யாழ். மாநகர சுகாதாரப் பிரிவினரால் வண்ணார்பண்ணைப் பிரதேசத்தில் 34 குடியிருப்பாளர்களின் சுற்றாடலை உடனடியாக துப்பரவு செய்யக் கோரி சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
யாழ் மாநகர சுகாதாரப் பிரிவினர் வண்ணார்பண்ணை பிரதேசசத்தில் மேற்கொண்ட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் போது 332 வரையிலான வீடுகள் பார்வையிடப்பட்டுள்ளன. ஜே - 97 ஜே - 101 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இந்த நுளம்புக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது ஆறு குடியிருப்பாளர்களின் சுற்றாடலில் நுளம்புக் குடம்பிகளின்...
பாராளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் அரசமைப்பிற்கு முரணானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தால் பாராளுமன்ற தேர்தல்கள் இடம்பெறவேண்டுமா என்பது குறித்த சர்வஜன வாக்கெடுப்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன
இலங்கை ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பு குறித்து நீதிமன்றம் இந்த வாரம் தனது தீர்ப்பை வெளியிடவுள்ள நிலையிலேயே ஜனாதிபதியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
நல்லூர் பிரதேச சபையின்வரவு செலவு த்திட்டம் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
Thinappuyal -
நல்லூர் பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் இவ் வரவு செலவுத்திட்டத்தினை தலைமை அஷலுவலகம், கருவப்புலம் வீதி கொக்குவில் நல்லூர் உப அலுவலகம், கலாசாலை வீதி திருநெல்வேலி கொக்குவில் உப அலுவலகம், பிறவுன்வீதி கொக்குவில் பொது நூலகம், கோண்டாவில் பொது நூலகம், கொக்குவில் பொது நூலகம், நல்லூர் ஆகிய இடங்களில் எதிர்வரும் 23.12.2018 வரை பார்வையிட முடியும் என...
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் காரணமாக நிலைமாற்றுக்கால நீதி குறித்த வாக்குறுதிகளிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சர்வதேச மன்னிப்புச்சபை தனது ஆண்டறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளது.
தீடீர் என மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டமையும் அதனை தொடர்ந்து உருவாகியுள்ள அரசியல் நெருக்கடிகள் காரணமாகவும் மனித உரிமைகள் மற்றும் நிலைமாற்றுக்கால உத்தரவாதங்கள் எதிர்காலத்தில் ஆபத்துக்களை சந்திக்கலாம் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இலங்கையும் நேபாளமும் உண்மை நீதி மற்றும் கடந்தகால வன்முறைகளிற்கான இழப்பீடு குறித்த அர்ப்பணிப்புகளில்...
சிறுபான்மைக் கட்சிகள் கூட்டாக பேசி செயற்பட வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ள கருத்தினை தான் வரவேற்கிறேன் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவத்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது,
தமிழ் கட்சிகளின், தமிழ் பேசும் கட்சிகளின் பாராளுமன் உறுப்பினர்கள் கட்டம் கட்டமாக ஒன்றாக அமரும் ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என இரண்டு வருடங்களுக்கு முன்போ கூறியிருந்தேன். அதனை இந் நாட்டு...
இலங்கை அணியின் களத்தடுப்பு மிக மோசமான நிலையிலுள்ளது என அணியின் புதிய களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ஸ்டீவ் ரிக்சன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் களத்தடுப்பில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு நான் தீவிரமாக பணியாற்றவேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் பல கிரிக்கெட் போட்டிகளை பார்த்துள்ளேன், இலங்கை அணியின் களத்தடுப்பு மிகவும் கீழ்நிலையில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்
பாக்கிஸ்தானின் களதடுப்பு பயிற்றுவிப்பாளராக நான் பணியாற்ற ஆரம்பித்த காலத்தில் அந்த அணியும் இவ்வாறான நிலையிலேயே காணப்பட்டது என...
பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவுக்கு எதிரான வழக்கினை எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு தெமட்டகொட பகுதியில் வைத்து இளைஞர் ஒருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் ஹிருணிக்கா பிரேமசந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கையே எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 மற்றும் 13...
இந்தியாவில் ஐந்து மாநிலங்களின் சட்டசபைக்களுக்கு இடம்பெற்ற தேர்தல் வாக்களிப்பின் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்ற நிலையில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கின்றது
சத்தீஸ்கர் ராஜஸ்தான் மத்தியபிரேதசம் தெலுங்கானா மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளிற்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டுள்ளன
இந்நிலையில் மத்திய பிரதேசம்,ராஜஸ்தான் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.
தெலுங்கானாவில் ஆளும் ராஸ்டிரிய சமிதி கட்சி முன்னிலை வகிக்கின்றது.
மிசோரமில் மிசோரம் தேசிய முன்னணி முன்னிலை வகிக்கின்றது.
ராஜஸ்தான் மாநிலத்திலும் சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் கட்சி 10...
மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் முதற்கட்டமாக 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், துறைமுகத்தின் நுழைவாயிலை ஆழப்படுத்தல், அலைதடுப்பு நிலையம், குளிரூட்டல் அறைகள் உட்பட்ட அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், நிர்வாகக் கட்டிடம், மீன்பிடி வலைகள் பின்னும் நிலையம், நீர்த்தாங்கிகள், கழிவறைகள் அமைக்கப்பட்டுவருகின்றன. .
இரண்டாம் கட்ட நிதி ஒதுக்கீட்டில் 245 மில்லியன் ரூபாவில், அலைதடுப்பு கட்டுமானத்தின்...
வடமாகாண ஆளுநரின் உத்தரவிற்கு அமைய மீளத்திறக்கப்பட்ட வவுனியா பழைய பஸ் நிலையம் செயற்படவில்லையென பயணிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 7ஆம் திகதி வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் உத்தரவிற்கு அமைய பழைய பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்வதற்கு பல்வேறு தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 7ஆம் திகதியிலிருந்து பஸ் நிலையம் மீளத்திறக்கப்பட்டபோதும் பஸ்கள் இ.போ.ச மற்றும் தனியார் தமது சேவைகளை திறம்பட மேற்கொள்ளவில்லை.
வடமாகாண ஆளுநரின் கலந்துரையாடலின்போது...