உலக பூகோள அரசியல் பந்தில் முதல் வல்லரசாக அமெரிக்கா வும், உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவதாக சீனாவும், உலகத் தரைப் படையில் 04வதாக இந்தியாவும் திகழ்கிறது. ஒரு கட்டத்தில் அமெரிக் காவை தோற்கடித்து முதல் நிலைக்கு வந்தது சீனா. பின்னர் அதனை சீர் செய்துகொண்ட அமெரிக்கா வட கொரியாவுடனான அணுவாயுத ஒப்பந்தத்தை சீர்செய்து பூகோள அரசியலில் தன்னை ஒரு ஸ்திரமான நிலைக்கு மாற்றிக் கொண்டது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு ஆட்சி செய்யும்...
மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு விடயம் தான் மன்னார் புதைகுழி விவகாரம். இதுவரையில் இருநூற்றி ஐம்பது ஆறு (256) எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது தொடர்பாக இலங்கையில் இருக்கக்கூடிய சி.ஐ.டி (Civil Investigation Department) உத்தியோகபூர்வமாக யாரால் இக் கொலைகள் நடத்தப்பட்டது என்று கூற...
இரணைமடு குளத்தில் காணப்பட்ட இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவின் நினைவுகல்லை மீளவும் அதே பகுதியில் வைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகள் வடமாகாண ஆளுனர் அலுவலகத்தின் நேரடிக் கண்காணிப்பில் நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 24 மணி நேரத்துக்குள் அதனை மீள் அமைக்குமாறு ஜனாதிபதி விடுத்த உத்தரவின் பெயரில் குறித்த பணி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆரோக்கியமற்ற உணவுகள், முதுகில் அடி படுதல், பலவீனமான எலும்புகள், வயதாகுதல், வாதம், எலும்பு தொற்று மற்றும் தசை நார்களில் தொற்றுக்கள் போன்ற காரணத்தினால் கடுமையான முதுகு வலி ஏற்படுகிறது.
இத்தகைய முதுகுவலி பிரச்சனையை எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் குணமாக்க இயற்கையில் பல தீர்வுகள் உள்ளது.
தேவையான பொருட்கள்
லாவண்டர் எண்ணெய்
பெப்பர் மின்ட் ஆயில்
செய்முறை
ஒரு பெளலில் தேவையான அளவு லாவண்டர் மற்றும் பெப்பர் மின்ட் ஆயிலை எடுத்து நன்றாக...
நாட்டின் பல பகுதிகளில் இன்று குளிரான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கும் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவின் கடல் பிரதேசத்தில் காணப்படும் குறைந்த தாழமுக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் சீரான காலநிலை நிலவும் அதேவேளை, கடுமையான குளிரான காலநிலையே நிலவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஊடாக...
பாராளுமன்றம் நாளை புதன்கிழமை 10.30 மணியளவில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.
இந்நிலையில் நாளையதினமும் பாராளுமன்ற அமர்வின் போது பொதுமக்கள் கலரி மற்றும் விசேட விருந்தினர் பார்வையாளர் கூடம் ஆகியன மூடப்படுமென பாராளுமன்ற படைக்கல சேவிதர்கள் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, பாராளுமன்ற கலரியில் ஊடகவியலாளர்களுக்கு செய்திகேசரிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற படைக்கல சேவிதர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோதமாக அரிமரங்களை கடத்தி சென்ற மூன்று சந்தேகநபர்கள் ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நொச்சிகுளம் காட்டுப்பகுதியில் மரங்கள் கடத்தப்படுவதாக நேற்று காலை பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் குறித்த காட்டுப்பகுதிக்கு சென்ற பொலிஸார், விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியாவை சேர்ந்த மூவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களிடம் இருந்து கப் ரக வாகனம் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யபட்டவர்கள் விசாரணைகளின் பின் இன்றைய தினம் நீதிமன்றில்ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
...
உணவில் இரும்புச்சத்து அதிகமாக இருந்தால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.
மேலும் உடலில் ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும் உணவுகள்
தாமரைத் தண்டில் அதிக அளவு இரும்புச்சத்து விட்டமின் சி உள்ளதால் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல மாற்றத்தை உணர முடியும்.
சுண்டைக்காயில் உள்ள கசப்பு வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கும். ரத்தம் உடலில்...
நபர் ஒருவரை சித்திரவதைக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனையடுத்து இவ் விடயம் தொடர்பில் மஹர நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதுடன், விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந் நிலையிலேயே அவர் நேற்றிரவு களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட 3 பரீட்சார்த்திகளை சந்தேகத்தின்பேரில் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் நேற்று இடம்பெற்ற கணிதபாடத்தின் போது மோசடியில் ஈடுபட்ட 3 பரீட்சார்த்திகளே இவ்வாறு சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பரீட்சார்த்திகள் கல்முனை, தனமல்வில மற்றும் திககொட ஆகிய பிரதேசங்களில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.
குறித்த 3 பரீட்சார்த்திகளும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக...