நண்பரது தாயின் மரணவீட்டுக்குச் சென்று திரும்பிய சகோதரர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையில் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதுண்டு பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவத்தில் மட்டக்களப்பு – திருகோணமலை வீதி வெருகல், மாவடிச்சேனையைச் சேர்ந்த தங்கராசா விஜிகரன் (வயது 21) மற்றும் அவரது ஒன்று விட்ட சகோதரனான சின்னவன் வசந்தராஜ் (வயது 22) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். முன்னதாக உயிழந்த விஜிகரனின் சடலம் புதன்கிழமை மாலை  அடக்கம்...
காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி ஹீரோயின். விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி என இங்கு ஜோடி போட்டு விட்டார். அதே போல தெலுங்கிலும் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். குயின் படத்தின் ரீமேக்கிலும் நடித்துள்ளார். தற்போது இவரும் கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார். கமல்ஹாசனுடன் அடுத்தது இந்தியன் 2 படத்திலும் நடிக்கவுள்ளார். இதற்காக களரி சண்டை பயிற்சியை கற்று...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினூடாக கடந்த பொதுத் தேர்தலின் போது பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர சபாநாயகருக்கு தெரிவித்துள்ளார். குறித்த அறிவிப்பினை மஹிந்த அமரவீர  சபாநாயகர் கருஜயசூரியவுக்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 3 மாத காலப்பகுதிக்கான அரசாங்கத்தின் செலவுகளை சமாளிப்பதற்கென இடைக்கால கணக்கு அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதார நிலைமை மற்றும் தற்பொழுது இலங்கையிலுள்ள பொருளாதார சூழ்நிலை தொடர்பில் கவனத்திற்கொண்டு வழங்கக்கூடிய ஆகக்கூடிய நிவாரணத்தைப் பொதுமக்களுக்குப் பெற்றுக்கொடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். வழங்கக்கூடிய பொதுமக்களுக்கான ஆகக்கூடிய நிவாரணத்திற்கான விடயங்களும் இடைக்கால கணக்கு அறிக்கையில் உள்வாங்குமாறு பிரதமர், இலங்கை மத்திய வங்கிக்கு அறிவித்துள்ளார். அடுத்த...
நயன்தாரா தற்போதெல்லாம் முன்னணி ஹீரோக்களே செய்ய தயங்கும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகின்றார். அந்த வகையில் இவர் தற்போது கொலையுதிர் காலம் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் ஜனவரி மாதம் திரைக்கு வர, இதை பில்லா-2 இயக்குனர் சக்ரி தான் இயக்கியுள்ளார். இப்படம் முழுக்க லண்டனில் தான் எடுக்கப்பட்டதாம், ஒரு நாள் இரவு லண்டனில் மொழி தெரியாமல் கஷ்டப்படும் ஒரு பெண்ணின் கதை, அவள் என்ன கஷ்டங்களை சந்தித்து அதிலிருந்து...
முன்னாள்  இராணுவ தளபதி சரத்பொன்சேகாவிற்கு அமைச்சு பதவியை வழங்குவதற்கு பிடிவாதமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பதவியேற்றுள்ள புதிய அமைச்சரவையில் சரத்பொன்சேகா இடம்பெறாத நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது ஐக்கியதேசிய கட்சியினர் பலதடவைகள் வேண்டுகோள் விடுத்தபோதிலும் சிறிசேன சரத்பொன்சேகாவை நியமிக்க மறுத்துள்ளார் என  தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் நெருக்கடி ஆரம்பமானதன் பின்னர் சரத்பொன்சேகா தனது நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார் என்;பதை காரணம்...
நாவற்குழி பகுதியில் தனித்திருந்த மூதாட்டியை கட்டி வைத்து தாக்கி விட்டு அவரின் சங்கிலி , தோடு என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். நாவற்குழி பகுதியில் உள்ள வீடொன்றில் மூதாட்டி ஒருவர் தனிமையில் வசித்து வருகின்றார். அவரின் வீட்டு கூரையை பிரித்து நேற்று அதிகாலை உட்புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று மூதாட்டியை தாக்கி , அவரின் முகத்தை துணியால் கட்டி அவரை அங்கிருந்த கதிரை ஒன்றில் கட்டி வைத்து விட்டு அவர்...
வெலிமட, பொரலந்தை பிரதேசத்தில் பஸ் தரிப்பிடத்தில் தனியார் மற்றும் இ.போ.ச  பஸ் பணியாளர்களிடையே இடம்பெற்ற கை கலப்பில் தனியார் பஸ் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, பஸ் போக்குவரத்து நேர அட்டவணை சம்பந்தமாக இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெலிமட -கெப்பெடிபொலவிலிருந்து பொரலந்தையை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸூடன் கெப்பெட்டிபோல டிப்போவுக்கு சொந்தமான இ.போ.ச பஸ் பணியாளர்களிடையே இடம்பெற்ற கை கலப்பில் தனியார் பஸ் சாரதி ஒருவர்...
இருவேறு விபத்து சம்பவங்களில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த வவுனியா மதகு வைத்த குளத்தை சேர்ந்த 26 வயதுடையை இளைஞன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். அதேவேளை நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) மோதி விபத்துக்குள்ளான கிளிநொச்சி பரந்தனையை சேர்ந்த ...
நாட்டில் குறிப்பாக வடக்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றிலிருந்து 21 மற்றும் 22ஆம் திகதிகளில் மழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம்...