யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைக்கு அரச சட்டவாதி மன்றில் முன்னிலையாகததால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று விசாரணைகனை ஒத்திவைத்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பொலிஸ் மா...
53 நாடுகளின் ராணியாக இருந்தாலும், அரசின் பல துறைகளை தனது கட்டுக்குள் வைத்திருந்தாலும் எலிசபெத் அவர்கள் தனது குழந்தைகளுக்கு அம்மா, பேரக்குழந்தைகளுக்கு பாட்டி என்ற முறையில் மகிழ்ச்சியாக உள்ளார். பேரக்குழந்தைகளில் இவருக்கு மிகவும் பிடித்தவர் இளவரசி Zara Tindall. இவருக்கு அடுத்த இடத்தில் தான் இளவரசர் ஹரி உள்ளார். 5 ஆவது இடத்தில் வில்லியம் உள்ளார். இளவரசி Zara Tindall மகாராணியின் ஒரே செல்ல மகள் Anne - க்கு பிறந்தவர்...
அவுஸ்திரேலியாவில் சாதிக்க வயதில்லை என்பதை 102 வயது மூதாட்டி ஒருவர் நிரூபித்துள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்டைச் சேர்ந்தவர் Irene O’Shea(102). கடந்த10 வருடங்களுக்கு முன்பு இவரின் 67 வயது மகள் Motor Neurone என்ற நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அந்த நோயைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தன்னுடைய 102 வயதிலும் 14,000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்துள்ளார். மிக அதிக வயதில் ஸ்கை டைவிங் அடித்த...
பிர­த­ம­ரா­கவும் அமைச்­சர்­க­ளா­கவும்  மற்றும் இரா­ஜாங்க, பிரதி அமைச்­சர்­க­ளா­கவும்  செயற்­பட மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தினால்  இடைக்­கால தடை விதிக்­கப்­பட்­டுள்ள மஹிந்த ராஜ­பக்ஷ உள்­ளிட்ட 49 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இன்­றைய தினம் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் ஆஜ­ரா­கு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்­றி­ரவு கூடிய சிறி­லங்கா பொது­ஜன பெர­முன மற்றும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பங்­கேற்ற அவ­சரக் கூட்­டத்­தி­லேயே இந்தத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. அத்­துடன் இன்­றைய தினம் நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற அமர்வில்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றபோது பொதுத் தேர்தல் குறித்தும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பின்போது பாராளுமன்றத் தேர்தலை அடுத்த வருடம் அதாவது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதுடன் தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் முடியும்...
வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான சுனில் சாந்த மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுனில் சாந்த என்ற பிரபல போதைப் பொருள் கடத்தல்காரர் தப்பிச் சென்றிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பொலிஸ் திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படை அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் நேற்றைய தினம் மீ முரே...
இலங்கையின் பிரபல சிங்கள பாடகர்  உபாலி கன்னங்கர காலமானார். இவர் உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார். அவர் தனது 67 வயதிலேயே காலமாகியுள்ளார். மேலும் இவரது இழப்பு சிங்கள சினிமா துறையையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இறுதி அஞ்சலி குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமென உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.இவ் உலகை விட்டு பிரிந்து சென்றது
வவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் பொலிஸாரின் வழமையான சோதனை நடவடிக்கையின் போது 70 0கிராம் கேரளா கஞ்சாவுடன் 33வயதுடைய வாரியபொல பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். குறித்த நபரை வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் சிறப்பு போதை ஒழிப்புப்பிரிவினர்  கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் தமது வழமையான சோதனை நடவடிக்கையின்போது நேற்று இரவு 11மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து பொத்துவில்...
ஸ்பெயின் நாட்டில் மட்டும் விளையாடாமல் இத்தாலிக்கும் வாருங்கள் என நட்சத்திர வீரர் ரொனால்டோ அர்ஜெண்டினா வீரர் மெஸ்சிக்கு சவால் விடுத்துள்ளார். கால்பந்து உலகில் ஜாம்பவான் வீரர்களாக மெஸ்சி, ரொனால்டோ ஆகிய இருவரும் திகழ்கின்றனர். அர்ஜெண்டினாவைச் சேர்ந்த மெஸ்சி பார்சிலோனா அணிக்காகவும், போர்த்துகலைச் சேர்ந்த ரொனால்டோ இத்தாலியின் யுவாண்டஸ் அணிக்காகவும் விளையாடி வருகின்றனர். மெஸ்சி ஸ்பெயின் நாட்டில் மட்டுமே தற்போது விளையாடி வரும் நிலையில், இத்தாலிக்கு வந்து விளையாடுங்கள் என ரொனால்டோ சவால்...
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி-அனுஷ்கா ஷர்மா ஜோடி இன்று தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் நிலையில், ஒருவருக்கொருவர் ட்விட்டரில் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். கடந்த ஆண்டு இதே நாளில் விராட் கோஹ்லி-அனுஷ்கா ஷர்மா ஜோடி திருமணம் செய்து கொண்டது. அதன்படி இன்று தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை இவர்கள் கொண்டாடுகின்றனர். அவுஸ்திரேலியாவில் விளையாடி வரும் விராட் கோஹ்லி, தனது ட்விட்டர் பக்கத்தில் மனைவி அனுஷ்காவிற்கு வாழ்த்து...