தெலுங்கு சினிமாவில் அதிகம் பிரபலமானவர் நடிகை சார்மி. இவர் தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவர் 10 என்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் அதில் அவர் காலில் பேண்டேஜ் சுற்றியிருந்தது தான் காரணம். காலுக்கு என்ன ஆனது என அவர் குறிப்பிடவில்லை என்பதால் ரசிகர்கள் அனைவரும் "என்ன ஆனது?"...
தமிழ் மக்கள் பேரவை இயக்கத்தில் ஓர் அங்கமாக இருக்கும் தகுதி யை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற அமைப்பு இழந்திருக்கின்றது. அவர்களின் செயற்பாடுகளே தமிழ் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கு பலமான அழுத்தக் குழுவாக செயற்படத்தக்க ஒரு பெரும் மக்கள் இயக்கத்திற்குள் இருந்த ஒற்றுமையைச் சிதைத்ததுடன், தமிழ் மக்கள் பேரவை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக எழுச்சிபெறுவதற்கு தடையாக இருந்து வருகின்றது...
விஜய்யின் மெர்சல் படம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் ரசித்த ஒரு படம். இப்படம் மக்களிடம் பெரிய ஆதரவை பெற்றதோடு வசூலிலும் கலக்கியது. அதிலும் பாடல்கள் சொல்லவே வேண்டாம், ஏ.ஆர். ரகுமான் இசையில் வந்த பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. இந்த படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகருக்காக IARA விருதில் விஜய் தேர்வுசெய்யப்பட்டார். இடையில் இந்த விருது போலியானது என்று எல்லாம் பேச்சு வந்தது. தற்போது தளபதி மாஸான விருதுடன்...
டோனி தான் எப்போதும் இந்தியாவுக்கு ஹீரோ என்று இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிசப்பாண்ட் கூறியுள்ளார். கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, தற்போது அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. அவுஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி 10 ஆண்டுக்கு பின் அரிய வெற்றியை பதிவு செய்ததோடு, 70...
தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி தோட்ட தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆர்ப்பாட்டம் இன்று 09வது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டது அந்தவகையில் நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  டிக்கோயா சாஞ்சிமலை மேற்பிரிவு கீழ் பிரிவு ஆகிய தோட்ட தொழிலாளர்கள் சாஞ்சிமலை பஸ் நிலையத்திற்கு முன்பாக டயர்களை ஏரித்தும் செதுர் தேங்காய் உடைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் கலந்து கொண்டதோடு நாங்கள் கடந்த 09...
அவுஸ்திரேலியா பழைய ஆக்ரோஷத்துடன் விளையாடாவிட்டால் மீண்டும் கிரிக்கெட்டில் எழுந்துவர முடியாது, வெற்றியை ருசிக்க முடியாது என சமீபத்தில் ஓய்வு பெற்ற இந்திய வீரர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்திரேலிய வீரர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை அடுத்து அந்த அணியின் செயல் மோசமாக சென்று கொண்டிருக்கின்றது. இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர், அவுஸ்திரேலியாவின் வெற்றியே அவர்களின் ஆக்ரோஷம் தான். களத்தில் எதிரணி வீரரை கிண்டல்...
DRS தொழில்நுட்பம் தன்னை விரக்தியடையச் செய்ததாக அவுஸ்திரேலிய அணித்தலைவர் டிம் பெய்ன் வருத்தம் தெரிவித்துள்ளார். அடிலெய்டில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில், அவுஸ்திரேலிய அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் DRS தொழில்நுட்பம் எனும் நடுவர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் முறை, அவுஸ்திரேலிய அணிக்கு தலைவலியாக இருந்தது. குறிப்பாக ரஹானே, புஜாரா ஆகியோர் இந்த முறையின் மூலம் அவுட்டில் இருந்து தப்பினர். இந்நிலையில், DRS தொழில்நுட்பம் குறித்து...
ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக இன்று நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த வேண்டுகோளை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இன்று காலை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் தீடீர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பிற்கு அழைத்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய சந்திப்பி;ல் பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு...
பிரித்தானிய பேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மேகன் மெர்க்கல் பொதுமேடையில் வைத்து அடிக்கடி தமது வயிறை தடவிக்கொண்டது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் குறித்த சம்பவத்தை ஆதரித்துள்ள நிபுணர்கள், அப்படி தொடர்ந்து செய்வது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளனர். குறித்த விழாவில் கருமை நிற ஆடையில் பாரவையாளர்களை அசத்திய மேகன் மெர்க்கல், தமது திருமண ஆடையை வடிவமைத்த Clare Waight Keller என்பவருக்கு விருது வழங்கி கெளரவித்துள்ளார். இந்த நிகழ்விலேயே...
அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஹெரோயினுடன் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று(11) மாலை பிராந்திய மோசடி குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறித்த பொலிஸ் குழுவினர் குறித்த சந்தேக நபரை அக்கரைப்பற்று பதுர் நகர்ப் பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். ஆறுபேர் கொண்ட இப்பொலிஸ் குழுவினரே இவரை கைது செய்து அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை கைது செய்யப்பட்ட அந்நபர் 22 வயதுடைய திருமணமான...