பிரான்ஸில் பல இடங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முகமூடி அணிந்த குழுவொன்று பல இடங்களில் கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இதனை கருத்திற் கொண்டே அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படவுள்ளது. அதன்படி பாரீஸ் நகரில் நேற்று பல இடங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அரசு தரப்பு, கலவர சம்பவங்களில் ஈடுபட்டவர்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து பிரான்ஸ் அரசு தரப்பின் செய்தித் தொடர்பாளர், கூறுகையில், ‘அமைதியான முறையில் நாம்...
(மன்னார் நகர்  நிருபர்)   மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து தற்போது வரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு, மேலும் பல எலும்புக்கூடுகள்    கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று திங்கட்கிழமை (3) 109 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.சரவணராஜா வின் மேற்பார்வையில்,சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்றைய தினம் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. இதன் போது...
யாழ். 3ஆம் குறுக்கு தெருவைச் சேர்ந்த 25  வயதான  தர்மசேகரம் வசீகரன் என்பவர்  .மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறங்கியவர் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்றைய தினம் வீட்டில் மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறங்கச் சென்றுள்ளார். மாலை தேநீர் வழங்குவதற்காக வீட்டில் இருந்தவர்கள் அவரை எழுப்பிய வேளை அசைவற்று கிடந்துள்ளார். அதனையடுத்து வீட்டார் அவரை யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள்...
அச்சுவேலியில் அயல் வீட்டுக்கு வந்த விருந்தினரை வாளால் வெட்டிய நபரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர். அச்சுவேலி மகிழடி வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீட்டுக்கு நேற்றைய தினம் சென்ற விருந்தினரை அயல் வீட்டில் வசிக்கும் நபர் திடீரென வீடு புகுந்து வாளால் வெட்டியுள்ளார். அதனையடுத்து வாள் வெட்டிற்கு இலக்கான நபரை வீட்டில் இருந்தோர் மீட்டு அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அதேவேளை சம்பவம் தொடர்பில்...
நடிகை அமலாபால் தற்போது தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவர் நடிக்கும் ஆடை என்கிற படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரே சர்ச்சை ஏற்படுத்தியது. மேலும் சமீபத்தில் நடிகர் விஷ்ணுவை இரண்டாவது திருமணம் செய்யப்போகிறார் என்கிற தகவல் பரவி, பின்னர் அது வதந்தி என விளக்கம் அளிக்கப்பட்டது. இதெல்லாம் ஒருபுறமிருக்க அமலா பால் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதில் அவர் சிகப்பு கலர் லுங்கி...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை (02-12-2018) இரவு இடம்பெற்றுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இருவருக்குமிடையிலான சந்திப்பு சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றபோதிலும் குறித்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் என்னவென்று வெளியாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா மகாரம்பைக்குளத்தில் நேற்றிரவு 8.30மணியளவில் இடம்பெற்ற குழு மோதலில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு இளைஞர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற கருத்து முரண்பாடு மோதலாக மாறியதில் கண்ணாடி போத்தல் போன்ற வெவ்வேறு பொருட்களினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இவ் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் 17,19,25 வயதுடைய மூன்று இளைஞர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை மகாறம்பைக்குளம்...
எனது தந்தை தமிழர் என்­பது குறித்து நான் பெரு­மைப்­ப­டு­கின்றேன் என குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த டி சில்வா தெரி­வித்­துள்ளார். இவ­ரது பூர்­வீகம் தொடர்பில் கேள்வி எழுப்பும் வகையில் மஹிந்த ராஜ­பக்ஷவின் பொது­ஜன பெர­முன கட்­சியின் உறுப்­பி­னரான ஓய்வு பெற்ற மேஜருமான அஜித் பிர­சன்ன கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். அதற்கு பதி­ல­ளிக்கும் வகை­யி­லேயே நிஷாந்த டி சில்வா இதனைக் குறிப்­பிட்­டுள்ளார். “எனது தந்தை, எனது தாத்தா என எனது பரம்­ப­ரையே இந்த...
கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைகள் இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 6 இலட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர், இவர்களில் 4 இலட்சத்து 22 ஆயிரத்து 850 பேர் பாடசாலை மூலம் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். பரீட்சைகளுக்காக நாடளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 661 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன்...
  இலங்கையின் அரச அதிபர் மைத்திரிபாலசிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று மாலை அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பான முக்கிய சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமாகிய இரா சம்பந்தன் தலைமையில் ஜனாதிபதியைச் சந்தித்தனர். ஜனாதிபதியுடனான சந்திப்பில் முக்கிய விடயமாக அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகக் கூட்டமைப்பால் வலியுறுத்தப்பட்டது. இதன்போது ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன, இதற்கான பொறிமுறை பற்றி...