பாணந்­துறை தெற்கு பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட பிர­தான வீதியில் அமைந்­துள்ள மூன்று கடைகள் நேற்று திடீர் தீ கார­ண­மாக முற்­றாக எரிந்து நாச­மா­கி­யுள்­ளன. நேற்று இரவு 8.30 மணி­ய­ளவில் ஏற்­பட்ட இந்த திடீர் தீயினால் இரும்­புக்­கடை (ஹார்ட்­வெயார்) ஒன்றும் இரு துணிக்­க­டை­களும் இவ்­வாறு தீக்­கி­ரை­யா­கி­யுள்­ளன. குறித்த தீ பரவல் தொடர்பில் தெற்கு களுத்­துறை பொலிஸா­ருக்கு தகவல் கிடைத்­ததும் உட­ன­டி­யாக களுத்­துறை, ஹொரணை மற்றும் மொரட்­டுவை ஆகிய பகு­தி­களில் இருந்து தீய­ணைப்பு படை­யினர் வர­வ­ழைக்­கப்­பட்­ட­தா­கவும்,...
ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன  பொலிஸ் உயர் அதி­கா­ரி­களை இன்று அவ­ச­ர­மாக சந்­திக்­க­வுள்ளார். அதற்­காக  பொலிஸ்மா அதிபர், அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதி­பர்கள் மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதி­பர்­களை இன்று நண்­பகல் 12.00 மணிக்கு கோட்டை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஆஜ­ரா­கு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளார். இந்த அவ­சர சந்­திப்­புக்­கான காரணம்,  எந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பர்கள், பிரதிப் பொலிஸ் மா அதி­பர்­க­ளுக்கும்  தெரி­விக்­கப்­ப­டாதே இந்த அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. எவ்­வா­றா­யினும் நாட்டில் நிலவும் தற்­போ­தைய...
தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும், தொழில் வழிகாட்டல் ஆலோசனை நிலையமும், வவுனியா பிரதேச செயலகமும் இணைந்து மாவீரர் தினமான நவம்பர் 27ஆம் திகதி தொழிற்சந்தை ஒன்றை நடத்தவுள்ளமை குறித்து பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். நவம்பர் 27ஆம் திகதி வவுனியா, குருமன்காடு, கலைமகள் மைதானத்தில் காலை 9 மணிமுதல் மாலை 2 மணிவரை இத் தொழிற் சந்தை இடம்பெறவுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி மரணித்த மாவீரர்கள் நினைவு கூரும் நவம்பர் 27ஆம்...
புத்தளத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்தக் கோரி, யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கிளின் புத்தளம் உள்ளிட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புத்தளத்தில் குப்பை கொட்டப்படுவதற்கு எதிராகக் கடந்த 50 நாட்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், குறித்த மக்களுக்கு...
நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக முன்னெடுக்கப்பட்டுவரும் பிரச்சாரங்களின் உண்மைத் தன்மை தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று முற்பகல் சுகாதார அமைச்சுக்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். அங்கு சுகாதார அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி, இலவச சுகாதார சேவை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பலவீனமடைவதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் நாட்டின் பொதுமக்களுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை பலமாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஒரு...
தமிழ் மக்களைத் துன்புறுத்தி, கொன்று குவித்து, உடைமைகளை இல்லாதாக்கிய இராணுவத்தினர் தற்போது குடியிருக்கக் காணிகள் கேட்பது விந்தையானது என முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள மின்னஞ்சலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி வடக்கு மக்களின் வாழ்வை மேம்படுத்தும் என்றபோதிலும் அரசியல் ரீதியாக அவர்களை இரண்டாந்தர பிரஜைகளாக கருத வழி செய்யும் என முன்னாள் முதலமைச்சர் கூறியுள்ளார். தமிழர்களின்...
புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதன் பின்னர் பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வருகைதராமையால் மக்கள் நாளாந்தம் பல்வேறுபட்ட இடர்பாடுகளுக்கு முகம் கொடுத்துவருவதால் இதற்கான சுமுகமான தீர்வைப்பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் வவுனியா மாவட்ட வர்த்தகசங்கப்பிரதிநிதிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.இன்றையதினம் வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்தின் பல்வேறு பொது அமைப்புகளையும் பொதுமக்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன் போதே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.கடந்த 60...
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை தேயிலை தொழிற்சாலை பகுதியில் லொறி ஒன்று மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டனிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற குறித்த லொறி தலவாக்கலை பகுதியில் மண்மேடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவர் பலத்த காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மழை காரணமாக வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் வேகத்தை...
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த 8 வான்கதவுகளில் 4 கதவுகள் 4 அடி உயரத்திலும் ஏனைய 4 கதவுகள் 2 அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தெதுரு ஓயாவின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் கலா ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. கலா ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையால் புத்தளம் - மன்னார் பிரதான...
வவுனியா குருமன்காட்டுப்பகுதியில் முச்சக்கரவண்டியில் பல ஆயுதங்களுடன் சென்ற நபரை நேற்றிரவு (23) 8.30 மணியளவில் வவுனியா போக்குவரத்து பொலிஸார் துரத்திப்பிடித்து கைது செய்துள்ளனர். வவுனியா குருமன்காட்டுப்பகுதியில் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த போது   ஒர் முச்சக்கரவண்டி அதிவேகமாக பயணித்தது. போக்குவரத்து பொலிஸார் முச்சக்கரவண்டியினை மறித்த போதிலும் நிற்காமல் சென்றுள்ளது. முச்சக்கரவண்டியினை பின் தொடர்ந்து துரத்திச் சென்ற பொலிஸார் வவுனியா நகரப்பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியினை மடக்கி பிடித்து முச்சக்கரவண்டியினை சோதனைக்குட்படுத்தினார்கள். இதன் போது பாரிய...