பிரித்தானியாவில் மாணவர்களுக்கு கலையைக் கற்றுக் கொடுக்கும் ஒரு ஆசிரியர், பெண்ணின் உடல் தொடர்பான ஒரு புராஜக்டுக்காக 18 வயது மாணவி ஒருவரை அரை நிர்வாணமாக படம் எடுக்க அவரது வகுப்பில் படிக்கும் இன்னொருவருக்கு உதவியுள்ளார்.
பிரித்தானியாவின் Lincoln நகரிலுள்ள பள்ளி ஒன்றில் கலை ஆசிரியராக பணி புரியும் Karen Hutchinson (46), தனது கெமராவை ஒரு மாணவிக்கு இரவல் கொடுத்ததோடு 18 வயது மாணவி ஒருவரை அரை நிர்வாணமாக புகைப்படம்...
பொலிஸ் அதிரடி படையினரின் 600 பேருக்கான பதவி வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்காக, கடந்த நவம்பர் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி இலங்கை பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கான பயிற்சி கான்ஸ்டபிள்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
நம்பவர் 30 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலை கவனத்தில் கொண்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ள படிமுறைக்கமைய பொது மக்கள் விண்ணங்களை முன்வைக்கலாம் எனவும் மேலும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு 40 வயதிற்கு மேல் வரும், 80 சதவீத சிறுநீர் பிரச்சனைகளில், 60 சதவீத பிரச்சனை, சிறுநீர் கசிவு சம்பந்தப்பட்டதாக உள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பெண்களை பாதிக்கும் உடல் பிரச்சனைகளில் முக்கியமானது, சிறுநீர் கசிவு. 40 வயதிற்கு மேல் வரும், 80 சதவீத சிறுநீர் பிரச்சனைகளில், 60 சதவீத பிரச்சனை, சிறுநீர் கசிவு சம்பந்தப்பட்டதாக உள்ளது. சிறுநீர் கசிவு பிரச்சனைக்கு, உரிய சிகிச்சை முறைகள் இருக்கின்றன...
பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துட்டு கெமுனு மாவத்தையில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் நபர் ஒருவரின் தலையை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபரின் தலையை மீட்டுள்ளனர்.
குறித்த நபரின் தலையை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பேலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
புறக்கோட்டை ஹோல்கோட் மாவத்தையில் பாலியல் நடவடிக்கைகளுக்காக தனது முகவருடன் காத்திருந்த பெண்ணொருவரை புறக்கோட்டை பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்துள்ளனர். இதன்போது, ரஷ்யாவைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை வந்துள்ளதுடன் பாலியல் நடவடிக்கைகளுக்காக புறக்கோட்டை, வத்தளை, நீர்கொழும்பு அண்டிய பகுதிகளுக்கு சென்று வந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையிலேயே நேற்று புதன்கிழமை இரவு ஹோல்கோட் மாவத்தை பகுதியில் தனது முகவருடன்...
யாழ்ப்பாணம் அரியாலையிலுள்ள வீடொன்றுக்குள் முகமூடி அணிந்து வாள்களுடன் நுழைந்த வாள்வெட்டுக் கும்பலொன்று வீட்டையும் வீட்டிலிருந்த பொருட்களையும் அடித்து நொருக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.
இச் சம்பவம் அரியாலை புருடி வீதியிலுள்ள தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் ஒருவரின் வீட்டிலேயே இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
குறித்த வீட்டிற்கு இன்று அதிகாலை 2.45 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் முகமூடிகளை அணிந்து வாள்களுடன் சென்றுள்ளனர். இதன்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விசேட கூட்டம் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கடந்த 9 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக கலைத்தமை சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணானது என தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று மாலை 4 மணிக்கு வழங்கப்படவுள்ள நிலையிலேயே இக் கூட்டம் கூடவுள்ளது.
அதன்படி இக் கூட்டமானது இன்று...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குமிடையே இரகசியமாக ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக வெளியாகிய போலி ஆவணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பின் எஸ்.எம்.மரிக்கார் கோரிக்கை விடுத்துள்ளார்.
தாய்மார்கள் எப்படி நடந்துகொண்டால் சமூகத்தில பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை பற்றி அவர்களிடம் மனம் திறந்து பேச வேண்டும்.
பெண் பிள்ளைங்க நல்லா படிக்கணும், நல்ல வேலைக்கு போக வேண்டும் என்று பல விஷயங்களை யோசிக்கிறோம்; ஆனால், எப்படி நடந்துகொண்டால் இந்த சமூகத்தில அவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை பற்றி அவர்களிடம் மனம் திறந்து பேசுவது இல்லை. இதனால்தான் பல பெண்கள் தங்களோட வாழ்க்கையில் தடம்புரண்டு...
10 ஆவது நாளாக தொடரும் தோட்ட தொழிலாளர்களின் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தை தொடர்ந்து இன்று பிரவுன்சிக் பிரிவின் சேர்ந்த 8 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தேயிலை தொழிற்சாலை முன்பாக எதிர்ப்பு ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தில் தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,
எம்மை பணி பகிஸ்கரிப்பு செய்யுமாறு கூறிய தொழிற்சங்கங்கள் எமக்கு நாளாந்த அடிப்படை வேதனத்தை 1000 ரூபா பெற்று கொடுக்க வேண்டும்
அல்லது கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகி கொள்வதுடன் தொழிற்சங்கங்களுக்காக அறவிடப்படும்...