"வரி சுமைகளை குறைத்து மக்களை பாதுகாக்கவும்" என மகிந்த தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில்  உரையாற்றும் போது தங்களை ஆட்சியமைக்க இடமளிக்கவில்லை. எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. நான், பிரதமராக பதவியேற்றபோது அதனைச் செய்தேன். வரியை அதிகரிக்கும் போதும் விலைகளை அதிகரிக்கும் போதும், பட்டினியில் இருக்கும் மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தவும். சர்வதேச நாணய நிதியம் கூறுவதை மட்டும் செய்யவேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அவர், மக்களின்...
இன்று அதிகாலை தொடக்கம் பெல்மதுல கல்பொத்தாவெல ஸ்ரீபாத ரஜமஹா விகாரையில் இருந்து புத்த பெருமானின் புனித பொருட்களுடன் கூடியதாக சமன் தெய்வத்தின் உருவச்சிலை ஊர்வலமாக சிவனொளிபாத மலையை நோக்கி எடுத்துச் செல்லப்படவுள்ளதாக பெங்கமுவ தம்மதின்ன தேரர் தெரிவித்தார்.இரத்தினபுரி - அவிசாவளை - ஹட்டன் மார்க்கத்தின் ஊடாகவும், பெல்மதுல - பலாங்கொட மார்க்கத்தின் ஊடாகவும், இரத்தினபுரி - பலாபத்தல ரஜமாவத்தை ஊடாகவும் மூன்று பெரஹராக்கள் இடம்பெறுகின்றன. சிவனொளிபாத மலை செல்லும் பக்தர்களுக்கு...
(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்)   கேள்வி : வவுணதீவு பிரதேசத்தில் இரு பொலிசார் சுடப்பட்டதன் பின்னணியில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகளது உறவினர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அது தற்போது முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் தற்பொழுது அங்கு நிலைமைகள் எவ்வாறு இருக்கிறது என்பது பற்றி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலே உங்களுடைய கருத்து என்ன?         பதில் : உண்மையில் மாவீரர் தினத்திற்கு அடுத்த நாள்...
அனைத்து  பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதற்கமைய கொழும்பு புறக்கோட்டை மற்றும்  டெக்னில் சந்தி, லோட்டஸ் வீதி ஆகியன  மூடப்பட்டுள்ளதோடு சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  இலங்கைத்துறைக் கிராமத்தில் 14 வயதான குறித்த சடலம் நேற்று புதன்கிழமை (18) குறித்த சிறுமியின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு சென்று அச்சிறுமி வசித்து வந்த வீட்டிலிருந்து சடலத்தை மீட்டதுடன் மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குழந்தைகளுக்கு பாஸ்தா, சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் சேர்த்து சூப்பரான பாஸ்தா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மக்ரோனி பாஸ்தா - 1 கப் சீஸ் - 1/2 கப் உருளைக்கிழங்கு - 1 குடை மிளகாய் - 2 டேபிள்ஸ்பூன் தக்காளி சாஸ் - 1 டேபிள்ஸ்பூ சில்லி ஃப்ளேக்ஸ் அல்லது மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன் மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் -...
போலியான கடிதத் தலைப்புக்களுடன் உதவி கோரி நிதி வசூலிப்போர் தொடர்பில் எச்சரிக்கையாய் இருக்குமாறு ஏறாவூரின் பொது அமைப்புக்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன. நோய்க்கான சிகிச்சைக்கு நிதியுதவி, பிள்ளைகளின் கல்விக்கான செலவுகளுக்கு உதவி கோரல், பொதுக்  கட்டடங்கள் நிருமாணத்திற்கு நிதியுதவி, வாழ்வாதாரத் தொழிலைத் தொடங்க நிதியுதவி, அநாதைகளைப் பராமரிக்க, வழிபாட்டுத் தலங்களை அமைக்க நிதி உதவி, சமயச் சடங்குகளை மேற்கொள்ள நிதி உதவி இவ்வாறு பல்வேறு வேண்டுகோள்களை முன்வைத்து நிதி வசூலிப்பதற்காக...
இடைக்கால வரவு - செலவு திட்டத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. அதனை பாராளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டியுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அமர்வின் போது இடைக்கால வரவு - செலவு திட்டம் சமர்பிக்கப்படலாம் என காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். ஜனாதிபதி செயளகத்தில் இன்று வியாழக்கிழமை காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு பதவியினைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு தங்க நகைகளை கடத்த முற்பட்ட  வெல்லம்பிட்டியவை சேர்ந்த நபரொருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் சிங்கப்பூரிலிருந்து  கட்டுநாயக்கா விமான நிலையம் நோக்கி பயணித்த NO UL  307 விமான சேவையூடாக நேற்று  இரவு  11.30 மணியளவில்   கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதனையடுத்து சந்தேகத்திற்கிடமான  முறையில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயற்சித்த  மேற்படி நபரிடம்   சுங்க அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையிலேயே...
பிரதமர்   ரணில்   விக்ரமசிங்க தலைமையிலான    புதிய   அமைச்சரவையினால்   எவ்விதமான   மாற்றங்களையும்    இடைப்பட்ட   காலத்தில்      நாட்டில்    மேற்கொள்ள முடியாது.     ஜனாதிபதி  மைத்திரிபால  சிறிசேன    முக்கியமான  பொறுப்புக்களை தனது    பொறுப்பின்  கீழ்   கொண்டு   வந்துள்ளமையானது  ஐக்கிய   தேசிய   கட்சியின்    செயற்பாடுகளுக்கு   தடையாக   அமையும்   என   பாராளுமன்ற  உறுப்பினர்    செஹான்     சேமசிங்ஹ     தெரிவித்தார். அவர்  மேலும்   குறிப்பிடுகையில், தேசிய ...