காதுகளில் ஏற்படும் கடுமையான வலி போன்ற பிரச்சனைகளுக்கு காதுகளை தாக்கும் தொற்றுக் கிருமிகள் தான் முக்கிய காரணமாகும். அப்படி ஏற்படும் காதின் தொற்றுக் கிருமிகளை அழித்து வலியை குறைப்பதற்குஇயற்கையில் உள்ளது ஒரு அற்புத வழியைப் பற்றி பார்க்கலாம். தேவையான பொருட்கள் ஆலிவ் ஆயில் பூண்டு சாறு பயன்படுத்தும் முறை ஒரு துளி ஆலிவ் ஆயில் மற்றும் 2 துளிகள் பூண்டு சாற்றினை ஒன்றாக கலந்து, இயர் ட்ராப்பர் பயன்படுத்தி காதுகளில் விட வேண்டும். ...
ஜோதிடம் படி வெள்ளி என்பது வியாழன் மற்றும் சந்திரன் கோள்களை குறிக்கிறது. இத்தகைய வெள்ளி உலோகத்தால் ஆன மோதிரத்தை அணிந்துக் கொள்பவர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம், அழகு, செல்வம் மற்றும் மகிழ்ச்சி அனைத்தும் கைகூடி வரும் என்று சொல்கிறது. வெள்ளி மோதிரம் அணிவதால் ஏற்படும் பலன்கள் வீட்டில் வெள்ளி பொருட்களால் அலங்கரிக்கும் போது நமது வீட்டில் மற்றும் வாழ்க்கையில் நேர்மறை எண்ணங்களை அதிகமாக்கும். வெள்ளி மோதிரத்தை நமது உடலில் அணியும் போது, நம்...
தினமும் காலையில் எழுந்து பற்கள் விலக்கும் பலரும் பற்களின் முன்புறத்தில் இருக்கும் கரையை நீக்குவதில் மட்டும் அக்கறை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் பற்களின் பின்புறம் உள்ள மஞ்சள் கறைகள் நமது வாயின் ஆரோக்கியத்தை முற்றிலும் பாதித்து விடுகிறது. எனவே பற்களின் பின்புறம் இருக்கும் மஞ்சள் கறைகளைப் போக்குவதற்கு சூப்பரான டிப்ஸ் பற்றி பார்ப்போம். கல் உப்பு தினமும் டூத் பேஸ்ட்டில் சிறிதளவு உப்பு சேர்த்து 2 முறை பற்களை துலக்கினால் பற்களில் உள்ள மஞ்சள்...
ஜப்பானில் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக காணப்படும் பகுதியொன்றிலிருந்து ஆறு சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். ஜப்பானின் தென்மேற்கு பகுதியிலுள்ள பண்ணை வீடொன்றிலிருந்து  ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உட்பட ஆறு பேரின் உடல்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அருகிலுள்ள ஆற்றிலிருந்து மற்றுமொரு உடலை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெண்ணொருவரின் உடலை பண்ணை வீட்டிற்கு வெளியிலிருந்து மீட்டோம்,இளம் பெண் உட்பட ஐவரின் உடல்களை உள்ளேயிருந்து மீட்டோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட வீட்டில் வசித்தவர்கள் தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்காததை...
நியூசிலாந்தின் தீவு ஒன்றில் திமிங்கிலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது. நேற்று அதிகாலை மொத்தமாக 145 திமிங்கிலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது. தீவானது தனித்த தீவாக காணப்படுவதுடன் குறித்த பகுதியில் 20 திமிங்கிலங்கள் இறந்து கரை ஒதுங்கிய நிலையில் சில மணி நேரத்தில் 145 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியது. இதில் சில உயிருக்கு போராடிய நிலையில் கரை ஒதுங்கி பின் இறந்துள்ளது. இதுவரையிலும் திமிங்கிலங்கள்  இறந்ததற்கான காரணம் கண்டறியப்பட்வில்லை. இதற்கு பின்வரும் விஷயங்கள் காரணங்களாக இருக்க வாய்ப்புள்ளது. 1. சுற்றுசூழல் மாற்றம் 2. கடலில்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களை மதித்து சபாநாயகர் செயற்பட்டிருந்தால் பாராளுமன்றத்திற்குள் பாரிய மோதல்கள் இடம்பெற்றிருக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். மேலும் நாட்டில் முத்துறைகளும் சுயாதீனமாக செயற்பட வேண்டும் ஒரு துறை பிறிதொரு துறையின் விவகாரங்களில் தலையிடக் கூடாது. ஆனால் தற்போது சட்டத்துறைக்கும் நிறைவேற்று துறைக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள்  காணப்படுகின்றது. இம் முரண்பாடுகளை சபாநாயகரே தீவிரப்படுத்தினார். உயர்நீதிமன்றம் தற்காலிக் தடையத்தரவை பிறப்பித்துள்ள தருணத்தில் பாராளுமன்றத்தில் உயர்நீதிமன்றில் வழக்கில்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொலை சதி முயற்சிகளுக்கும் தனக்கும் தொடர்புள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவதளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா  இன்று பாராளுமன்றத்தில் கடுமையாக நிராகரித்துள்ளார் சிறிசேனவை கொலை செய்வதற்கான சதி முயற்சிகள் இடம்பெறுகின்றன என்ற தகவலை வெளியிட்ட நாமல்குமார ஒரு புலனாய்வு உத்தியோகத்தர் என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா ஜனாதிபதி அவரிடமிருந்தே தகவல்களை பெறுகின்றார் எனவும் தெரிவித்துள்ளார் நாமல் குமார தற்போது பொதுஜனபெரமுனவில் இணைந்து தேர்தலில் போட்டியிட முயல்கின்றார் எனவும்  சரத்பொன்சேகா...
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உள்ள எரிபொருள் நிலையத்தில் பணியாற்றும் ஒருவரிடமிருந்து போதைப்பொருளை வவுனியா பொலிஸார் மீட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்புனராக பணியாற்றும் ஒருவரை திடீர் பரிசோதனை செய்த பொலிஸார் அவரிடம் இருந்து சிறிய அளவில் ஹெரோயின் போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து கடமையில் இருந்த மேலும் சிலரையும் சோதனைக்குட்படுத்திய பொலிஸார் போதைப்பொருளை வைத்திருந்த நபரைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு வாகரை மற்றும் மாவடிமுன்மாரி ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களில் புதிதாக நேற்று நாட்டப்பட்ட நினைவுக் கற்களை குறித்த இடங்களுக்குச் சென்ற வாகரை மற்றும் கொக்கட்டிச் சோலை பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கமைய அவைகளை நேற்று திங்கட்கிழமை (26) மாலை  பிடுங்கி எடுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர் கடந்த காலத்தில் அரசாங்கம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபிரதேசங்களை கைப்பற்றியதையடுத்து; விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த  மாவீரர்களின் துயிலுமில்லங்களை படையினர் அழித்ததுடன் அப்பகுதில் முகாம்களை அமைத்துவந்தனர். இந்நிலையில் நல்லாட்சி...
போராட்ட வரலாற்றில் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்த தமிழினம் அதன் ஒரு பிரிவாக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்திலிருந்து இன்று வரைக்கும் 35 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். இந்தப் போராளிகளினுடைய தியாகம் வீண் போகாத வகையில் தமிழ் மக்களாகிய நாம் செயற்படுகின்றோமா? அல்லது தமிழ் அரசியல் தலைமைகள் செயற்படுகின்றனவா? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ள நிலையில் இந்த மாவீர்களுடைய தியாகங்கள் மதிக்கப்படவேண்டியவை. இதனை...