நாட்டின் இன ஒற்றுமைக்கும், சமாதானத்திற்கும் பங்கம் ஏற்படுத்தி மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம். நாம் அமைதியாக வாழ விரும்புக்கிறோம் மட்டக்களப்பு வவுணதீவில் இரு பொலிஸாரை சுட்டு கொலை செய்தமையை வன்மையாக கண்டித்து திருக்கோவில் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை( 03) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது திருக்கோவில் பிரதேச சமாதானத்தை விரும்பும் மக்கள் வணிகம் எனும் அமைப்பினால் திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக கண்டன...
வவுணதீவில் கடந்த வெள்ளிக்கிழமை காவல் சாவடியில் கடமையிலிருந்த இரு பொலிஸார் குத்தியும் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டு அவர்களது ஆயுதங்கள் அபகரிக்கப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியான விசாரணைகளில் ஒன்றாக இன்று வவுணதீவு பிரதேசத்தில் உள்ள முன்னாள் போராளிகளின் வீடு வீடாகச் சென்று புலனாய்வுப் பிரிவினர் விசாரிப்பில் ஈடுபட்டனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களினதும் அதற்கு முந்திய காலத்தில் முன்னாள் போராளிகளாக இருந்தவர்களினதும் வீடுகளுக்கு விசேட அதிரடிப்படையினர் சென்றதோடு முன்னாள் போராளிகளின் பட்டியலிலுள்ளவர்கள் வீட்டிலிருக்கின்றார்களா அவ்வாறில்லையெனில் அவர்கள்...
கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி குறைந்துகொண்டு சென்ற நிலையில் இன்றைய தினம் குறித்த பெறுமதியானது அதிகரித்துள்ளது.
அதன்படி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான விலை இன்று (03-12-2018) 180.90 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 176.90...
ஹோமாகம பகுதியில் பாடசாலை மாணவனொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவிக்கின்றது.
ஹோமாகம, தேவாலய வீதி பிடிபன வடக்கு பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய இசுரு சந்தீப் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேற்குறிப்பிட்ட பிரதேசத்தில் காணப்படும் வீடொன்றில் உள்அறையில் உள்ள ஜன்னலிலேயே குறித்த சிறுவன் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவத்தினத்தன்று வீட்டில் இருந்த அனைவரும்...
காலி மற்றும் மொரன்துடுவ பகுதியில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டுவந்த இருவர் நேற்று பகல் அம்பலன்கொட பகுதியில் கைத்துப்பாக்கிகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.
வதுகெதர அம்பலன்கொட பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அம்பலன்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வதுகெதர பகுதியில் வைத்து நேற்று மதியம் 12 மணியளவில் களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலுக்கமைய குறித்த இருவரும்...
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் ஒரு உயர்ஸ்தானிகர் இன்று (03) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்.
குரோஷியா, கானா, கொங்கோ மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்களே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
01-திரு. பெடட் லூபியிக் - குரோஷியா குடியரசுக்கான தூதுவர்
02- திரு. மைக்கேல் நில் நார்டே ஒக்கேய் - கானா குடியரசுக்கான உயர்ஸ்தானிகர்
03- திரு....
அமெரிக்க கார்களுக்கான வரியை குறைக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகின் முன்னணி பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வந்தது. வர்த்தகத்தைப் பொறுத்தமட்டில், சீனா தன்னை வஞ்சித்து விட்டதாக அமெரிக்கா கருதியது.
அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்களையும், தொழில் நுட்பத்தையும் சீனா திருடிக்கொண்டு தங்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருத்து வெளியிட்டார். இதை சீன அதிபர் ஜின்பிங் மறுத்தார். ஆனாலும், அமெரிக்கா சீன...
தனது அனுமதி இல்லாமல் தன்னுடைய பெயரை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியதற்காக, ராஷ்ட்ரிய லோக் தந்ரிக் கட்சியை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் கடுமையாக விளாசியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 7ஆம் திகதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், மாநிலக் கட்சியான ராஷ்ட்ரிய தந்ரிக் கட்சியானது, முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக்கின் பெயரை பயன்படுத்தி விளம்பரம் செய்து பிரச்சாரத்தில்...
அமெரிக்க மொடல் அழகியை அவரது எதிர்ப்பையும் மீறி பாலியல் பலாத்காரம் செய்தது உண்மை தான் என கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அமெரிக்க மொடல் அழகி மயோர்க்கா வெளியிட்ட தகவல் புயலை கிளப்பியது.
ஆனால் மொடல் வெளியிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொய் எனவும், புகழ் பெறும் நோக்கில் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு...
அரிசி உணவானது நமது உடலுக்குத் தேவையான ரிபோஃபிளேவின், பி காம்ளெக்ஸ் மற்றும் இதர விட்டமின்கள் போன்ற ஆரோக்கியமான சத்துக்களை தரக் கூடியது.
கைகுத்தல் அரிசியில் விட்டமின் B, B12, A, E, K, பாஸ்பரஸ், நார்ச்சத்து, மாவுச்சத்து, புரதச்சத்து, செலினியம், மாங்கனீசு, இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
மேலும் தினமும் கைக்குத்தல் அரிசியை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பெருங்குடல் புற்றுநோய்
தினமும்...