தமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரித்துள்ளது. இதனால், குறித்த இரு கட்சிகளும் பேரவையில் தொடர்ந்தும் இருக்கலாமென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதலமைச்சருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நேற்று  (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பேரவையின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. கூட்டத்தின் பின்னர்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள வளைவில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வடிகான் ஒன்றிற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது படுகாயமடைந்த இருவர் ஆபத்தான நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த மற்றையவர் ஆபத்தான நிலையில் மேலதிக சிச்சைகளுக்காக மட்டக்களப்பு...
அமைச்சர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் இடை நிறுத்துவற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையை இடை நிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால தடையுத்தரவுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் மற்றும் தொலைபேசிக் கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும், தனிப்பட்ட நிர்வாகத்தினருக்கு வழங்கப்படும் வேதனமும் நிறுத்தப்பட்டுள்ளன. இந் நிலையில் அமைச்சர்களின் பதவிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைவாக அனைத்து நடவடிக்கைகளையும்...
இரத்தினபுரி - பாணந்துறை பிரதான வீதியின் கொரக்கா எல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உயிரிழந்த இருவரும் 32 மற்றும் 33 வயதையுடையவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காலி - மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இரு இளைஞர்கள் உரியிழந்துள்ளனர். குறித்த விபத்து காலி - மாத்தறை வீதியின் அகங்கம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பஸ் வண்டியுடன் முச்சக்கரவண்டியொன்று மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது 20 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
டெங்கு நோய்த்தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியொருவர், அம்பியூலன்ஸ் வண்டியில் பரீட்சை மண்டபத்திற்கு சென்று பரீட்சை எழுதி செல்கிறார். யாழ். நகரிலுள்ள மகளிர் பாடசாலையை சேர்ந்த மாணவியொருவரே, டெங்கு பாதிப்பின் மத்தியிலும் பரீட்சை எழுதி வருகிறார். இவர் திடீரென டெங்கு நோய்த்தொற்றிற்கு இலக்கானார். இதையடுத்து சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பரீட்சைக்கு தயாராகியிருந்த அந்த மாணவி, டெங்கு தொற்றால் பரீட்சை எழுதும் வாய்ப்பை கைவிட தயாராக இருக்கவில்லை. பரீட்சை...
தேசியத்தலைவர் உயிருடன் உள்ளார் என்பதை நிரூபித்துக்காட்டும் புகைப்படம் – தலைவர் இவ்வாறே வெளியேற்றப்பட்டார், சிறப்பு காணொளி 10 வருடத்தின் பின் நிரூபனமாகிறது தேசியத்தலைவர் உயிருடன் உள்ளார் என்பதை நிரூபித்துக்காட்டும் புகைப்படம் – தலைவர் இவ்வாறே வெளியேற்றப்பட்டார், சிறப்பு காணொளி 1oவருடத்தின் பின் நிரூபனமாகிறது சிங்களப்பேரினவாதத்தின் முதுகெலும்பினை முறிக்கவும் தமிழர்கள் தலைநிமிர்ந்து துணிச்சலுடன் நடமாடவும் இத்தனை படையணிகளையும் உருவாக்கினார்-தலைவன் அதிமேதகு வே.பிரபாகரன் உலகத்தின் எத்தனையோ நாடுகளில் மக்கள் மூடநம்பிக்கைக்குள்ளும் அடிமைத்தனத்துள்ளும் அகப்பட்டு முன்னேற்றமடைவதற்கோ முடியாதவர்களாக...
    நாங்கள் யாரையும் பகைக்க விரும்பவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன்   கேள்வி:- அரசியல் நெருக்கடிகளின் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலில் தீர்மானிக்கும் சக்தியாகவிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய கட்சிகளுடனான அனுகுமுறைகள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளனவே? பதில்:- எங்களுடைய அரசியல் இலக்குகளை அடைவதற்காக நாங்கள் செயற்பட வேண்டியது அவசியம். அதனையே நாம் குறிக்கோளாக முன்னிலைப்படுத்திச் செயற்பட வேண்டும். பலருக்கு பல்வேறு கருத்துக்கள் இருக்க முடியும். அதற்காக அனைவரினது கருத்துக்களையும்...
குருநாகல் - தம்புள்ளை வீதியில் கலவெல - கனாதன பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர். திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தொன்றும், வெங்காயத்தை ஏற்றிச் சென்ற கொள்கலன் பாரவூர்தியொன்றும் மோதுண்டு இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் பேருந்தின் சாரதியும், இரண்டு பயணிகளுமே காயமடைந்துள்ளனர். பேருந்தின் அதிக வேகம் மற்றும் சீரற்ற காலநிலையால் வீதியில் வழுக்கிச் சென்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து...
நாசா அனுப்பிய ஆய்வு செய்மதியான ஓசிரிஸ்-ரெக்ஸ இரண்டு கோடி கிலோமீற்றர் வரை பயணித்து பென்னு என்ற விண்கல்லை அடைந்துள்ளது. வெறும் 500 மீட்டர் அகலமே உள்ள இந்த விண்கல்லை சூழ்ந்து இன்னும் இரண்டரை ஆண்டுகாலம் ஓசிரிஸ் ரெக்ஸ் செய்மதி ஆய்வுகள் நடத்தவுள்ளன. 2020ஆம் ஆண்டின் மையப்பகுதியில் ரொக்கெட்டில் சென்று விண்கல் பென்னுவில் விஞ்ஞானிகள் தரையிறங்கவுள்ளனர். இந்த செய்மதியானது  அந்த விண்கல்லில் இருந்து மேல் மண்ணை எடுத்து சுத்தமான குழல் ஒன்றில் சேகரிக்கும்.இந்தக் குழல்...