தமிழ் சினிமாவில் 80களில் இருந்த பிரபலங்களில் ஒருசிலரை மறக்கவே முடியாது. அதில் மிகவும் முக்கியமானவர் மறைந்த இயக்குனர் கே. பாலசந்தர். இன்றைய சினிமாவில் முக்கிய நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல் உயர ஒரு பெரிய காரணமாக இருந்தவர் பாலசந்தர். இவரது மனைவி திருமதி. ராஜம் பாலசந்தர் இன்று அதிகாலை உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இவரின் மரண செய்தி கேட்டு பிரபலங்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி, தன்னுடைய மகள் ஷிவாவுடன் தமிழில் கொஞ்சி பேசும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான மகேந்திர சிங் டோனிக்கு அவுஸ்திரேலியா தொடரில் இருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூரில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் டோனி, அவ்வப்போது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பேசி வருகிறார். https://twitter.com/ChennaiIPL/status/1066333957283704833 குடும்பத்துடன் நேரம் செலவிடும் பொழுதெல்லாம், மகளுடன்...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் மைதானத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுமாறு தமிழக இளைஞர்கள் பதாகைகளை ஏந்தி கோரிக்கை வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது கஜா புயலாக மாறி, தமிழகத்தின் டெல்டா மாவட்ட பகுதிகள் அனைத்தையும் சிதைத்து போட்டது. இதில் பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வீடு, தோட்டம் மற்றும் வளர்ப்பு உயிரினங்களை இழந்து பெரிதும்...
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தற்போது குழந்தை பெற்றெடுத்துள்ளதால் ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் தனது பிரசவ அனுபவத்தை பகிர்ந்துள்ளார். கர்ப்ப காலத்திலும் நான் உடல் தகுதியை பராமரித்தேன். அப்போதும் டென்னிஸ் விளையாடினேன். வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் யோகா பயிற்சி மேற்கொண்டேன். தினமும் மூன்று முதல் நான்கு கிலோமீட்டர் தூரம் நடைப்பயிற்சி மேற்கொண்டேன். உற்சாகமாக இருக்க வேண்டும் என்பதற்காக அத்தகைய பயிற்சிகளை செய்தேன். நான் பெண்கள் அனைவருக்கும் ஒரு விஷயத்தை...
தன்னையும் நல்ல ஃபார்மில் இருக்கும்போதே அணியில் சேர்க்காமல் அமர வைத்தார்கள் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண டி20 தொடரின் அரையிறுதிப் போட்டியில், இரண்டு அரைசதங்கள் விளாசிய மிதாலிராஜ் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து, மிதாலி ராஜை அணியில் இருந்து நீக்கியது கடும்...
ஜியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 6 புரோ, அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளிலேயே 6 லட்சம் போன்கள் விற்பனையாகியுள்ளது. சீன நிறுவனமான ஜியோமி மொபைல் போன் விற்பனையில் கோலோச்சி வருகிறது. குறைந்த விலையில் நல்ல தரத்துடன் இந்நிறுவனத்தின் போன்கள் விற்பனை செய்யப்படுவதால், வாடிக்கையாளர்களிடம் ரெட்மி போன்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. இந்நிலையில், ஜியோமி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 6 புரோ போனை கடந்த 22ஆம் திகதி அறிமுகம் செய்தது....
இயற்கை நிகழ்வான மாதவிடாய் சுழற்சியானது பெண்களுக்கு 28-35 நாட்களுக்குள் மாதந்தோறும் தவறாமல் ஏற்படுகிறது. ஆனால் இந்த மாதவிடாய் சுழற்சியானது, 40 நாட்களுக்கு மேல் வராமல் இருந்தால், அவர்களின் உடல் நிலையானது ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தமாகும். எனவே தாமதமான மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்கள் உடனே மருத்துவரை பார்த்து அதற்கான ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது. மாதவிடாய் தாமதம் அடைவதற்கு காரணம் பெண்களின் அதிகமான மன அழுத்தம் காரணமாக, அவர்களின் உடலில்...
ஹைப்பர் தைராய்டு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிக அளவில் எடையைக் குறைத்து, சீரற்ற இதயத் துடிப்பு மற்றும் அதிகமாக வியர்ப்பது போன்ற பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். புற்றுநோய் நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோய் / லிம்போமா மிகவும் அரிதாக இரவு நேரத்தில் மிகையான வியர்வையை உண்டாக்கும்.அதோடு வீங்கிய நிணநீர் முடிச்சுகள், எடை குறைவு, நெஞ்சு வலி மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவையும் இதர அறிகுறிகளாகும். ட்ரைமெத்தைலேமினுரியா ட்ரைமெத்தைலேமினுரியா என்பது ஓர் மரபணு கோளாறு. இதன் காரணமாக...
கடந்த மூன்றரை ஆண்டுகளில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவது வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஆணைக்குழு ஒன்றை நிறுவ உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இவ்வாறான ஓர் ஆணைக்குழு அமைக்கப்படுவது வரவேற்கப்பட வேண்டியது என ஐக்கிய...
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் சிறுத்தையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீதியின் ஓரத்தில் இன்று காலை 7 மணியளவில் சுமார் இரண்டடி நீளமான சிறுத்தையின் சடலம் ஒன்று பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிறுத்தை வாகனம் ஒன்றில் மோதியமையினால் உயிரிழந்துள்ளதா அல்லது எவரேனும் கொலை செய்தார்களா என்பது தொடர்பாக திம்புள்ள பத்தனை பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து...