சட்ட விரோதமாக இடம்பெற்ற பிரதமர் நியமனத்தினைத் தக்கவைப்பதற்கான மைத்திரி – மஹிந்த தரப்பினரின் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளமையினால், முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாகவுள்ள 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் குறைகூற ஆரம்பித்துள்ளனர்" என ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு 19ஆம் அரசியலமைப்புத் திருத்தமே காரணம் எனவும், அதன் உள்ளடக்கங்கள் தெளிவானதாக அமையவில்லை எனவும், எனவே 19ஆவது அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட...
உடுகம - கொத்தல்லாவ வீதியில்   இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சமிஞ்சை காட்டியும்  அதில் பயணித்தோர் நிறுத்தாது தப்பிச்சென்று  மோட்டார் சைக்கிளை கைவிட்டு சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளின் பிரதான மின் விளக்கு ஒளிராமையின் காரணமாகவே பொலிசார் மேற்படி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர்களை சமிஞ்ஞை காட்டி நிறுத்த முற்பட்டுள்ளனர். ஆயினும், அதில் பயணித்தோர் தப்பி சென்று மோட்டார் சைக்கிளை கைவிட்டு சென்றுள்ளனர் . அதனையடுத்து ,...
இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸுக்காக 7 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை குவித்துள்ளது. இவ் விரு அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து, நேற்றைய ஆட்ட நேர முடிவின் வரை இந்திய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை...
உலகம் முழுவதும் வீதி விபத்துகளில் ஆண்டுதோறும் 13.5 இலட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், உலகம் முழுவதும் வீதி விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. 5 முதல் 29 வயது வரையான  இளம் வயதினர் உயிரிழப்புகளுக்கு வீதி விபத்துகள்தான் முக்கிய காரணமாக விளங்குகின்றன. 2016 ஆம் ஆண்டு புள்ளிவிபரம்படி,வீதி விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 13.5...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தமிழ் இளைஞர்கள் சிலர் செல்பி எடுத்துக் கொண்டமை குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்கும் நிகழ்வில் ஜனாதிபதி நேற்று கலந்து கொண்டார். நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் இளைஞர்கள் பலர், ஜனாதிபதியுடன் செல்பி புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டினர். இளைஞர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதியும் சளைக்காமல் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளார். இரணைமடு குளத்தின் கட்டுக்களில் நின்ற இளைஞர்களே தமது கைப்பேசிகளில்...
ஜனாதிபதி புதுவகையான நோய் தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். கிண்ணியாவில் இன்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், இன்று நாம் ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்க தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. இது இந்த நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியல் அமைப்பையும் பாதுகாக்க நடாத்தப்படும் போராட்டம். 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பம்...
மலையக தோட்டத் தொழிலாளர்கள் தமது சம்பள உயர்வு கோரி பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தை தொடரும் இந்நிலையில் மஸ்கெலியா பிளான்டேசனுக்கு சொந்தமான தோட்டங்கள் தற்போது காடாகி வருகின்றது. தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமையால் தேயிலை செடியின் மேல் கொடிகள் மற்றும் புல் வளர்ந்திருக்கிறது. அத்துடன் பாம்பு போன்ற விலங்குகள் தோட்டங்களில் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் உடன் இதற்கு தீர்வொன்றை தருவதற்கு தோட்ட முகாமைத்துவம் முன்வரவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் தாள் நிலப்பகுதிகளில் வாழ்வோருக்கு அவதானமாக செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இரணைமடு குளத்தின் 5 வான் கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன ஒன்றிணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று  இரவு  இரவு 7 மணியளவில் நடைபெற்ற போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஆலோசகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவர்கள் வரவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்‌ஷ்மன் பியதாச  தெரிவித்திருந்தார். மேலும், மஹிந்த ராஜபக்ச தலைமையிலேயே புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க...
மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் இன்று  கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பொது அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. "டொலர்களுக்கு சமாதானத்தினை அழிக்காதே", "வடகிழக்கின் அமைதியில் கை வைக்காதே", "சமாதானத்திற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்டத்தினை நடைமுறைப்படுத்து", "சமாதானத்தினை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒன்றுகூடுங்கள்" போன்ற வாசகங்களை தாங்கிய  பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர். இதன்போது...