ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் செகான் சேமசிங்க தெரிவித்துள்ளார். புதிய பிரதமரை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு இடமளி;ப்பதற்காகவே தான் பதவிவிலகியுள்ளதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை பிரதமராக மீண்டும் பதவியேற்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஆரம்பித்த அரசியல் நெருக்கடி நிலை தொடர்ந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்புகளை அடுத்து இலங்கை அரசியலில் திருப்பம் ஏற்பட்டது. இதேவ‍ேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் பதவி விலக தீர்மானித்துள்ளதாக...
பாராளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்” என ஐ.நாவிற்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகிக் கொள்ளவுள்ளதாக வெளியான தகவலையடுத்தே சமந்தா பவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் இலங்கை மக்கள் சுதந்திரமான ஊடகங்கள் சிவில் சமூகம் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றின் மூலம் தான்...
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர்  ராஜிதசேனாரட்ண தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ரணில்விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சற்று முன்னர் தொலைபேசியில்  இடம்பெற்ற உரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார் ஜனாதிபதி செயலகத்தில் காலை 10 மணிக்கு புதியபிரதமர் பதவிப்பிரமாணம் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் எனினும் அமைச்சரவை நியமனம் தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ராஜித...
நம்பிக்கையின் நிமித்தம் நண்பர் ஒருவருக்கு கொடுத்த பணத்தை திரும்ப வழங்காமையால் மனவிரக்தி அடைந்த இளைஞர் ஒருவர் நஞ்சருந்திய  நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா பண்டாரிகுளம் பகுதியைச் சேர்ந்த உ.ஐங்கரன் (வயது 31) என்ற இளைஞர் தனது நண்பர் ஒருவருக்கு குறிப்பிட்ட தொகை பணத்தை சில மாதங்களுக்கு முன்னர் கைமாற்றாக வழங்கியுள்ளார். அப்பணத்தை மீள தருமாறு கடந்த சில நாட்களாக ஐங்கரன்...
உலகின் முன்னணி தேடுப்பொறியான கூகுள், இந்த ஆண்டிற்கான இயர் இன் சர்ச் (Year in Search) வெளியிட்டுள்ளது. 2018 ஆண்டு தொடங்கியதில் இருந்து இதுவரை மக்கள் கூகுளில் அதிகம் தேடிய சம்பவங்கள் மற்றும் தலைப்புக்களை தொகுத்து ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் கூகுள் இயர் இன் சர்ச் என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கூகுள் இயர் இன் சர்ச் பட்டியலில் இடம்பெற்ற தலைப்புக்களின் விளையாட்டுக்களில் பிபா உலக...
சீனாவில் இயங்கி வரும் செம்சங் எலக்ட்ரோனிக்ஸ் நிறுவனம் தனது கையடக்க தொலைபேசி தயாரிப்பு ஆலையை மூடுவதாக அறிவித்துள்ளது. சீனாவில் இயங்கி வரும் தியாஞ்சின் சம்சங் எலக்ட்ரோனிக்ஸ் டெலிகொம்யூனிகேஷன் தயாரிப்பு ஆலையின் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக சம்சங் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. சீனாவில் வடக்கில் அமைந்திருக்கும் தியாஞ்சின் நகரத்தில் சம்சங் தொலைபேசி  தயாரிப்பு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் மொத்தம் 2600 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆண்டின் இறுதியில்...
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் வால் நட்சத்திரத்தை கிறிஸ்துமஸ் வால் நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற 16ம் தேதி பூமிக்கு மிக அருகில் பயணிக்கும் என்று நாசா விண்வெளி மையம் தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த கிறிஸ்துமஸ் வால் நட்சத்திரம் 46பி விர்டனேன் (46P/Wirtanen) என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த வால் நட்சத்திரத்தம் பூமிக்கு மிக அருகில் பயணிக்கும் எனவும் வருகின்ற 16ம் தேதி மக்கள் நேரடியாக...
வடக்கு, கிழக்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடுவதுடன் வட மாகாணத்தில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை வீசக்கூடும். நாடு முழுவதும் ஓரளவு இடியுடன் கூடிய மழையோ...
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியா மனித உரிமைகள் ஆணையத்தில் நேற்று மாலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகள் குறித்து எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று வரையும் அம்முறைப்பாட்டிற்கு எந்தவிதமான பதிலும் வழங்கப்படவில்லை எனவே ஏற்கனவே எங்களால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் அதற்கு பதிலளிக்குமாறு தெரிவித்து தகவல்...