(மன்னார் நகர் நிருபர்)   மன்னார் மனிதப் புதைகுழியில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது வரை குறித்த மனித புதைகுழியில் 256 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று புதன் கிழமை (5) 111ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. மன்னார் நீதவான் ரி.சரவணராஜா   மேற்பார்வையில்,சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று புதன் கிழமை  அகழ்வு பணிகள் இடம்...
நானாட்டான் ஸ்ரீசெல்வமுத்துமாரியம்மன் ஆலயத்தில் இரண்டு கோடி என்பது இலட்சம் ரூபா செலவில் இராஜ கோபுரம் அமைக்கப்படவுள்ளது என்று ஆலய பரிபாலக சபையினரும் இராஜகோபுரம் அமைப்பதற்கு என்று உருவாக்கப்பட்ட இராஜகோபுர திருப்பணிச் சபையினரும் இன்று(5) தெரிவித்தனர் ஐந்து தலங்கள் எழுபத்தைந்து அடி உயரமும் கொண்ட இராஜகோபுரம்  அடிக்கல் நடும் நிகழ்வு எதிர்வரும் பன்னிரெண்டாம் திகதி நடைபெறவுள்ளது அற்குரிய முன்னேற்பாடு  புன்னியதான பூஜையும் முன் மண்டபத்தின் கூரை பிரிக்கும் நிகழ்வும் இன்று(5) புதன்கிழமை காலை...
நம்முடைய உடலுக்கு ஏதாவது நோய் வருவதற்கு முன்பாக உடலில் சில அறிகுறிகள் தோன்றுகின்றன. அது என்ன என்று முன்பே தெரிந்து கொண்டு நோய்கள் உடலில் வரமால் பார்த்து கொள்ளுங்கள். உடம்பில் நோய் உள்ளதை வெளிபடுத்தும் அறிகுறிகள் வயிற்று வலி, வயிற்றுக் கடுப்போ அல்லது வயிற்றுப் போக்கோ இருந்தால் அது உங்களுடைய கைவிரல் நகங்களில் சுத்தமில்லை என்று அர்த்தம். முகத்தில் ஏதேனும் அரிப்போ நமைச்சலோ எடுத்தது என்றால் உங்களுடைய கூந்தலில் சுத்தம்...
இன்றைய காலத்தில் அனைவரும் மாடர்ன் என்று நினைத்து கொண்டு ஹெட்போனை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். மேலும் ஹெட்போனை 30 நிமிடம் தொடர்ந்து பயன்படுத்தினால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஹெட்போனை தொடர்ந்து பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள் செல்போனை நேரடியாகப் பயன்படுத்துவதால் அதில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் மூளையைப் பாதிக்கும். ஆனால் ஹெட்போனை தொடர்ந்து பயன்படுத்தினால் அது வேறு சில பிரச்சினைகளுக்கு நம்மை கொண்டு சென்றுவிடும். எந்நேரமும் ஹெட் போனில் பாட்டு கேட்டுக்கொண்டே...
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்தின் 25 வருட நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வெதச 2018” வைத்திய கண்காட்சி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (04) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. இக் கண்காட்சியின் அடிப்படை நோக்கம் சிறந்த உடல், உள, சமூக, சுகாதாரம் பற்றி மக்களுக்கு அறிவூட்டுவதாகும். இக்கண்காட்சி இன்று முதல் டிசம்பர் மாதம் 08ஆம் திகதி வரை நடைபெறும்....
பாராளுமன்றின் பொதுமக்கள் மற்றும் சபாநாயகர் பார்வையாளர்கள் கலரி நாளையதினமும் மூடப்படவுள்ளதாக படைக்கல சேவிதர்கள் தெரிவித்தனர்.பாராளுமன்றம் நாளை புதன்கிழமை காலை 10.30 கூடவுள்ளது. இந்நிலையில், பாராளுமன்ற பார்வையாளர் பகுதிக்கு ஊடகவியாலாளர்களுக்கு மாத்திரம் செய்திசேகரிப்புக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாளைய பாராளுமன்ற அமர்வுக்கான சபை ஒழுங்கு பத்திரத்தை தயாரிப்பது குறித்தும் இன்று இடம்பெறும் சபாநாயகருக்கும், பாராளுமன்ற செயலாளருக்கும், பிரதி செயலாளருக்கும் இடையிலான கூட்டத்தில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவிலுள்ள பல தனியார் நிறுவனங்கள், நிலையங்களில்  வியாபார சந்தையூடாகவும் ஏனைய முறைகளிலும் சேகரிக்கப்பட்ட தொழில் விண்ணப்பங்களை தமக்குத்தருமாறும் தனியார் வங்கி ஒன்றில் வேலை வாய்ப்புக்கள் பெற்றுத்தருவதாகவும் தொலைபேசியூடாக தொடர்புகொள்ளும் மர்ம நபர் ஒருவர் தங்களுடன் வேலை தேடுபவர்களை தொடர்புகொள்ளுமாறு கோரிவருகின்றார். இவ்விடயம் குறித்து குறிப்பிட்ட வங்கியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது போது அவ்வாறான செயற்பாடுகள் எவையும் குறித்த தனியார் வங்கியினால் இடம்பெறவில்லை இளைஞர்கள், யுவதிகள் இதுகுறித்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என்று...
மட்டக்களப்பு வவுனதீவுப் பொலிசார் மீதான துப்பாக்கி பிரயோகத்தைத் தொடர்ந்து முஸ்லீம் - சிங்களப் பிரச்சினைகள், இனவாதக் கருத்துக்கள் என இவை அனைத்தும் இலங்கையின் இறையான்மைக்கு ஒவ்வாத விடயங்கள் ஆகும். போருக்கு முன்னரான காலப்பகுதிகளில் சமாதானத்தை நோக்கிப் பயணித்த இலங்கை, அதற்குப் பின்னரான காலப் பகுதிகளில் மத, இன வெறிகளைத் தூண்டி குழப்பங்களை உருவாக்க அரசு முற்படுகின்றது. இதற்கான தடுப்பரண்களாக, தம்மைப் பாதுகாத்துக் கொள்ள சிறுபான்மைக் கட்சிகளை அரசாங்கம் பயன்படுத்துகின்றது....
எவ்வித இடையூறுகளுமின்றி  மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்குமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். சகல அமைச்சுக்களின் செயலாளர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி தலைமையில் இன்று  (04-12-2018) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதியினால் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பிற்கு அமைவாக நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவையினர் தமது கடமைகளை நிறைவேற்றுவதனை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018.12.03 ஆம் திகதி இடைக்கால தடை உத்தரவு விடுக்கப்பட்டுள்ளமையினால் நடைமுறையிலுள்ள...
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தனஞ்சய டி சில்வா தனது வாழ்க்கைத் துணையான சந்துனியை கரம்பிடித்தார். இந்நிலையில் இருவரும் நேற்று பதிவுத்திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கான பதிவுத்திருமணத்தில் கையொப்பமிடுவதற்காக ரங்கண ஹேரத்தும் லசித் மலிங்கவும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இதேவேளை, இலங்கை அணி கிரிக்கெட் தொடருக்காக நியூசிலாந்து செல்ல முன்னர் தனஞ்சய டி சில்வாவின் பதிவுத் திருமணம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.