இன்றை பாராளுமன்ற அமர்வினை புறக்கணித்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு சற்று முன்னர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
அந்தக் கடிதத்தில், கடந்த 14,15,16,19 மற்றும் 21,23 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பாராளுமன்ற செயற்பாடுகள் அரசியலமைப்பிற்கும், பாராளுமன்ற நிலையியல் கட்டளைக்கு ஏற்பவும் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன் அன்றைய தினங்களில் வெளியிடப்பட்ட ஹன்சாட் அறிக்கைகளை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், ஆகவே அந்த ஹன்சாட்...
“சில ஊடகங்கள் அரசாங்கம், ஆளுந்தரப்பு அமைச்சர் , பிரதமர் என்று சிலரை அடையாளப்படுத்துவது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயலாக அமைந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அங்கு கருத்து வெளியிட்ட ரவூப் ஹக்கீம்,
“பாராளுமன்றம் கலைக்கப்பட்டு இந் நாட்டில் அரசாங்கம் என்று ஒன்றில்லை என்று சபாநாயகரால் அறிவிக்கப்பட்டு பாராளுமன்ற அமர்வு பதிவு அறிக்கையான ஹன்சார்ட் அறிக்கையிலும் பதிவாகியுள்ள...
(மன்னார் நகர் நிருபர்)
மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் அவதானிக்க இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜார்ன் ரோட் (Jorn Rohde)மன்னாரிற்கு வருகை தந்து மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரடியாக அவதானித்ததோடு,அகழ்வு பணிகள் தொடர்பில் பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸவுடன் கலந்துடையாடினார்.
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள மனித புதை குழி அகழ்வு பணியானது கடந்த 12 ஆம் திகதி இடை நிறுத்தப்பட்டது. பலத்த...
கண்டி மகியங்கனை பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலைக்கு பெண்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளார்.
மகியங்கனை பிபிலை வீதியில் மாப்பாக்கடை என்ற பகுதியில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர் திஸ்ஸமகாராம பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்தவரது கவனயீனம் காரணமாகவே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில்...
பாராளுமன்ற அமர்வு சற்று முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆளும் கட்சியினர் இன்றைய பாராளுமன்ற அமர்வினை புறக்கணித்துள்ளனர்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், பிங்க் தமிழில் ரீமேக் ஆவதை படத்தின் இந்தி தயாரிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கியவர் எச்.வினோத். இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் அஜித்தை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.
இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் திரைப்படத்தின்...
ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர் வேடத்தில் நடிக்கும் போது நமக்கு பொறுப்பு தேவை, அதிலும் ஜெயலலிதா வேடம் சவாலானது என்று நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.
பிரியதர்ஷினி இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க தயாராகி வருகிறார் நித்யா மேனன். அவர் அளித்த பேட்டி:-
கேள்வி:- மலையாள படங்களில் காட்டும் கவனத்தை மற்ற மொழிகளில் காட்டுவதில்லையே?
பதில்:- அப்படி இல்லை. எனக்கு வரும் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு கதையும் என்னுடைய...
திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரவிபாஞ்சான் பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் வளர்ப்புத் தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
தம்பலகாமம் - பரவிப்பாஞ்சான் பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் எம். திலகரட்ன (52 வயது), 31, 26 மற்றும் 21 வயது உடைய ஏனையவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுமி வீட்டில்...
பொறுப்பு வாய்ந்த சிரேஸ்ட அதிகாரி என்றவகையில் நான் எந்த குற்றத்தையும் வேண்டுமென்று செய்யவில்லை என தெரிவித்துள்ள முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜயகுணவர்த்தன நீதிமன்றத்தின் முன்னாள் அனைத்து உண்மைகளையும் சொல்வதற்கு தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்
சிஐடியினரால் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகமொன்றிற்கு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நான் எனது பதவிக்காலத்தில் எந்த சட்டவிரோதமான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை வேண்டுமென்றே எந்த தவறையும் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக எனக்கு தெரிந்த அனைத்தையும்...
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் பொதுநலவாய அமைப்பின் விசேட பிரதிநிதியொருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கைக்கு வருகை தரும் அவர் ஜனாதிபதி உட்பட அரசியல் கட்சியின் தலைவர்களை சந்தித்து உரையாடவுள்ளார். அத்துடன் அரசியல் நெருக்கடிகளை தீர்த்து வைக்கும் இராஜதந்திர முயற்சிகளிலும் ஈடுபடுவார் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.