அவமானத்துக்கு உட்பட்டு பதவியில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்படாமல் தானாகவே பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகியதை தான் வரவேற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு...
ஹொரணை பகுதியில்  பொலிஸ் அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்தி தொலைபேசியூடாக வர்த்தகர்களை மிரட்டி கப்பம் பெற்ற சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து  ஒரு கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட  விசாரணைகளுக்கு அமைய அவர்கள் 35 வயதுடைய ஹொரணை பகுதியை சேர்ந்த கணிஷ்க கயான் மோதிலால் எனப்படுபவர் எனவும் 50 வயதுடைய புலத்சிங்கள பகுதியை சேர்ந்த  பந்துல எனப்படுபவர்கள்...
நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது   புதையல்  அகழ்வில் ஈடுபட்ட  25  பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர். குறித்த கைது நடவடிக்கைகள் நேற்று வெள்ளி மற்றும் இன்றும் இடம் பெற்றுள்ளதுடன், 19  வயதிற்கும் 75 வயதிற்கும் இடைப்பட்ட சுமார்  25 சந்தேக நபர்களே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் வாழைச்சேனை , அல்பிட்டிய மற்றும் அதிமலை ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக பொலிசார் மேலும்...
வவுணதீவு கொலை சம்பவத்தை  கண்டித்து மட்டக்களப்பில் பாரிய  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப் பட்டுள்ளது . தமிழர்  ஐக்கிய சுதந்திர கூட்ட்டமைப்பின் ஏற்பாட்டில் காந்தி பூங்காவிற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது கடந்த 30 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட இரு பொலிஸாரினதும் கொலைக்கு நீதி வேண்டியும் உடனடியாக கொலையாளிகளை கைது  செய்யக்  கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் பாரிய  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப் பட்டுள்ளது . தமிழர்  ஐக்கிய...
சுகாதார அமைச்சராக மீண்டும் ராஜித்த சேனாரத்னவை நியமிக்க கூடாது என ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக சுகாதார அமைச்சராக ராஜித்த சேனாரத்ன இருந்த போது சுகாதாரத்துறை முற்றாக சீர் குலைந்துள்ளது இந் நிலையில் மீண்டும் அவர் சுகாதார அமைச்சராக பதவியேற்றால் மருத்துவ துறையில் பாரிய நெருக்கடி ஏற்படுமென அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர்களின் சங்கத்தின் செயலாளர் நளிந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு...
யாழ்ப்­பா­ணம் பண்­ணைப் பாலப் பகு­தி­யில் வீதி­யைக் கடக்க முற்­பட்ட ஒரு­வரை வேக­மாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி­ய­தில் அவர் உயி­ரி­ழந்­துள்ளதாக யாழ்ப்­பா­ணம் பொலி­ஸார் தெரி­வித­த­னர். யாழ்ப்­பா­ண நக­ரப் பகு­தி­யைச் சேர்ந்த முச்­சக்­க­ர­வண்­டிச் சார­தி­யான தன­பால் (வயது-45) என்­ப­வரே இவ்வாறு உயி­ரி­ழந்­துள­ளார். இந்நிலையில். இது தொடர்­பில் பொலி­ஸார் தெரி­விக்கையில், யாழ்ப்­பா­ணம் பண்­ணைப் பாலப் பகு­தி­யில் முச்­சக்­க­ர­வண்­டியை நிறுத்­தி­விட்டு குறித்த சாரதி வீதியைக் கடக்க முற்பட­டுள்­ளார். யாழ்ப்­பா­ணம் நக­ரப் பகு­தி­யி­லி­ருந்து ஊர்­கா­வற்­றுறை நோக்கி வேக­மாக சென்ற மோட்டார்...
ஒலுவில் துறைமுகத்திலிருந்து மீன்பிடித் தொழிலுக்காகச் சென்ற இரண்டு மீனவர்கள் மூன்று தினங்காளக் காணாமல் போய் தற்போது கரை சேர்ந்துள்ளனர். மீனவர்கள், உறவினர்கள் மற்றும் கடற்படையினர் போன்றோர் அம்பாறை மாவட்டத்தின் கடற்பரப்பில் இவர்களைத் தேடி அலைந்தும் ,சிங்கள சகோதர்களின் உதவியுடனேயே ஹம்பாந்தோட்டை கடற் பிரப்பில் வைத்து  இவர்கள் காப்பாற்றப்பட்டு நேற்று இரவு 9 மணியளவில் தமது வசிப்பிடங்களை வந்தடைந்தனர். காணாமல் போன இரு மீனவர்களும் அட்டாளைச்சேனை பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள் ஆவர். நான்கு பிள்ளைகளின்...
ஜனாதிபதி மைதிரிபாலசிறிசேனவின் ஆலோசனையின் பேரில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கிராமசக்தி வேலைத்திட்டம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர்களினால் ஆளுநருக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று  காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபினி கேதீஸ்வரன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மோகன்தாஸ் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனிபா உட்பட அதிகாரிகள் பலர் கலந்து...
பாராளுமன்றம் கலைப்பு தவறு என நேற்று கூறிய தீர்ப்பின் சூடு ஆர முன் மேன்முறையீடு நீதிமன்ற தீர்மானம் சரியென இன்றும் உயர் நீதிமன்றம் ஜனநாயத்தை காப்பாற்றியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரோரா தெரிவித்தார். நீதிமன்ற தீர்ப்புகளை கவனத்தில் கொண்டும், அடுத்த வருடம் அல்லலுற போகும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டும் ஜனாதிபதி விரைவாக முடிவொன்றுக்கு வரவேண்டும் எனவும் மேலும் குறிப்பிட்டார். மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த, மகிந்த தலைமையிலான அரசாங்கத்துக்கு...
    மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது அமைச்சரவையும் தமது செயற்பாடுகளிலிருந்து விலகியிருக்க வேண்டும்: என உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பை தொடர்ந்து. சற்று முன்னர் பதவி விலகினார் மஹிந்த ராஜபக்சா! https://www.facebook.com/majpilancheliyan/videos/1962952993812389/ நன்றி சக்கிதொலைக்காட்சி