பார்வையாளர் கலரி, சபாநாயகர் பார்வையாளர் கூடம் என்பன நாளைய பாராளுமன்ற அமர்வின்போதும் மூடப்படும் என படைக்கல சேவிதர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை, மற்றும் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது பார்வையாளர் கலரி மூடப்பட்டிருந்தது.
இந் நிலையிலேயே நாளைய தினம் பிற்பகல் 1.30 மணியளவில் பாராளுமன்ற அமர்வு கூடும்போது பார்வையாளர் கலரி, சபாநாயகர் பார்வையாளர் கூடம் என்பன மூடியே காணப்படும் என படைக்கல சேவிதர்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி இரு வாகனங்களையும் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை
Thinappuyal News -
நாகர்கோவில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வைக்கப்பட்டிருந்த இரண்டு கன்டர் ரக வாகனங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கிணங்க பொலிஸ் அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே மேற்படி வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கைப்பற்றப்பட்ட இரு வாகனங்களையும் நீதிமன்றில்...
இவ்வருடத்திற்காள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை நாடாளவிய ரீதியில் 6 இலட்சத்து 50 ஆயிரத்து 641 பரீட்சாத்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இப்பரீட்சையானது 4661 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளது.
பரீட்சைக்காக 541 இணைப்பு நிலையங்களும் 33 பிராந்திய நிலையங்களாகக் கொண்டு பரீட்சை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் அனைத்து பாடசாலைகளும் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் எதிர்வரம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி திறக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் யானை தாக்கியதில் சிறுமி ஒருவர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.
ஓமந்தை விளக்குவைத்த குளம் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
குறித்த சிறுமி வீதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வீதியில் நின்றிருந்த யானை தாக்கியுள்ளது. இதனால் சைக்கிளில் இருந்து கிழே விழுந்துள்ளார்.
கீழே விழுந்தமையால் சிறுமி சிறுகாயங்களிற்கு உள்ளாகியுள்ளார்.பின்னர் அயலவர்கள் வந்ததும் யானை அங்கிருந்து சென்றுள்ளது. விளக்குவைத்தகுளம் பகுதியை சேர்ந்த லக்சிகா வயது 11...
அமெரிக்காவில் கடுமையாக வீசி வரும் பனிப்புயல் காரணமாக, சுமார் 1600 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அமெரிக்காவில் நேற்று முதல் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் சாலைகளில் பனி சூழ்ந்து காணப்படுவதால் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக வாகனங்களை இயக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
மேலும், மத்திய மேற்கு மாநிலங்களில் பனிப்புயல் காரணமாக பனிப்படலம்...
வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் வீட்டின் முன் காணப்பட்ட பற்றைகளைச் சுத்தம் செய்த நான்கு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64 ஆவது பிறந்தநாள் இன்று தமிழர் வாழும் உலகமெங்கும் கொண்டாடப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் இன்று பிரபாகரனின் சொந்த இடமான வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்துக்கு முன்பாக உள்ள பற்றைகளை வெட்டி துப்பரவுப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே குறித்த நான்கு இளைஞர்களும் வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதேவேளைப் பிரபாகரனின்...
தற்போது சிவகார்த்திகேயன் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். அதில் அதிக எதிர்பார்ப்பில் உள்ள படம் சிவகார்திகேயனோடு நயன்தாரா மீண்டும் ஜோடி சேரும் ராஜேஷ் படம் தான்.
ராஜேஷ் எப்போதும் காமெடியாக படம் எடுப்பவர் என்பதால் இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என ரசிகர்கள் அனைவரும் தெரிய ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில் ரஜினி நடித்து சூப்பர்ஹிட் ஆன மன்னன் படத்தின் ரீமேக் தான் இந்த படம் என்று தகவல்...
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாட முயன்றார் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம் விடுவிக்கப்பட்டார்.
வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பிறந்த நாளை கொண்டாட முயன்றார் என்ற குற்றச்சாட்டில் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் , இன்று காலை கைது செய்யப்பட்டார்.
அதன் போது அவர் வசம் இருந்த பிறந்தநாள் கேக் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்த பொலிஸார் , அவரை கைது செய்து பொலிஸ் நிலையம்...
ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக அளவில் சர்ச்சை ஏற்படுத்தியவர். அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு சிம்புவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என அப்போதே தகவல்கள் வந்தது. ஆனால் அது இன்னமும் உறுதி ஆகாமல் தான் உள்ளது.
இந்நிலையில் தற்போது மஹத்-ஐஸ்வர்யா ஜோடியாக நடிக்கும் ஒரு படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.
அதில் மஹத் வடசென்னை வாலிபராகவும், ஐஸ்வர்யா பணக்கார வீட்டு பெண் போலவும் நடிக்கிறார்களாம்.