அச்சுவேலி தெற்கில் வீடுகளுக்குள் வெள்ள நீர் பாதிப்பு பற்றி நீர்ப்பாசனத்திணைக்களத்தின் பொறியிலாளரை பாதிப்புக்கள் உணரப்பட்ட இடங்களுக்கு அழைத்துச்சென்று எதிர்காலத்திற்கான முன்னாயத்தங்கள் பற்றி ஆராய்ந்ததாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.அச்சுவேலி பகுதியின் கரதடி வீதி மற்றும் யாழ் - பருத்தித்துறை வீதியின் ஒருமருங்கில் உள்ள முழங்கன் இந்து மயானத்தினை அண்மித்த பகுதிகளில் வெள்ளநீர்ப்பாதிப்பு உள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கைகக்கு இடையூறுகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் இவ்விடயம் வலிகாமம் கிழக்கு...
யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் பெருமளவு இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் குவிப்பு
Thinappuyal News -
யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று காலை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவருடன் இணைந்து பெருந்திரளானவர்கள் மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல சூழலில் பெருமளவு இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை மாவீரர் தினம் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், புலம்பெயர் நாடுகளிலும் இன்று உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டு...
இன்றைய பாராளுமன்ற அமர்வின்போது சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை முன்வைக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
இன்றைய பாராளுமன்ற அமர்வானது பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.
இந் நிலையிலேயே நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக் காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளமையை அடிப்படையாக கொண்டு குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் இன்றைய பாராளுமன்ற விவாதத்தின் நிகழ்ச்சி நிரல் குறித்து கலந்துரையாடும் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
இன்று இடம்பெறவிருக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் பெரும்பாலும் கலந்து கொள்ள மாட்டார்கள் என வாசுதேவ நானயக்கார தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய விடயங்களை முன்மொழிவதா அல்லது ஆளுந்தரப்பை ஏற்பதா போன்ற இரு விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக வாசு தேவ நானயக்கார மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில் பிரதமர்...
பிரதமர் அலுவலகத்தினை நாமல் ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி நடவடிக்கைகளிற்கு பயன்படுத்துகின்றார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.
மகிந்தராஜபக்சவின் அரசாங்கம் என தெரிவிக்கப்படுவதில் எந்த பதவியையும் வகிக்காத நாமல் ராஜபக்ச பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தினை அரசியல் நடவடிக்கைகளிற்காக பயன்படுத்தி வருகின்றார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.
நாமல்ராஜபக்ச இந்த அலுவலகத்தில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பிரதேச உறுப்பினர்களை சந்தித்து வருகின்றார் எனவும் கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.
நவம்பர் 25 ம்...
ஜனநாயகத்திற்கு எதிரான அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு இன்னமும் பிறக்காத தலைமுறைக்காக ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியது எனது கடமை என சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சரியான தூரநோக்கு ஒழுக்கம் அர்ப்பணிப்பு சட்டத்தின் ஆட்சி ஆகியனவே அவசியமாக உள்ளன என குறிப்பிட்டுள்ள சபாநாயகர் சரியான நபர்கள் சரியான இடத்தில் இருக்கவேண்டியதும் அவசியமாகவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பாராளுமன்றத்தில் நான்...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்வரும் 4ஆம் திகதி சிறப்பு மாநாடு ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்திலேயே இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இச் சிறப்பு மாநாடானது கொழும்பிலுள்ள சுகததாஸ உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பாகவும் குறித்த மாநாட்டில் விஷேட உரை ஒன்றை ஆற்ற ஜனாதிபதி...
மட்டக்களப்பில் திருமலை வீதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.கெப் ரக வாகனம் ஒன்று மின்கம்பத்துடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது .விபத்துக்குள்ளானவர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
சினிமாவை தாண்டி நடிகைகள் எது செய்தாலும் வைரல் ஆகிவிடும். அவர்கள் ஒரு கடை திறப்பு விழாவுக்கு சென்றாலும் சமூக வலைதளங்களில் பரவிடும்.
அதுவும் இப்போதெல்லாம் பிரபலங்களே தாங்கள் செய்யும் வேலைகளை உடனுக்குடன் டுவிட்டர், இன்ஸ்டா போன்றவற்றில் பதிவு செய்து விடுகிறார்கள்.
அப்படி அண்மையில் நடிகை நிவேதா தாமஸ் ஒரு கல்யாண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு தனது தம்பியுடன் செருப்பை எல்லாம் கழற்றிவிட்டு பிரபுதேவாவின் குலேபா பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார். அதை...
5 நிமிட மேடையில் பாடுவதற்காக 12 மணி நேரம் காத்திருக்க வைப்பார்கள் – பூஜா வைத்தியநாதன்
Thinappuyal News -
ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திவரும் நிகழ்ச்சி சூப்பர்சிங்கர். பல வருடங்களாக நடந்துவரும் நிகழ்ச்சி பல திறமையான பாடகர்கள் அடையாளம் கண்டு உலகறியசெய்தது என்று கூட சொல்லலாம்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பல வருடங்களுக்கு முன்பு பங்கேற்ற பூஜா வைத்தியநாதன் இந்த நிகழ்ச்சியை நேரடியாக தாக்கி பேசியுள்ளார்.
5 நிமிட மேடையில் பாடுவதற்காக 12 மணி நேரம் காத்திருக்க வைப்பார்கள் என அவர் கூறியுள்ளார். அவரிடம் ரசிகர் ஒருவர் எப்போது மீண்டும்...