மக்களை வறுமையிலிருந்து விடுவித்து அவர்களுக்கு சிறந்ததோர் வாழ்க்கை நிலையை ஏற்படுத்திக் கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
Thinappuyal -0
நாட்டு மக்களை வறுமையிலிருந்து விடுவித்து அவர்களுக்கு சிறந்ததோர் வாழ்க்கை நிலையை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு அனைத்து ஆட்சியாளர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என கொழும்பு பேராயர் காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நத்தார் விழா பேராயர் காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோர் தலைமையில் நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...
நாட்டில் கடந்த 51 நாட்களாக இடம் பெற்ற அரசியல் நெருக்கடி சர்வதேச அரங்கில் தாக்கம் செலுத்தியது. பல பாரிய அபிவிருத்திகளுக்கு சர்வதேசமே தடையினை விதித்தது. கடந்த அரசாங்கத்தில் இழுப்பறி நிலையில் காணப்பட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை நாங்கள் குறுகிய காலத்திற்குள் முழுமைப்படுத்தினோம். என பாரிய நகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பாரிய அபிவிருத்திகள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் பொறுப்புக்களை இன்று...
இன்றைய இளம் பெண்களின் அழகைக் கெடுக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது முகப்பரு. முகப்பரு வந்தால் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.
பரு முகத்தில் வருவதால், பருவக்கான கிரீமோ, பேக்கோ போட்டால் பரு போய்விடும் என்று பல பெண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் தலையில் பொடுகுப் பிரச்சனை இருப்பவர்களுக்கு முகத்தில் பரு வருகிறது. ஸ்கால்பில் உள்ள பாக்டீரியாக்கள் முகத்திற்கு இறங்கி வருவதால் அவை படும் இடங்களில் எல்லாம் பரு வருகின்றது. அதனால்...
"பாராளுமன்றிற்குள் சிவில் உடையில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நடமாடுகின்றனர்” என தயாசிறி ஜயசேகர சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றில் சிவில் உடையில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நடமாடுவதாகவும் இவ் விடயம் தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் தயாசிறி தெரிவித்தார்.
அரசியலமைப்பிற்கு முரனாக செயற்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஜனநாயகத்தை மதிப்பார் என்பது சந்தேகத்திற்கிடமானது. இவர் தொடர்ந்து ஜனாதிபதி பதவியை வகிக்க தகுதியற்றவர். ஆகவே ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம் பெற வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசியலமைப்பினையும், பொதுச்சட்டத்தினையும் முதலில் ஜனாதிபதி மதிக்க வேண்டும். நாட்டு தலைவரை பின்பற்றியே நாட்டு மக்கள் அரசியல் ரீதியான தீர்மானங்களை மேற்கொள்வார்கள். சாதாரண பிரஜை ...
சிவகார்த்திகேயனுக்கு அதிர்ச்சி கலந்த சர்ப்பிரைஸ் கொடுத்து கண்கலங்க வைத்த டிவி சானல்
Thinappuyal News -
சிவகார்த்திகேயன் இன்று அஜித், விஜய் போன்ற டாப் ஹீரோக்களில் வரிசையில் இடம் பிடித்து விட்டார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் அவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.
டிவி சானலில் போட்டியாளராக இருந்து ஒரு ஸ்டார் நிகழ்ச்சி தொகுப்பாளாராக இருந்து இன்று சினிமாவில் ஸ்கோர் செய்து வருகிறார். கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் ஆகிவிட்டார்.
இந்நிலையில் முன்னணி சானல் ஒன்று அவரை கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது. அதில் அவருக்கு காணொளியில்...
விரைவில் மீண்டும் ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தை கவிழ்ப்போம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தங்களை ஆட்சியமைக்க இடமளிக்கவில்லை. எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. நான், பிரதமராக பதவியேற்றபோது அதனைச் செய்தேன்.
இலங்கை பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் இருப்பவர்கள் தமது ஆசனங்கள் நிலையானவை என நம்பியிருக்க கூடாது நாங்கள் விரைவில்...
திருகோணமலை, சாந்திபுரம் காட்டுப் பகுதிக்குள் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் கீழ் 07 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சாந்திபுரம் பொலிஸாரின் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் தோண்டும் நடவடிக்கைக்கு பயன்படுத்திய பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் கைதுசெய்யப்பட்டவர்கள் பாணந்துரை, களுத்துறை, தெஹியோவிட்ட, தொடகொட மற்றும் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
இராஜகிரிய பகுதில் கடும் வாகன நெரிசல் காரணமாக மாற்றுவழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
இராஜகிரியப் மேம்பாலம் அமைந்துள்ள பகுதியிலேயே இவ்வாறான நிலை காணப்படுவதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் காரணமாக சாரதிகளை மாற்று வீதி பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து மத சமய அலுவல்கள் அமைச்சராக நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட மனோகணேசன் இன்று தனது அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார்.
இதன் போது உரையாற்றிய அவர், நாட்டில் அரசியல் நெருக்கடியானது தீர்க்கப்பட்டது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியென குறிப்பிட்டுள்ளார்.