பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக சிறைச்சாலை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே திடீர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நடுத்தர மக்களிற்கு என்ன செய்தீர்கள் என இந்திய பிரதமர் நரேந்திரமோடியிடம் தொண்டர் ஒருவர் கேள்வி எழுப்பிய சம்பவம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது
புதுவை மாநில தொண்டர்களுடன் மோடி வீடியோ கொன்பரன்ஸ் முறையில் உரையாடிய வேளை தொண்டர் ஒருவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
நரேந்திர மோடி உரையாற்றிய பின்னர் அவர் தொண்டர்களின் கேள்விகளிற்கு பதில் அளித்துக்கொண்டிருந்தவேளை தொண்டர் ஒருவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
நிர்மல் குமார் ஜெயின் என்பவர் நடுத்தர மக்களிடமிருந்து வரியை வசூலிப்பது குறித்து...
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமா, கிறிஸ்துமஸை முன்னிட்டு நத்தார் தாத்தாவாக வேடமணிந்து குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சாண்டா தொப்பி அணிந்து பை நிறைய பரிசு பொருட்களை கொண்டு தேசிய குழந்தைகள் வைத்தியசாலைக்கு சென்ற ஒபாமாவை பார்த்து அந்த வைத்தியசாலையில் இருந்த குழந்தைகள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இரு பெண் பிள்ளைகளின் தந்தையான நான், அந்த தருணத்தில் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளும் செவிலியர்,பணியாளர்கள்,வைத்தியசர்களின் பணி மிக முக்கியமானது. அவர்களுக்கு...
விஜய் சேதுபதி நடிப்பில் சீதக்காதி படம் இன்று ரிலீசாகியிருக்கும் நிலையில், இந்த ஆண்டு குறித்து பேசிய விஜய் சேதுபதி காரணமே தெரியாமல் ரூ.11 கோடி ரூபாயை இழந்ததாக கூறினார்.
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் சீதக்காதி படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், அவர் அளித்த பேட்டியில், கூறியிருப்பதாவது:
2018-ம் ஆண்டு எப்படி போனது?
இந்த ஆண்டு திருப்திகரமாகத்தான் இருந்தது. ஆனால் பணரீதியாக மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தேன். காரணங்கள் என்ன...
மற்ற மொழிகளில் நடிப்பதை விட தமிழில் நடிக்கவே விரும்புவதாக கூறிய ஹன்சிகா, தான் ஒரு தமிழ் பட நடிகை என்று சொல்வதில் பெருமைப்படுவதாக கூறினார்.
துப்பாக்கி முனை படத்தை தொடர்ந்து ஹன்சிகா அடுத்ததாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள மஹா என்ற படத்தில் நடித்து வருகிறார். யு.ஆர்.ஜமீல் என்ற புதுமுக இயக்கும் இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகின.
இந்த நிலையில், ஹன்சிகா அளித்த பேட்டியில் இருந்து,
“நான் அடிப்படையில் புத்தர் கொள்கைகளைப் பின்பற்றுகிறேன்....
சிங்களத்தில் தண்டப்பத்திரம் எழுதிக்கொடுத்தமைக்காக வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா யாழ்.பிராந்திய மனிதவுரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த முறைப்பாடு தொடர்பில் இன்றைய தினம் மனிதவுரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் பிராந்திய பணிப்பாளர் த.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது.
அதன் போது , கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , மற்றும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் பிரசன்னமாகி இருந்தனர்.
இன்றைய தினம் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட நிலையில் விசாரணைகள் எதிர்வரும்...
சிலாபம் - அலாவத்தை பகுதியில் ஏற்பட்ட தீ பரவலால் காரணமாக ஏழு வியாபார நிலையங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
சிலாபம் நகர சபைக்கு சொந்தமான வீதியோர வர்த்தக தொகுதியிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
அலாவத்தை பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல் காரணமாக பஸ் தரிப்பிடத்திற்கு அருகிலுள்ள ஏழு கடைகள் தீக்கிரையானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு...
எரிபொருள் விலை சூத்திரத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் மங்கள கருத்து.
Thinappuyal -
எரிபொருள் விலை சூத்திரத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாக நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சில் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்று உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய மாதாந்தம் 10 ஆம் திகதி மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.
இந்த மாற்றங்கள் காரணமாக பஸ், மற்றும் முச்சக்கர வண்டிக் கட்டணங்களிலும் தொடர்ச்சியான மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் விலை சூத்திரங்கள்...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரைக் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த திங்கட்கிழமை (17) மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அட்டாளைச்சேனை -08 ஆம் பிரிவைச் சேர்ந்த ஏ. எல். இமாமுத்தீன் (வயது 45) என்பவரே காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி முஹம்மது றேசம்பீவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டு மனநல வைத்திய பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...
கொழும்பு – கோட்டை ரயில் நிலையம் முன்பாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டிருக்கும் இருவருக்கு ஆதரவு தெரிவித்து வெலிமடைப் பகுதி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்தக் கோரியும்,கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் விலகிவிடல் வேண்டுமென்று கோரியும் மலையக இளைஞர்கள் இருவர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவளிக்கும் முகமாகவே வெலிமடைப் பகுதி தோட்டத் தொழிலாளர்கள் பணிப்...