மாறிவரும் சூழலிற்கு ஏற்ப பதில் நடவடிக்கையை எடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவ்வாறான நடவடிக்கையை எடுப்பதற்காக சிவில்சமூகத்தவர்கள் மற்றும் சர்வதேச சமூகத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளோம் எனவும் பிரிட்டனின் அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையில் அரசியல் நிலவரத்தை உன்னிப்பாக அவதானிப்பதாக தெரிவிப்பதாக தெரிவித்துள்ள பிரிட்டன் தற்போதைய சூழ்நிலையால் மனித உரிமை ஆர்வலர்களிற்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. மனித உரிமைகளிற்கான பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் தரீக் அகமட் இதனை தெரிவித்துள்ளார். மனித உரிமை...
அரசாங்கத்தால் இது வரையில் 17 ரூபாவால் எரிபொருள் விலை குறைக்கப்பட்டிருந்தாலும் அதற்கு ஏற்றாற் போல பஸ் கட்டணங்களை குறைக்க முடியாது என தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் தீர்மானித்துள்ளார். எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டாலும் பஸ்ஸின் ஏனைய உதிரிபாகங்களின் விலை அதிகரித்துள்ளதாக தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார். மேலும் எரிபொருட்கள்  விலை குறைக்கப்பட்டதால் 100க்கு 3 வீதம் மாத்திரம் குறைக்க முடியும் ஆனாலும் உதிரிபாகங்களின் விலை அதிகரித்துள்ளதால்  பஸ் கட்டணம் 100க்கு...
கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள்  மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் குருநாகல் மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். மத்திய,...
மலையக மக்களின் சம்பள உயர்வு கோரி பணி பகிஸ்கரிப்பு போராட்டம் தொடரும் நிலையில் இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் மூலமாக மஸ்கெலியாவின் முக்கிய பகுதிகளில் சுவரொட்டிகள் காட்சி படுத்தப்பட்டுள்ளது. அச்சுவரொட்டியில் “தொழிலாளர் உழைப்பைக் குறைத்து எடை போடாதே “ எனவும் 1000 ரூபாய் சம்பளத்தை உடனடியாக நிர்ணயம் செய் என்றும் காணப்படுகிறது.  
அரசாங்கத்தில் வேலையில் இணைந்து கொள்ளும் அனைவரும்  பிற்பாடு எப்போது நாம் ஓய்வுதியம் எடுப்போம் என்று நினைத்துக்கொண்டே பணிபுரிகின்றனர் இதனால் மக்களுக்கு நல்ல சேவையினை வழங்க முடிவதில்லை என வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நேற்று  07.12.2018 வழங்கி வைத்து உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர் இந்த தற்காலிக உலகத்திலே ஒன்றுமே நிரந்தரம் இல்லை ஆனால் நிரந்தரமான வேலை...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன   உடனடி ஜனாதிபதி தேர்தலிற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார் பேட்டியொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் ஏனையவர்களின் நிகழ்ச்சிநிரலிற்கு ஏற்ப நான் செயற்படப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்துவதா இல்லையா என்பது குறித்து நானே தீர்மானிக்கவேண்டும் என தெரிவித்துள்ள சிறிசேன எனக்கு அவ்வாறான எண்ணம் எதுவும் இல்லை நான் ஏனையவர்களின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொள்ள தயாரில்லை எனவும் தெரிவித்துள்ளார். இரண்டாவது தடைவை ஜனாதிபதி  தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு தற்போதைக்கு இது...
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீல.சு.க. வின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியனவே இவ்வாறு புதிய...
மட்டக்களப்பு வவுணதீவில் இரு பொலிஸார்  சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தினைக் கண்டித்து  மன்னார் மாவட்டத்தின்  பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.   மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் கடந்த மாதம் 29 ஆம் திகதி வியாழக்கிழமையன்று இனம் தெரியாத நபர்களினால் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தினையடுத்து இச் செயலினை கண்டித்தும் மேலும் இது போன்ற சம்பவங்கள் நாட்டில் இடம்பெறாத வகையில் மன்னார் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் சில பொது இடங்களில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன. ”தேசியப்...
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கட்டி வளர்த்தது எம் பெரும் தலைவன் பிரபாகரன். அவரை தலைவர் என்றே உலகத்தமிழினம் அழைத்தது. அவர் தனியே நின்று போராடாமல் தன் மனைவி, ஒரே மகள், இரு புதல்வர்கள் முதற் கொண்டு தன் உயிரினும் மேலாக மதித்த தமிழீழப் போராட்டத்தை “2000 வருடங்களுக்குப் பின்னர் தோன்றிய அருந்தலைவன்” என்று கி.ஆ.பெ.விசுவநாதம் அழைத்த தலைவராக இந்தப் பூமீப்பந்தில் போராடினார். இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்.நெப்போலியன் சொன்னவாறு நான்...
'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை' அண்மைக்கால இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி மகிந்த கொம்பனி தெய்வங்களே இல்லை என்ற முடிவுக்கு வந்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழருக்கெதிரான யுத்த வெற்றி, அதனைத்தொடர்ந்து ஜனாதித் தேர்தல் வெற்றி ஆகிய இரு பெரு வெற்றிகளைத் தொடர்ந்து தற்பொழுது 18 ஆவது திருத்தச் சட்டத்திற்கான வெற்றியானது சிங்களத்திற்கு மேலும் மமதையை உண்டாக்கியிருக்கலாம். 18 ஆவது திருத்தமென்பது ஓரளவு ஜனநாயக வரைமுறைகளை உட்புகுத்தியிருப்பது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஜனாதிபதித் தெரிவானது...