2019ம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் 8 .4 கோடிக்கு பஞ்சாப் அணிக்கு ஏலம் போன தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் என கூறியுள்ளார். 2019ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்க்கு 20 லட்சத்தில் ஏலத்திற்கு வந்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை, 8 .4 கோடிக்கு...
நுகர்வோருக்கு  பாதிப்பு ஏற்படுத்த கூடிய வகையில் செயற்பட்ட 13 வியாபார நிலையங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிலாபம் பகுதியில் செயற்பட்டு வந்த  வியாபார நிலையம் ஒன்றில் பொதுமக்களின் பாவனைக்கு பயன்படுத்த முடியாத பொருட்களை  விநியோகம் செய்த மற்றும் களஞ்சியப்படுத்தி வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிவித்ததாவது, சிலாபம் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இரண்டு நாட்கள் மேற்கொண்ட  சுற்றுவளைப்பின் போது  அசுத்தமான முறையில் செயற்பட்ட  13 வியாபார நிலையங்கள் இனங்காணப்பட்டுள்ளது. சிலாபத்தை அண்டிய...
ஐ.தே.க  கட்சியின் கட்சி  கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு சிறிகொத்தலாவையிலுள்ள ஐ.தே.க. தலைமை காரியாலயத்தில் பிரதமர் ரணில் விக்கரம சிங்க தலைமையில் கூட்டம் கூடவுள்ளது. தேசிய ஜனநாயக முன்னணி  என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்க ஆலோசனை ஒன்று சபையில் முன்வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையின் அரசியல் நெருக்கடி, அமைதியாக, அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு அமைய தீர்க்கப்பட்டிருப்பதை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்ரனியோ குரெரஸ்  வரவேற்றுள்ளார்.நியூயோர்க்கில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரின் பேச்சாளர் ஸ்டீபன் இதனை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், இலங்கையின் ஜனநாயக அமைப்புகளின் ஆற்றலை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பாராட்டியுள்ளதாகவும், ஜனநாயகத்தை மதிப்பது,மக்களின் நலன்களுக்காக, நாட்டில் உள்ள அனைத்து தரப்புகளும், அரசியல் வேறுபாடுகளை தீர்ப்பதற்கு புதிய அமைச்சரவை நியமனத்தின்...
நாட்டின் சிறார்களுக்கு சீரான கல்வியை பெற்றுக்கொடுப்பதனை நோக்காக கொண்டு செயற்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் மீளவும் செயற்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். கல்வி அமைச்சசில் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் கல்வி அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், நாட்டின் கல்வி கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டு செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் சட்டவிரோத அரசியல் மாற்றங்களினால் கடந்த 50...
ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நத்தார் விழா பேராயர் காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினதும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவினதும் தலைமையில் நேற்று கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இந்த நத்தார் விழாவில் இலங்கைக்கான திருத்தந்தையின் பிரதிநிதி மேன்மைமிகு பியரே நுயன் வென் டொட் ஆயர் அவர்கள் உள்ளிட்ட அருட் தந்தைகள் மற்றும் அருட் சகோதரிகள், சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் ஜோன் அமரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, ஆர்.சம்பந்தன்...
பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் பதவி வகிக்கக் கூடிய தகுதி பெரும்பாண்மை அடிப்படையில் எம்மிடமே காணப்படுகின்றது என மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பில் 16 உறுப்பினர்களே காணப்படுகின்றனர். ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் 98 உறுப்பினர்கள் உள்ளனர். இரா.சம்பந்தன் நீண்ட கால அரசியல் அனுபவம் உள்ளவர் என்ற அடிப்படையில் கௌரவமான அதனை எம்மிடம் ஒப்படைத்துச் செல்வதே சிறந்ததாகும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மஹிந்த...
ஹாங்காங்கை சேர்ந்த வாங் சிங் கிட் என்ற மில்லியனர் பெரிய மாடியின் கட்டிடத்தில் ஏறி நின்றுகொண்டு பணத்தினை பொதுமக்கள் மீது வீசியுள்ளார். கிரிப்டோகரன்சிகளில் செய்த முதலீடு மூலம் நிறைய கோடிகளை சம்பாதித்து உள்ளார் வாங் சிங் கிட். 24 வயதான இவர் சொகுசு காரில் வந்திறங்கி ஹாங்காங்கின் ஷாம் ஷு பேய் என்ற பகுதியில் உள்ள மாடிக் கட்டிடம் ஒன்றின் மாடியில் விறுவிறுவென ஏறி, பணத்தை அள்ளி எறிந்துள்ளார். புதிய புதிய கிரிப்டோகரன்சிக்கு...