தமிழ் மக்­க­ளது உரி­மை­க­ளுக்­காக போராடி உயிர் நீத்­த­வர்­களை நினைவு கூரும் மாவீரர் தினம் இன்று வடக்கு, கிழக்கு மற்றும் புலம்­பெயர் தேசங்­களில் உணர்­வெ­ழுச்­சி­யுடன் அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது. ஒவ்­வொரு வரு­டமும் கார்த்­திகை மாதம் 27ஆம் திகதி தமிழ் மக்­க­ளது உரி­மை­களை வென்­றெ­டுக்க போராடி உயிர் நீத்த மாவீ­ரர்­களை நினைவு­ கூரும் நிகழ்­வா­னது இலங்­கையில் தமிழர் தாயக பிர­தே­சங்­க­ளிலும், புலம்­பெயர் நாடு­க­ளிலும் மிகவும் உணர்­வெ­ழுச்­சி­யுடன் அனுஷ்­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது. அந்­த­வ­கையில் இன்­றைய தினம் தமிழ் தாயக பிர­தே­சங்­க­ளான...
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் வர்த்தக மற்றும் வாணிப்பத்துறை அமைச்சுப் பொறுப்பை தான் கேட்டிருப்பதாகவும், அதனை வழங்கத் இணக்கம் தெரிவித்துள்ளதால் நாளைய தினம் காலை அவருடன் இணைந்துகொள்ளவுள்ளதாவும் ஈபிஆர்எல்எப் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஐ.பி.சி தமிழுக்குத் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்துகொள்வதற்கு பேரம்பேசி வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்...
பாகம் - 01 2005 காலப்பகுதியில் அது மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்று போரை துவங்கவில்லை. ஆயினும் போருக்கான ஆயுத்தங்கள் படையினரால் மேற்கொள்ளப்பட்டு கொண்டுதான் இருந்தன என புலனாய்வு தகவல்கள் கிடைத்து இருந்தன. இராணுவத்துக்கான போர் பயிற்சிகளிலும் ஆயுத கொள்வனவுகளிலும் ஸ்ரீலங்கா தீவிரமாக இறங்கியிருப்பது தெளிவாக தெரிந்து இருந்தது. மஹிந்த அரசு பாரிய போர் ஒத்திகை ஒன்றை தொடங்க போகிறது என்பது உறுதியாக தெரிந்து இருந்தது. அதற்கான முன்னேற்பாடுகள் மட்டுமல்ல போர்...
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் 2018 மாவீரர் தினத்திற்காக  தயார் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இடம்பெற்ற போராட்டத்தில்  உயிரிழந்த விடுதலைப்புலிகளின்  உறுப்பினர்களை நினைவு கூர்ந்து வருடந்தோறும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2009 யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் 2016 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் அனுஸ்டிக்கப்பட்டது.  அதன் தொடர்ச்சியாக 2018 மாவீரர் நாள் ஏற்பாடுகள்...
பாராளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வழியுறுத்தி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பத்து இலட்சம் கையொப்பங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் வலப்பனை தேர்தல் பிரதேசமான நுவரெலியா, இராகலை நகரில் நேற்று முன்னெடுக்கப்பட்டது. இதன் போது பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவின் உருவ பொம்மைக்கும் தீ மூட்டப்பட்டது. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்காவின் தலைமையில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் இராகலை நகர பௌத்த ஆலயத்துக்கு அருகில் ஒன்று...
அட்லீ படங்கள் எடுத்துக் கொண்டால் ஒரு தனி இயக்கமாக இருக்கும். மாஸ்+கிளாஸ் அதே சமயம் ரசிகர்களை கவரும் வண்ணம் நிறைய விஷயங்களை வைத்து படம் இயக்குவார். தெறி, மெர்சல் என இரண்டு வெற்றி படங்களை கொடுத்த இவர் அடுத்து விஜய்யை வைத்து எப்படிபட்ட படம் கொடுக்க போகிறார் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. AGS நிறுவனம் அடுத்தடுத்து படத்தில் இணையும் பிரபலங்கள் குறித்த விவரங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அண்மையில்...
கட்டுகஸ்தோட்டை நகரில் மாத்தளை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 90 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டுகஸ்தோட்டை நகரில் பிரதான பாதையைக் கடக்க முயற்சிக்கும் போது எதிரே வந்துள்ள தனியார் பஸ் ஒன்றில் மோதியதில் கடும் காயங்களுக்கு உள்ளாகிய குறித்த முதியவர் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் கட்டுகஸ்தோட்டை யமுனா மாவத்தையைச் சேர்ந்த முத்துசாமி சிதம்பரம் என்ற 90...
நாட்டில் பல்வேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற கொலைச் சம்பவங்களில் பெண் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகம், இச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவரை இதுவரை கைதுசெய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதன்படி நேற்று மாலை கல்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலிஹிந்தாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலின்போது 46 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் குச்சவெளி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 55 வயதுடைய நபர் ஒருவரும், பதுளை பொலிஸ்...
எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பாக மேலதிக வகுப்புகளை நடத்த தடை விதித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே மேற்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரன்கந்த பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லம் ஒன்றைச் சேர்ந்த  14 வயதுடைய  சிறுவன் ஒருவன் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது. மீன் பிடிப்பதற்காக மேற்படி கிணற்றுக்கு அருகே சென்றுள்ளதுடன் நீரிழ் மூழ்கும்போது அவரை காப்பாற்ற  அவரது நண்பர் முயற்சித்த்தாகவும் தெரிவிக்கப்படுகிறது. வலப்பனை  நீதி மன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு  ஒன்றின் படி இச் சிறுவன் பூஜாபிட்டிய மொரண்கந்த பிரதேசத்தில் தனியார் நிறுவனம்...