ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீது இன்று விசாரணைகள் இடம்பெறவுள்ளன. இதனை விசாரணை செய்யவென நியமிக்கப்பட்ட  எழுவர் கொண்ட நீதியரசர்கள் குழு  முன்னிலையில் இன்று முதல் விசாரணைகள் காலை ஆரம்பிக்கப்படவுள்ளன. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பூரண நீதியரசர்கள் குழு ஒன்றின் முன்னிலையில் இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் என பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 11 அடிப்படை...
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் அசாதாரண நிலை காரணமாக யார் பிரதமர்? எந்த அரசாங்கம் நிலையாக தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கையாளப்போகிறது என்கிற கேள்விகளோடு, நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழரசுக்கட்சியுடன் கூட்டாக இணைந்து செயற்படுகின்ற ரெலோ, புளொட் ஆகிய இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் ஆட்சியமைக்க வேண்டும். அதன் பிரதமராக ரணில் அவர்கள் தான் தொடரவேண்டும் என்கிற நிலைப்பாட்டிலேயே த.தே.கூவின் 14...
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 2019 ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா...
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது குறித்த சம்பவம் தெடர்பில் மேலும் தெரியவருவதாவது முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் இன்று அதிகாலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தபால் ரயிலுடன் மோதுண்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது இந்த யானையினை அகற்ற வனஐுவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பனிக்கன்குளம் கிராம அலுவலர் உள்ளிட்டோர் நடவடிகை மேற்கொண்டு வருகிண்றணர் கடந்த இரண்டு...
பிரித்தானியாவில் 16 வயது காதலி குழந்தை பெற்ற நிலையில் 17 வயது சிறுவன் தந்தையான சம்பவம் நடந்துள்ளது. Coronation Street உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளவர் அலெக்ஸ் பெய்ன் (17). சிறுவயதிலேயே தாயை இழந்த இவர், மதுவுக்கு அடிமையான தந்தையிடம் வளர்ந்த நிலையில் கடந்த 2008-ல் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தொடங்கினார். பள்ளிப்படிப்பை படித்து கொண்டே நடிப்பிலும் அலெக்ஸ் கவனம் செலுத்தினார். இந்நிலையில் லெவி செல்பி (16) என்ற மாணவியை கடந்தாண்டு முதல்...
யாழ்.வடமராட்சி துன்னாலை பகுதியில் உள்ள சமூர்த்தி வங்கியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த வங்கி உத்தியோகஸ்தர் மீதே வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான உத்தியோகஸ்தர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வங்கியின் பின் பக்க மதிலால் ஏறி குதித்து வந்த நால்வரே தன் மீது தாக்குதல் நடத்திவிட்டு தனது கைத்தொலைபேசியையும் அபகரித்து சென்றதாக பொலிஸாரிடம் தாக்குதலுக்கு இலக்கானவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி, முரசு மோட்டைப் பகுதியில் வர்த்தக நிலையமொன்று உடைக்கப்பட்டு 65 ஆயிரம் ரூபாவுக்கும் மேற்பட்ட பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன், பொருட்கள், ஆவணங்கள் பலவும் சூறையாடப்பட்டுள்ளது. குறித்த இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி, முரசுமோட்டை முருகானந்தா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள விவசாய மருந்துகள் மற்றும் உரம்  விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்திலேயே மேற்படி கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலன்னறுவை பகுதியில் எலிக் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று வாரங்களுக்குள் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதிக்குள் 81 பேர் எலிக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தும் உள்ளனர். எலிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டவர்கள் உரிய முறையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளாமையினாலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலன்னறுவை சுகாதாரப் பிரிவு பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் மூவரை பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதை பொருள் தடுப்பு பிரிவினரால் ஒரு கிலோ நிறையுடைய கேரள கஞ்சாவை வைத்திருந்த  3 சந்தேக நபர்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இன்று காலை யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸை நொச்சிமோட்டை பகுதியில் வைத்து வழிமறித்த பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதே குறித்த கஞ்சா கைப்பற்றபட்டுள்ளது. சந்தேகநபர்கள் கஞ்சாவினை...
வவுனியாவில் சொகுசு வாகன விபத்தில்  6 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹெப்பிட்டிக்கொலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக  மேலும் தெரியவருவதாவது, வவுனியா - திருகோணமலை வீதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சொகுசு வாகனத்தில் சென்ற 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு வாகனம் ஹெப்பிட்டிக்கொலாவ பொலிஸ்...