இந்தியா  நெருக்கடியான நிலையிலிருந்த வேளை பொறுப்பில்லாமல் விளையாடி தனது விக்கெட்டை இழந்த இந்திய துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மா  சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளார் இன்று இந்திய அவுஸ்திரேலிய அணிகளிற்கு இடையில் ஆரம்பமாகியுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா துடுப்பெடுத்தாடிய விதம் குறித்தே கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன ரோகித் சர்மா இன்று விளையாடுவது நிச்சயமற்றதாகயிருந்த போதிலும் அவர் ஆறாவது வீரராக அணியில் சேர்க்கப்பட்டார் இந்திய அணி நான்கு விக்கெட்களை 41...
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்ட நாயகன் தமிம் இக்பால் பயிற்சி போட்டியில் சிறப்பாக விளையாடி 73 பந்துகளில் 13 நான்கு ஓட்டங்கள், 6 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்களாக 107 ஓட்டங்களை குவித்து தனது உடற் தகுதியை நிரூபித்துக் காட்டியுள்ளார். கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின்போது தமிம் இக்பால், மணிக்கட்டில் ஏற்பட்ட முறிவு காரணமாக சிகிச்சை வழங்கப்பட்டு, ஓய்வெடுத்து வந்தார். இந் நிலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக...
விடுதலைப் புலிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணையானது இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஹெரோயின்போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று பொலிஸார் மேற்கொண்ட சுற்றுவளைப்பின் போது வெவ்வேறு இடங்களிலிருந்து மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை (சுமார் பத்து ஆண்டுகள்) போதைபொருட்கள் பாவனை தொடர்பில்  371 பேர்  கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த சந்தேக நபரிகளில் ஒருவர்  4 கிராம்  ஹெரோயினுடன் கந்தானையில் கைது செய்யப்பட்டதாகவும் மற்றொரு நபர் 10...
பாடசாலை விடுமுறையை முன்னிட்டு பொதுமக்களின் நலன்கருதி இலங்கை புகையிரத திணைக்களத்தால் விசேட புகையிரத சேவைகள் மற்றும் பஸ் சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விசேட புகையிரத சேவைகள் இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. குறித்த புகையிரத சேவை கொழும்பு - புறக்கோட்டையிலிருந்து பதுளை வரைக்கும் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரைக்கும் நடைமுறைப்படுத்தவுள்ளது. அதன்படி நேர அட்டவணை வருமாறு, காலை 7.30 மணிக்கு கொழும்பு - புறக்கோட்டையிலிருந்து...
நடைபெற்று கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர பரீட்சைகள் பரீட்சாத்தி ஒருவருக்கு விடைகளை எழுதுவதற்கு உதவி புரிந்ததாக கூறப்படும் ஆசிரியை ஒருவர் பலாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியை தொலை பேசி குறுந்தகவல் மூலம் பரீட்சார்த்தியின் ஆங்கில பாட வினாப்பத்திரத்திற்கு விடையளிக்க உதவினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா - செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கிசென்ற டிப்பர் வாகனம் செட்டிகுளம் தபால்நிலையத்திற்கு அருகாமையில் சென்று கொண்டிருந்த போது குறித்த வீதி வழியே மாடுகளை கலைத்துசென்ற நிலையில் வயோதி பெண்ணை மோதியதிலேயே விபத்து இடம்பெற்றதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் படுகாயமடைந்த...
ஊவா மாகாண சபையின் அடுத்தாண்டிற்கான (2019) வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை ஐக்கிய தேசியக்கட்சியின் அமோக ஆதரவுடன் 28 அதிகப்படியான வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. ஊவா மாகாண சபையின் அடுத்தாண்டிற்கான (2019) வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை குறித்து கடந்த மூன்று தினங்களாக வாத விவாதங்கள் நடைபெற்று, 06-12-2018 இல் இரவு 8 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெற்றது. மாகாண சபை மண்டபத்தில் நேற்று சபைத் தலைவர் ஏ.எம். புத்ததாச தலைமையில்...
  மன்னார் மனிதப் புதைகுழியில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது வரை குறித்த மனித புதை குழியில் 256 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று புதன் கிழமை (5) 111ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. மன்னார் நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில்,சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று புதன் கிழமை அகழ்வு பணிகள் இடம் பெற்றது. இதன்...
பலப்பிட்டிய - பேருவளை கடற் பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு 277 கோடி ரூபா பெறுமதியான பெருந் தொகை ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 231 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், இது இலங்கை வரலாற்றில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய தொகையாகும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடற்படையினரின் ஒத்துழைப்புடன் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட இவற்றின் பெறுமதி சுமார் 2778 மில்லியன்...