என்னுடைய அமைச்சைப் பயன்படுத்தி சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாது எனத் தெரிவித்த, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியே வந்தால் மாத்திரமே அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் எனவும் குறிப்பிட்டார். அரசியல் நெருக்கடி நிலை தீர்க்கப்பட்டு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சராக இன்று அமைச்சுப் பொறுப்புக்களைப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர்...
தமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். இவரது நடிப்பில் சமீபத்தில் கூட ரஜினியின் 2.0 படம் வெளிவந்திருந்தது. லண்டனை பூர்விகமாக கொண்ட இவர் பெரும்பாலும் அங்கு தனது காதலருடன் தான் இருப்பார். அங்கிருந்தபடியே தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் வாழ்த்தை தெரிவிக்கும் வகையில் தனது காதலருடன் உதடோடு உதடு கிஸ் அடித்த படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது தான் தற்போது...
ஜப்பானில் வர்த்தக அடிப்படையிலான திமிங்கல வேட்டை மீண்டும் வரும் ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் திமிங்கல இறைச்சி விரும்பி உண்ணப்படுகிறது. கடலோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல நூற்றாண்டுகளாக திமிங்கல இறைச்சியை விரும்பி சாப்பிட்டாலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகே அதன் நுகர்வு அதிகரித்தது. தற்போது திமிங்கல இறைச்சி சாப்பிடுவது குறைந்துள்ளது. ஒரு சில பகுதிகளில் இறைச்சிக்காக திமிங்கலங்கள் வேட்டையாடப்படுகின்றன. அதேசமயம் அறிவியல் ஆராய்ச்சிக்காக ஜப்பான் அரசு குறிப்பிடத்தகுந்த...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 1-1 என முடிந்தது. தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்...
புரோ கபடியில் தமிழ்தலைவாஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி டையில் (சமன்) முடிந்தது. 12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் கொல்கத்தாவில் நேற்றிரவு அரங்கேறிய 127-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, அரியானா ஸ்டீலர்சை சந்தித்தது. இதில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்த வண்ணம் இருந்தன. முதல் பாதியில் தமிழ் தலைவாஸ்...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படம் வெளிநாடுகளில் 9-ஆம் தேதி ரிலீசாகவிருப்பதாக கூறப்படும் நிலையில், அதற்கு அடுத்த நாளில் இந்தியாவில் படம் ரிலீசாகும். ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படம் வருகிற பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது. பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ்,...
கிளிசரினை பயன்படுத்துவதன் மூலம் உதடுகளில் படிந்திருக்கும் இறந்த செல்களும் நீங்கிவிடும். புதிய செல்களின் வளர்ச்சிக்கும் கிளிசரின் அவசியமானது. குளிர்காலத்தில் உதடு வெடிப்பு, உலர்தன்மை போன்ற பிரச்சினைகளுக்கு கிளிசரின் நிவாரணம் தரும். உதடு உலர்வடைவதை தடுத்து ஈரப்பதத்தை தக்க வைக்க இது உதவும். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சிறிதளவு கிளிசரினை பஞ்சில் முக்கி உதடுகளில் தடவி வரலாம். தொடர்ந்து அவ்வாறு செய்து வருவதன் மூலம் உதடுகள் உலர்ந்து போவதை தவிர்க்கலாம். உதடுகள் மிருதுவாகவும்,...
ஸ்ரீ தர்ம சாஸ்தா பீடம் கணேசபுரம், வவுனியா மகரஜோதி மண்டல பெருவிழா எதிர்வரும் 28.12.2018 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6.00 மணியளவில் கணேசபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து 18 வகையான மலர்கள் எடுத்து வரப்பட்டு ஸ்ரீ ஹரிஹர சுதனுக்கு புஷ்பாஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்விற்கு அனைத்து ஐயப்ப சுவாமிமார்கள் மற்றும் அடியார்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஸ்ரீ தர்ம சாஸ்தா பீடம், கணேசபுரம், வவுனியா.
குளிர்காலத்தில் அவசியம் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும். ஏனெனில் குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். சரும ஆரோக்கியமும் பாதிப்புக்குள்ளாகும். அவற்றை சீராக பராமரிக்க ஆரஞ்சு பழம் உதவும். குளிர்காலத்தில் செரிமான செயல்பாடுகளும் மந்தமாக இருக்கும். அதனை துரிதப்படுத்துவதிலும் ஆரஞ்சு பழத்தின் பங்களிப்பு இருக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் குளிர்காலத்தில் தவறாமல் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும். அதில் இருக்கும் நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தும். கலோரியும் செலவாகும். ஆரஞ்சு...
நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி அதில் முதற்கட்டமாக நியூசிலாந்துடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. கடந்த 19ஆம் திகதி இடம்பெற்று முடிந்த இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சமநிலை அடைந்ததை அடுத்து, தொடரினை தீர்மானிக்கும் இரண்டாவதும் இறுதியுமான ஆட்டம் இன்று புதன்கிழமை (26) கிறிஸ்ட்ச்சேர்ச் நகரில் தொடங்குகின்றது. வெலிங்டன் நகரில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட்டில் நடைபெற முடியாத விடயங்கள்...