சன் என்ற பெரிய தொலைக்காட்சியில் கடந்த பல வருடங்களாக குறிப்பிட்ட நேரத்தில் சீரியல்களாக நடித்து வருகிறார் ராதிகா சரத்குமார். தன்னுடைய ராடான் நிறுவனம் மூலம் இதுவரை பல சீரியல் தயாரித்து நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடித்த வாணி ராணி சீரியல் முடிவுக்கு வந்தது. உடனே அடுத்த சீரியலுக்கு தயாராகிவிட்டார் ராதிகா. சந்திரமுகி என்ற பெயரில் புதிய சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த சீரியலுக்கான புரொமோக்கள் கடந்த சில நாட்களாக...
வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றினால் இன்று வழங்கப்படவிருந்த நிலையிலேயே வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 31 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 07 ஆம் திகதி அடிலெய்டில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதல் இன்னங்ஸுக்காக அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 250 ஓட்டங்களை குவித்தது. இதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 235 ஓட்டங்களுக்குள் சுருண்டது. 15 ஓட்டங்கள் என்ற முன்னிலையுடன் தனது இரண்டாவது...
2018 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி (மிஸ் வேர்ல்ட்) சீனாவில் நடைபெற்றது. இதில் இவ்வாண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை மெக்ஸிகோவைச் சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் பெற்றுள்ளார். இதன்போது கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வனிசாவுக்கு உலக அழகி கிரீடத்தை சூட்டினார்.
சவுதி ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை நாடு கடத்துமாறு துருக்கிய அரசாங்கம் விடுத்த கோரிக்கையினை சவுதி அரேபியா நிராகரித்துள்ளது. ஜமால் கசோக்கியின் கொலையுடன் தொடர்புடைய 11 நபர்களை நாடு கடத்துமாறு துருக்கிய ஜனாதிபதி சவுதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந் நிலையில் தமது நாட்டின் பிரஜைகளை நாடு கடத்துவதில்லை என தெரிவித்து சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் அந்த கோரிக்கையை மறுத்துள்ளார். அத்துடன் சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கான பிடியாணையை...
பிரான்ஸில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்ட போரட்டத்தில் கலந்துகொண்ட 1700 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் போராட்டம் காரணமாக  179 பேர் கயமடைந்தும் உள்ளனர். பிரான்ஸில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த முதலாம் திகதி முதல் பிரான்ஸில் பாரிஸ் உட்பட பல்வேறு நகரங்களில் மஞ்சல் உடை அணிந்து போராட்டக்காரர்கள் போரட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன் இதன் காரணமாக அப் பகுதியில் ஏராளமான பொருட் சேதங்களும் பதிவாகியுள்ளன. இதையடுத்து எரிபொருள் உயர்வை...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார். ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் மத்திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சரான திலின தென்னக்கோன் என்பவரே இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார். இவர் ஜனக பண்டார தென்னக்கோனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இணைந்துகொண்டுள்ள திலின தென்னக்கோன் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் கிராமசேவகர் இடமாற்றத்தைக் கண்டித்து அப் பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அரசியல் பழிவாங்கல் காரணமாகவே கிராமசேவகருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்ற அப்பகுதிமக்கள் இந்த இடமாற்றத்தை இரத்துச் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர். புன்னாலைக்கட்டுவன் 208 கிராம சேவகருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றத்திற்கு அப் பகுதிமக்கள் கடுமையான எதிர்ப்பைவெளியிட்டு வந்திருந்தனர். இந் நிலையில் அந்த இடமாற்றத்தைக் கண்டித்தும் இடமாற்றத்தை இரத்துச்செய்ய வலியுறுத்தியும் குறித்த கிராம...
ஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை  கொழும்பு ஊடகமொன்று அகற்றியுள்ளது என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் விலை அதிகமானதன் காரணமாகவே மகிந்த ராஜபக்சவினால் பெரும்பான்மையை காண்பிக்க முடியவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்ட ஊடகத்திற்கு தெரிவித்திருந்தார். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவதற்கு 500 மில்லியன்வரை கோரினர் என சிறிசேன தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலைமைகள் குறித்து எனக்கு...