களிடம் அதனைக் கொண்டு செல்கின்றபோது எங்கள் மீதுள்ள அந்த...
பொதுவாக தொடை, வயிறு, கை, போன்ற பகுதியில் இருக்க கூடிய கொலஸ்ட்ராலை நம்மால் முயன்றவரை டயட், ஜிம், உடற்பயிற்ச்சிகள் மூலம் குறைக்க இயலும். ஆனால் முகத்தில் இருக்கும் அதிகப்படியான கொலஸ்ட்ராலை நாம் இலகுவில் குறைப்பது என்பது கடினம்.
பொதுவாக வெங்காயத்தின் பயன்கள் எண்ணில் அடங்காதவை என்பது அனைவரும் அறிந்ததே.
உடலில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை குறைக்க இந்த வெங்காயம் பெரிதும் உதவும்.
வெங்காயாத்தை வைத்து எளிதாக முகத்தில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ரால் எப்படி குறைப்பது என்று...